9 நாட்களுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறை: பட்டதாரி ஆசிரியர் கழகம் வைத்த கோரிக்கை..
தமிழ்நாடு அரசு 25.12.2021 முதல் 2.1.2022 வரை அரையாண்டுத் தேர்வுக்கான (கிறிஸ்மஸ் விடுமுறையாக) விடுமுறையாக 9 நாட்கள் அளிக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு 25.12.2021 முதல் 2.1.2022 வரை அரையாண்டுத் தேர்வுக்கான (கிறிஸ்மஸ் விடுமுறையாக) விடுமுறையாக 9 நாட்கள் அளிக்க வேண்டும் என்று பட்டதாரி ஆசிரியர் கழகம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்துத் தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
’’ஆண்டாண்டு காலமாக, ஒவ்வொரு வருடமும் அரையாண்டுத் தேர்வு முடிவின் இறுதியில் கிறிஸ்மஸ் பண்டிகையும், புத்தாண்டுப் பிறப்பும், சேர்ந்து வருவதை ஒட்டி டிசம்பர் 22 முதல் ஜனவரி 1 அல்லது 2 வரை தமிழகக் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாண்டு அரையாண்டுத் தேர்வு (திருப்புதல் தேர்வுகள்) டிசம்பர் 24 வரை நடைபெறுகிறது. 25.12.2021 கிறிஸ்மஸ் சனிக்கிழமை அன்று வருகிறது. அடுத்த நாள் 26.12.2021 ஞாயிறு ஆகும். அதைப்போன்றே புத்தாண்டும் 1.1.2022 சனிக்கிழமை பிறக்கிறது. மறுநாள் 2.1.2022 ஞாயிறு ஆகும். ஆக வழக்கம் போல் விடக்கூடிய அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் இந்த ஆண்டு 4 நாட்கள் - வழக்கமான விடுமுறை நாட்களாக வந்து விடுகின்றன.
ஆகவே அரையாண்டுத் தேர்வுகள் (திருப்புதல் தேர்வுகள்) நடந்து முடிந்ததும் 25.12.2021 முதல் 2.1.2022 வரை அரையாண்டுத் தேர்வுக்கான (கிறிஸ்மஸ் விடுமுறையாக) விடுமுறையாக இவ்வாண்டும் வழக்கத்தை மாற்றாமல், அறிவிக்க வேண்டுகிறோம்.
ஒவ்வொரு ஆண்டும் அரையாண்டுத் தேர்வு விடுமுறை (கிறிஸ்மஸ் விடுமுறை) என்று பெயரில் 10 அல்லது 11 ராட்கள் கல்வி நிலையங்களுக்கு அரசு விடுமுறை வழங்கும். ஆனால் இந்த வருடம் 27.12.2021 முகுல் 31.12.2021 வரை 5 நாட்கள் மட்டுமே அரையாண்டுத் தேர்வுக்கான விடுமுறையாக அளித்தால் போதுமானது.
மற்ற நாட்கள் 25.12.2021 கிறிஸ்துமஸ் அரசு விடுமுறை 26.12.2021 ஞாயிறு; 1.1.2022 சனிக்கிழமை -ஆங்கில வருடப் பிறப்பு அரசு விமுமுறை, மறுநாள் 2.1.2022 ஞாயிறு விடுமுறை என்று வருவது ஒரு சிறப்பு அம்சமாகும்.
ஆகவே மேற்கூறியவற்றின் அழுப்படையில் இவ்வாண்டும் 25.12.2021 முதல் 2.1.2222 வரை அரையாண்டு தேர்வுக்கான (கிறிஸ்மஸ் விடுமுறைக்கான) விடுமுறையாக அறிவிக்க வேண்டும்’’.
இவ்வாறு தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்