புதுச்சேரி பல்கலை.,யில் இணைய வழியில் இரண்டு இலவச புதிய பாடப்பிரிவுகள் தொடக்கம்!
புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் இணைய வழியில் இலவச இரண்டு புதிய பாடப்பிரிவுகள் தொடக்கம்!
புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் இந்தக் கல்வியாண்டு முதல் இணைய வழியிலான இலவச இரண்டு புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் சார்பில் நடத்தப்பட உள்ள இலவச வகுப்புகளான புகைப்பட இதழியல் மற்றும் ஊடகச் சட்டம் ஆகிய இரண்டு புதிய பாடப்பிரிவுகளில் புகைப்படத் துறை மற்றும் இதழியல் துறைகளில் ஆர்வம் உள்ளவர்கள் சேர்ந்து பயன்பெறலாம். வயது வரம்பு எதுவுமில்லை.
பத்தாம் வகுப்பு முடித்திருந்தால் போதும்... மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் அரசுப்பணி!
மாணவர்களின் வேலை வாய்ப்பு மற்றும் தனித் திறன்களை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள 15 வார காலப் புதிய படிப்பில் புகைப்பட இதழ்கள், ஊடகச் சட்டம் மற்றும் ஊடக அறநெறிகள் முதலான பல்வேறு தலைப்புகளில் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் முனைவர் ராதிகா கண்ணா மற்றும் முனைவர் அருள்செல்வன் ஆகியோர் வழிகாட்டுதலில் வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. சுற்றுலாத் துறையில் ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் பறவைகள், விலங்குகள் வாழும் அடர்ந்த காட்டுப் பகுதிகளுக்குச் சென்று இயற்கை அழகைப் படமெடுக்க விரும்புவர்களுக்குத் தேவையான அனைத்துத் திறன்களையும் தொழில் நுட்பம் சார்ந்து மேம்படுத்துகின்ற வகையில் புகைப்பட இதழியல் துறை படிப்பு பல்கலைக்கழகப் பேராசிரியர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியக் கலை, கலாச்சாரம் மற்றும் சமூக மாற்றத்திற்கான ஆவணப்படங்களை எடுக்க விரும்புவர்களுக்கும் சிறப்புப் பயிற்சிகளும் அளிக்கப்படவுள்ளன. இந்திய அரசியலமைப்பு மற்றும் ஊடகம் தொடர்பான சட்டங்கள், அறநெறிகள் போன்ற பல்வேறு பயனுள்ள பாடத்திட்டங்களும் ஊடகச் சட்டம் பாடப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன. இப்பாடப் பிரிவுகளில் சேர்ந்து பயில 1600க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் விருப்பங்களைத் தெரிவித்துள்ளனர். இம்மாதம் 31ஆம் தேதி வரை மாணவர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம். இது தொடர்பான மேலும் விவரங்களைப் பெற விரும்புவர்கள் பல்கலைக்கழக கல்வி பல்லுாடக ஆராய்ச்சி மையத்தை ( இ.எம்.ஆர்.சி) தொடர்பு கொள்ளலாம். புதிய பாடப்பிரிவுகளைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் குர்மீத் சிங் காணொலி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.
Sony Music Update: இதுதான் வலிமை படத்தின் முதல் பாடல்.. லிங்கை வெளியிட்ட படக்குழு!