PM Modi Speech: ஒரே தமிழ் வரியை 9 முறை பேசிய பிரதமர் மோடி: பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சுவாரசியம்!
Bharathidasan University Convocation 2024: தமிழில் உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி, எனது மாணவ குடும்பமே என்ற வார்த்தைகளை பேச்சினூடே 9 முறை பயன்படுத்தினார்.
பாரதிதாசன் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி 9 முறை ஒரு தமிழ் வரியைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தியது சுவாரசியத்தை ஏற்படுத்தியது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, ’’வணக்கம் எனது மாணவ குடும்பமே… மிக அழகிய மாநிலமான தமிழ்நாட்டில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 2024ஆம் ஆண்டில் நான் பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி இது.
பாரதிதாசன் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளும் முதல் பிரதமர் நான் என்பதில் பெருமைகொள்கிறேன். பண்டைய காலத்தில் காஞ்சி, மதுரை, கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய நகரங்கள் கல்வியில் சிறந்து விளங்கின.
புதியதோர் உலகம் செய்வோம் என்றார் பாரதிதாசன். நாம் கற்ற கல்வியும் அறிவியலும் வேளாண்மையை மேம்படுத்தி, விவசாயிகளுக்கு உதவ வேண்டும்’’ என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசும்போது, வணக்கம் எனது மாணவ குடும்பமே என்று தமிழில் உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி, எனது மாணவ குடும்பமே என்ற வார்த்தைகளை பேச்சினூடே 9 முறை பயன்படுத்தினார். இடையில், புதியதோர் உலகம் செய்வோம் என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் புகழ்பெற்ற வரிகளை மேற்கோள் காட்டினார். இறுதியாக மிக்க நன்றி என்று சொல்லி உரையை முடித்தார் பிரதமர் மோடி.