6 பாடங்களுக்கான பணிநியமான நேரடி கலந்தாய்வு நாளை நடைபெறும் - பள்ளிக் கல்வி துறை
தமிழ் ஆங்கிலம் வணிகவியல் பொருளியல் கணிதம் இயற்பியல் ஆகிய ஆறு பாடங்களுக்கான பணிநியமான நேரடி கலந்தாய்வு நாளை நடைபெறும் என பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளது
தமிழ், ஆங்கிலம், வணிகவியல், பொருளியல், கணிதம், இயற்பியல் ஆகிய 6 பாடங்களுக்கான பணிநியமான நேரடி கலந்தாய்வு நாளை நடைபெறும் என பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளது
தமிழ்நாட்டில் உள்ள மேல்நிலை பள்ளிகளில் பணிபுரிய 14 பட பிரிவுகளில், முதுநிலை ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக பள்ளி கல்வி ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தமிழ் ஆங்கிலம், வணிகவியல், பொருளியல், கணக்கு, இயற்பியல் ஆகிய பாடங்களுக்கு நாளை காலை 9 மணி முதல் கலந்தாய்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அனுப்பப்பட்ட அழைப்பு கடிதம் மற்றும் அனைத்து கல்வி சான்றிதழ் நகலுடம் வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழும்பூர் பெண்கள் மேல்நிலை பள்ளியில் தமிழ் பாடத்திற்கும் பள்ளி கல்வி துறை இயக்குனர் அலுவலக வளாகத்தில் ஆங்கில பாடத்திற்கும், சேத்துப்பட்டு எம்.சி.சி பள்ளியில் வணிகவியல் பாடத்திற்கும். அசோக் நகர் மேல்நிலை பள்ளியில் பொருளியல் பாடத்திற்கும் திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் மேல்நிலை பள்ளியில் கணக்கு பாடத்திற்கும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இயற்பியல் பாடத்திற்கும் பணி ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைகழக பேராசிரியர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியம் விரைவில் வழங்க முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, " மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் பணியரியும் பேராசிரியர்களுக்கு ஊதியம் அளிக்காமல் நிலுவையில் உள்ளது என உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 53 கோடியே 20 லட்சம் ரூபாயை உடனடியாக ஒதுக்கி, பண பலன்களை உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளார். நிதி ஒதுக்கப்பட்ட காரணத்தினால் உங்கள் பணம் உங்களுக்கு வழங்கப்படும்.
கௌரவ விரிவுரையாளர்கள் சுமார் 4 ஆயிரம் பேர் விரைவில் பணிநியமனம் செய்யப்பட உள்ளனர், இவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள உயர்கல்வி துறை இயக்கங்கள் மூலம் நியமனம் செய்யப்படுவார்கள். இவர்கள் அனைவரும் நெட் , ஸ்லெட் , பி.எச்.டி இவற்றுள் ஏதாவது ஒன்றை நிறைவு செய்து இருக்க வேண்டும். இந்தி எதிர்ப்பு போரட்டம் பெரியார், அண்ணா காலத்தில் இருந்தே திராவிட இயக்கத்தால் நடத்தப்பட்டு வருகிறது. நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. இந்தி மொழி திணிக்கப்படுவதை தான் எதிர்க்கிறோம். நுழைவு தேர்வை இந்தி மொழியில் நடத்தக்கூடாது. இவற்றை எதிர்த்து தான் நாளை தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது " என அவர் கூறினார்.