Bharathidasan University Convocation: பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி; தங்கப்பதக்கம் பெற்ற 33 மாணவர்களுக்குப் பட்டம்
Bharathidasan University Convocation 2024: டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாகச் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு, வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பட்டமளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்குகிறார் பிரதமர் மோடி.
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாகச் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு, வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், பிரதமர் மோடி தொண்டர்களைப் பார்த்துக் கையசைத்தார்.
33 பேருக்குப் பட்டம்
தொடர்ந்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பட்டமளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்குகிறார் பிரதமர் மோடி. 1,528 மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட உள்ள நிலையில், ரேங்க் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் 33 பேருக்குப் பிரதமர் பட்டங்களை வழங்க உள்ளார்.
பாரதிதாசன் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை
முன்னதாக பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பாரதிதாசன் சிலைக்கு, பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், துணை வேந்தர் முனைவர் செல்வம், மாணவர்கள் ஆகியோருடன் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இதையொட்டி, திருச்சி விமான நிலையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் தலைமையில் திருச்சி மற்றும் அதனைச்சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த 5 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவற்றை பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழுவினர் (எஸ்பிஜி) கடந்த 3 நாட்களாக ஆய்வு செய்து, நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசனைகளை நடத்தி பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர்.
இதையடுத்து விமானம் நிலைய புதிய முனையம், பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கம் முழுவதும் தமிழக போலீஸாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை இணைப்பு சாலையில் உள்ள நுழைவு வாயில் முதல் புதிய முனையம் வரை மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீவிர சோதனைக்கு பிறகு காவல்துறை சார்பில் வழங்கப்பட்ட அனுமதி சீட்டு இருந்தால் மட்டுமே நபர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.