மேலும் அறிய

NMMS Scholarship Scheme: மாணவர்களுக்கு மொத்தம் ரூ.36 ஆயிரம் கல்வி உதவித்தொகை; விண்ணப்பப் பதிவு தொடக்கம்- முக்கியத் தேதிகள்

தகுதிவாய்ந்த மாணவ, மாணவிகளைத் தேர்வு செய்ய தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு (என்எம்எம்எஸ்- National Means Cum Merit Scholarship Scheme) ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

மத்திய, மாநில அரசுகள் சார்பில், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பல்வேறு கல்வி உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதில் என்எம்எம்எஸ் எனப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு உதவித் தொகை மூலம் 4 ஆண்டுகளுக்கு மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.  

நாடு முழுவதும் விளிம்புநிலை மாணவர்களின் மேல்நிலைக் கல்வி தடைபட்டு விடக் கூடாது என்ற நோக்கத்தில் மத்தியக் கல்வித் துறை சார்பில் ஒவ்வோர் ஆண்டும் தேர்வு நடத்தப்பட்டு, 1 லட்சம் பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 6,695 மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. 2008 முதல் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது.

மாதம் ரூ.1000

இதற்குத் தகுதிவாய்ந்த மாணவ, மாணவிகளைத் தேர்வு செய்ய தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு (என்எம்எம்எஸ்- National Means Cum Merit Scholarship Scheme) ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்புப் படிக்கும் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதலாம். இதில் தேர்ச்சி பெறுவோருக்கு 9-ம் வகுப்பில் இருந்து 12ஆம் வகுப்புப் படிக்கும் வரை மாதம்தோறும் ரூ.1000 கல்வி உதவித் தொகை வழங்கப்படும். 

இதற்கு 7ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இதில் ஆதிதிராவிட, பழங்குடி மாணவர்களுக்கு 5 சதவீதத் தளர்வு உண்டு. இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோருடைய ஆண்டு வருமானம் ரூ.3.5 லட்சம் அல்லது அதற்குக் குறைவாக இருக்க வேண்டும்.

உதவித் தொகை எவ்வளவு?

இதில் தேர்ச்சி பெறுவோருக்கு 9-ம் வகுப்பில் இருந்து 12ஆம் வகுப்புப் படிக்கும் வரை மாதம்தோறும் ரூ.1000 கல்வி உதவித் தொகை வழங்கப்படும். ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் என்ற வீதத்தில் மொத்தம் ரூ.36 ஆயிரம் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், 2023- 24ஆம் ஆண்டுக்கான தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வுக்கு மாணவர்கள் அக்டோபர் 1ஆம் தேதி  விண்ணப்பித்து வருகின்றனர்.

முக்கியத் தேதிகள்

இரண்டு தாள்களிலும் தனித்தனியாகத் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம் ஆகும். இரண்டு தேர்வுகளிலும் குறைந்தது 40 சதவீத மதிப்பெண்களைப் பெற வேண்டும். ஒட்டுமொத்தமாகக் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களை மாணவர்கள் பெற வேண்டியது அவசியம். முன்னதாக தேசிய அளவில் மாணவர்களைத் தேர்வு எழுத வைக்க, மாநிலங்கள் தனியாகத் தேர்வு நடத்தும். நவம்பர் 30ஆம் தேதி வரை விண்ணப்பப் பதிவு நடைபெற உள்ளது. இதற்கிடையே விண்ணப்பங்கள் இரண்டுகட்டங்களாக சரிபார்ப்பு நடைபெறும். 

முதல்கட்டமாக கல்வி நிறுவனம் அல்லது பள்ளி அளவிலான சரிபார்ப்பை, நிறுவன நோடல் அதிகாரி (Institute Nodal Officer - INO) மேற்கொள்வார். இதற்கு டிசம்பர் 15 கடைசித் தேதி ஆகும். அதேபோல மாவட்ட அளவில் (District Nodal Officer - DNO) நடைபெறும் இரண்டாம் கட்ட சரிபார்ப்புக்கு டிசம்பர் 30 கடைசித் தேதி ஆகும்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Quarterly Exam Holiday : மாணவர்களே ரெடியா? காலாண்டு தேர்வுக்கு இத்தனை நாள் தொடர் விடுமுறையா.? இதோ சூப்பர் தகவல்
மாணவர்களே ரெடியா? காலாண்டு தேர்வுக்கு இத்தனை நாள் தொடர் விடுமுறையா.? இதோ சூப்பர் தகவல்
தமிழக அரசின் ₹36 லட்சம் கல்வி உதவித்தொகை: தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முழு விவரம்..
தமிழக அரசின் ₹36 லட்சம் கல்வி உதவித்தொகை: தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முழு விவரம்..
15 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சமூக வலைதளம் பயன்படுத்த தடையா? - அரசுக்கு சௌமியா அன்புமணி வைத்த அதிரடி கோரிக்கை!
15 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சமூக வலைதளம் பயன்படுத்த தடையா? - அரசுக்கு சௌமியா அன்புமணி வைத்த அதிரடி கோரிக்கை!
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: செலவை தலைமை ஆசிரியர்கள் மீது சுமத்துவதா? - தினகரன்
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: செலவை தலைமை ஆசிரியர்கள் மீது சுமத்துவதா? - தினகரன்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கட்டி முடிக்கப்பட்ட சிலைக்கு டெண்டர் வெளியிட்ட தவெக அரசு.! 45 லட்சம் ஊழல்.? வெளியான பரபரப்பு ஆதாரம்
கட்டி முடிக்கப்பட்ட சிலைக்கு டெண்டர் வெளியிட்ட தவெக அரசு.! 45 லட்சம் ஊழல்.? வெளியான பரபரப்பு ஆதாரம்
DMK Master Plan : ‘உருவாகும் 3வது அணி’ கரப்பான் பூச்சி கட்சித் தலைவரை சந்தித்த கனிமொழி?
‘உருவாகும் 3வது அணி’ கரப்பான் பூச்சி கட்சித் தலைவரை சந்தித்த கனிமொழி?
MK Stalin: ஸ்டாலினுக்கு என்ன ஆச்சு? திமுக முப்பெரும் விழா கடைசி நேரத்தில் ஒத்திவைப்பு - துரைமுருகன் அறிவிப்பு
ஸ்டாலினுக்கு என்ன ஆச்சு? திமுக முப்பெரும் விழா கடைசி நேரத்தில் ஒத்திவைப்பு - துரைமுருகன் அறிவிப்பு
Kolathur MLA V S Babu Health : 7-வது நாளாக தொடரும் சிகிச்சை… கொளத்தூர் MLA வி.எஸ்.பாபுவின் உடல்நிலை எப்படி? மருத்துவமனை அறிக்கை
7-வது நாளாக தொடரும் சிகிச்சை… கொளத்தூர் MLA வி.எஸ்.பாபுவின் உடல்நிலை எப்படி? மருத்துவமனை அறிக்கை
DMK Sekar Babu : மாஜி அமைச்சர் சேகர்பாபுக்கு குறிவைத்த விஜய்.! 6 பிரிவில் வழக்கு -சுற்றிவளைக்கும் போலீஸ்- அடுத்தது என்ன.?
மாஜி அமைச்சர் சேகர்பாபுக்கு குறிவைத்த விஜய்.! 6 பிரிவில் வழக்கு -சுற்றிவளைக்கும் போலீஸ்- அடுத்தது என்ன.?
Police Register Case Against A Raja : ஆ.ராசாவை விடக்கூடாது.! FIR ரெடி... ஸ்கெட்ச் போட்ட விஜய் அரசு- தட்டி தூக்க தயாராகும் போலீஸ்
ஆ.ராசாவை விடக்கூடாது.! FIR ரெடி... ஸ்கெட்ச் போட்ட விஜய் அரசு- தட்டி தூக்க தயாராகும் போலீஸ்
விஜய் தோற்றத்தில் விநாயகர் சிலை.! அரசியல் விளம்பரத்திற்காக கொச்சைப்படுத்துவதா.? கொந்தளித்த நயினார்
விஜய் தோற்றத்தில் விநாயகர் சிலை.! அரசியல் விளம்பரத்திற்காக கொச்சைப்படுத்துவதா.? கொந்தளித்த நயினார் நாகேந்திரன்
Brics Summit: ப்ரிக்ஸ் மாநாட்டை நடத்தி முடித்த இந்தியா..! வன்மத்தை கக்கிய மேற்கத்திய ஊடகங்கள் - பயம் காரணமா?
ப்ரிக்ஸ் மாநாட்டை நடத்தி முடித்த இந்தியா..! வன்மத்தை கக்கிய மேற்கத்திய ஊடகங்கள் - பயம் காரணமா?
Embed widget