மேலும் அறிய

NEET Ban | நீட்: குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைக்கும்வரை உண்ணாவிரதம் : பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அறிவிப்பு

நீட் சட்ட முன்வடிவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைக்கும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள உள்ளதாக பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அறிவித்துள்ளது.

நீட் சட்ட முன்வடிவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைக்கும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள உள்ளதாக பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அறிவித்துள்ளது.

இதுகுறித்துப் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு..

''தமிழ்நாடு அரசுக் கல்லூரிகளிலும், தமிழ்நாடு அரசுக்குரிய மாணவர் சேர்க்கை இடங்களிலும், இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறை குறித்த சட்ட முன்வடிவைத் தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்கு 2021 செப்டம்பரில் அனுப்பி உள்ளது. சில ஆயிரம் இடங்களுக்காகப் பல லட்சம் மாணவர்கள் விண்ணப்பிக்கும், மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்புடைய ஒரு சட்ட முன்வடிவிற்கு (Bill) முன்னுரிமை தந்து, ஆளுநர் பரிசீலித்து, முடிவினை மேற்கொண்டிருக்க வேண்டும். மூன்று மாதங்கள் முடிந்தும் ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வேதனைக்குரியது.

18 வயதிற்கு உட்பட்ட குழந்தைப் பருவம் நிறைவுறாதவர்களே மேல்நிலைப் பள்ளி மாணவர்கள். நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவு குறித்த  ஆளுநரின் மௌனம் மாணவர்களையும் பெற்றோர்களையும் மிகக் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது. 

நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவு  ஆளுநருக்கு அனுப்பப்பட்டால், அதற்கு ஒப்புதல் அளிப்பது, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பது அல்லது தமது கருத்துடன் மீண்டும் சட்டப்பேரவை பரிசீலனைக்கு அனுப்புவது ஆகியனவற்றில் ஏதேனும் ஒரு நடவடிக்கையை  எவ்வளவு விரைவாக இயலுமோ, அவ்வளவு விரைவாக (as soon as possible) ஆளுநர் எடுக்க வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 200 கூறுகிறது.

மக்களாட்சி மாண்புகளுக்கு உகந்ததல்ல

தமிழ்நாட்டு மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த அரசு, தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், வல்லுநர் குழு அமைத்து, அதன் பரிந்துரையைப் பெற்று, அதனை ஆய்வு செய்து, சட்ட முன்வடிவைத் தமிழ்நாடு சட்டப் பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், ஆளுநர் காலம் தாழ்த்துவது மக்களாட்சி மாண்புகளுக்கு உகந்ததாகாது.

மேல்நிலைப்பள்ளிப் பாடத்தில் அரசால் ஒரு முறை மதிப்பிடப்பட்ட மாணவர்களை மீண்டும் அதே பாடத்திட்டத்தில் வேறு ஒரு முகமை ( agency - NTA) மதிப்பிடுவதும், அந்த முகமை தரும் மதிப்பீட்டுச் சான்றே மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான தகுதியாகக் கொள்ளப்படும் என்பதும், பொது நியதிக்கு முரண்பட்டது; கல்வியியல் செயல்பாட்டிற்கு எதிரானது. மாணவர்களை மிகக் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாக்கி, அவர்களை மருத்துவக் கல்வியில் இருந்து விலக்கி வைக்கிறது.

NEET Ban | நீட்: குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைக்கும்வரை உண்ணாவிரதம் : பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அறிவிப்பு

சமூக நீதிக்கு எதிரானது

தமிழ்நாட்டில் தமிழ் வழியில் முதல் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை கட்டணமில்லாமல், கற்பதை ஊக்குவிப்பதற்காக உதவித் தொகை, கல்விக் கருவிகள் என அனைத்தையும் வழங்கித் தரமான கல்வியை அரசு வழங்கிவரும் நிலையில் இதற்கு மதிப்பளிக்காமல் தனியார் நிறுவனங்களில் லட்சக்கணக்கில் பணம் செலவழித்துப் பயிற்சி மேற்கொண்டு எழுதும்  தேர்வுக்கு மதிப்பளிப்பது சமூக நீதிக்கு எதிரானது.
இந்திய அரசமைப்புச் சட்டம் கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.  

மத்திய அரசின் சட்டம் இயற்றும் அதிகாரம், மாநில அரசின் சட்டம் இயற்றும் அதிகாரம், ஒப்பிசைந்து சட்டம் இயற்றும் அதிகாரம் என அரசமைப்புச் சட்டம் வரையறுத்துள்ளது. ஒப்பிசைந்து சட்டம் இயற்றும் அதிகாரப் பட்டியலில் (concurrent list) உள்ள பொருளில் மத்திய அரசு இயற்றும் சட்டம் ஒரு மாநிலத்தின் தேவையை அதன் தன்மைக்கு ஏற்றவாறு  நிறைவேற்றவில்லையென்றால், மாநில அரசு அந்த மாநில மக்களின் நலன் கருதி ஒரு சட்ட முன்வடிவை இயற்றலாம். அவ்வாறு  மாநில சட்டப்பேரவையால் இயற்றப்படும் சட்ட முன்வடிவிற்குக்  குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற வாய்ப்பளித்திடும் வகையில் அமைந்ததுதான் ஒப்பிசைவுப்பட்டியல்.

மாநிலத்தின் தேவை, மாணவர்களின் நலன், அரசமைப்புச்சட்டம் வழங்கியிருக்கும் உரிமை ஆகியவற்றின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில்  ‘தமிழ்நாடு மருத்துவ இளங்கலைப் படிப்புச் சேர்க்கைக்கான சட்டம் 2021”ஐ ( Tamil Nadu Admission to Under Graduate Medical Degree Courses Act. 2021)  நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைத்துள்ளது.  

தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி சட்டமுன்வடிவைக் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு ஆளுநர் விரைந்து அனுப்பிட வேண்டுமெனப் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது. 

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி 2022 ஜனவரி மாதம் தமிழ்நாடு முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்துவது எனவும், மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட நாளான ஜனவரி 30 அன்று உண்ணாநிலை அறப்போராட்டம் நிகழ்த்துவது எனவும், குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைக்கும் வரை அந்த உண்ணாநிலைப் போராட்டத்தை அமைப்பின் பொதுச் செயலாளர் தொடர்வது எனவும் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை தீர்மானித்துள்ளது''.

இவ்வாறு பொதுப்பள்ளிக்கான மாநில மேடை தெரிவித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
Watch Video:
Watch Video: "ஈ சாலா கப் நம்தே" - விநாயகர் சிலை முன் RCB ரசிகர் செய்த செயல்! வைரல் வீடியோ
"திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு இருக்கிறது" முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை!
திமுக பவள விழாவில் உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.. AI மிரட்டுதே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayam Ravi Kenishaa | ரேடியோ ரூம் TO GOA வீடு..பாடகியுடன் ஜெயம் ரவி.. கதறி அழும் ஆர்த்தி!Atishi Marlena | கெஜ்ரிவாலின் நம்பிக்கை!டெல்லியின் அடுத்த முதல்வர்..யார் அதிஷி?Cuddalore Mayor | Thirumavalavan meets MK Stalin | மிரட்டப்பட்டாரா திருமா? அந்தர் பல்டி பேச்சுகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
Watch Video:
Watch Video: "ஈ சாலா கப் நம்தே" - விநாயகர் சிலை முன் RCB ரசிகர் செய்த செயல்! வைரல் வீடியோ
"திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு இருக்கிறது" முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை!
திமுக பவள விழாவில் உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.. AI மிரட்டுதே!
உடல் உறுப்பு தானம் செய்த பிரபல பைக் ரேசர் ? -  யார் தெரியுமா..?
உடல் உறுப்பு தானம் செய்த பிரபல பைக் ரேசர் ? - யார் தெரியுமா..?
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
Embed widget