மேலும் அறிய

NEET Exam 2024: நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா? இன்றே கடைசி! எப்படி விண்ணப்பிக்கலாம்?

NEET UG Registration 2024: நாடு முழுவதும் இளங்கலை மருத்துவப் படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (மார்ச் 9) கடைசி ஆகும்.

நாடு முழுவதும் இளங்கலை மருத்துவப் படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (மார்ச் 9) கடைசி ஆகும். நீட் தேர்வு மே 5ஆம் தேதி ஆஃப்லைன் முறையில் நடைபெற உள்ளது.

நீட் தேர்வு 

நாடு முழுவதும் எம்பிபிஎஸ் (பொது மருத்துவம்), பிடிஎஸ் (பல் மருத்துவம்), பிஎஸ்எம்எஸ் (சித்த மருத்துவம்), பிஏஎம்எஸ் (ஆயுர்வேதம்), பியுஎம்எஸ் (யுனானி), ஓமியோபதி உள்பட இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கும் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் ஒருமுறை நடத்தப்படும் இந்தத் தேர்வு, நீட் (தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு) தேர்வு என அழைக்கப்படுகிறது. இந்த நுழைவுத் தேர்வை என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது.  

இதில் குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெறும் மாணவர்கள் மட்டுமே, மருத்துவப் படிப்புக்குத் தகுதியானவர்கள் ஆவர். நீட் எழுதாமல் யாராலும் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியாது. நீட் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களைக் கொண்டு, கலந்தாய்வில் உரிய மருத்துவக் கல்லூரிகள் ஒதுக்கப்படும். 

மே 5-ல் தேர்வு 

2024ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வு முடிவுகள் ஜூன் 14ஆம் தேதி வெளியாக உள்ளன. நீட் தேர்வு 3 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு.. அதாவது 200 நிமிடங்களுக்கு நடைபெற உள்ளது. மே 5 அன்று மதியம் 2 மணி முதல் 5.20 மணி வரை நேரடி முறையில் நடைபெறும் தேர்வுக்கு, ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பிப்ரவரி 9ஆம் தேதி இதற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கிய நிலையில், இன்று (மார்ச் 9) வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?

பொதுப் பிரிவினருக்கு - ரூ.1,700

EWS/ OBC - NCL பிரிவினருக்கு - ரூ.1,600

பழங்குடியின / பட்டியலின / மாற்றுத் திறனாளிகள் / மாற்றுப் பாலினத்தவர் ஆகியோருக்கு - ரூ.1000

இந்தத் தொகையை சரக்கு மற்றும் சேவை வரியுடன் (ஜிஎஸ்டி) செலுத்த வேண்டும். 

விண்ணப்பிப்பது எப்படி?

* முதல்முறை விண்ணப்பிக்கும் மாணவர்கள், https://neet.ntaonline.in/frontend/web/registration/index என்ற இணைப்பை க்ளிக் செய்து முன்பதிவு செய்ய வேண்டும்.

* சரியான இ- மெயில் முகவரி, தொலைபேசி எண்ணை மட்டுமே உள்ளிட வேண்டும்.

* முன்பதிவு படிவத்தைப் பூர்த்தி செய்த பிறகு, விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும்.

* விண்ணப்ப எண் மற்றும் கடவுச் சொல்லை உள்ளிட்டு, விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு, விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கையெழுத்து, கைரேகை ஆகிய ஆவணங்களை ஸ்கேன் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

* முதல் இரண்டு படிவங்களையும் பூர்த்தி செய்த பிறகு, விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அதன்பிறகே விண்ணப்பப் படிவம் உறுதிசெய்ய வேண்டும். சரியான தகவல்களை மட்டுமே தேர்வர்கள் உள்ளிட வேண்டும்.

தேர்வு முறை

NEET Exam 2024: நீட் தேர்வு முறை, கட்டணம், விண்ணப்பிக்கும் முறை- ஸ்டெட் பை ஸ்டெப் வழிகாட்டி இதோ!

தேர்வு குறித்த முழுமையான விவரங்களை அறிய: https://exams.nta.ac.in/NEET/images/neet-ug-2024-draft-ib-09022024.pdf என்ற தகவல் வழிகாட்டியைக் காணலாம்.

தொடர்புகொள்ள- தொலைபேசி எண்: +91-11-40759000

மின்னஞ்சல் முகவரி: neet@nta.ac.in 

கூடுதல் விவரங்களுக்கு: https://neet.nta.nic.in/

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EX MLA Kathiravan: ”EX MLA கிட்டயே கட்டணமா?” போலீசாருடன் வாக்குவாதம் காரை குறுக்கே நிறுத்தி சண்டைPrashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
Pakistan Train Hijack: ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
Masi Magam 2025: நாளை மாசிமகம்; புண்ணிய நதிகளில் ஏன் நீராட வேண்டும்? எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன நன்மை?
Masi Magam 2025: நாளை மாசிமகம்; புண்ணிய நதிகளில் ஏன் நீராட வேண்டும்? எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன நன்மை?
"கடன் பிரச்னை தாங்க முடில" பெற்ற குழந்தைகளை துடிதுடிக்க கொன்ற தம்பதி.. கொடூரம்!
Embed widget