NEET UG 2022 Answer Key: நீட் இளநிலைத் தேர்வு விடைக்குறிப்பு இன்று வெளியீடு: பதிவிறக்குவது எப்படி?
2022ஆம் ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வுக்கான உத்தேச விடைக் குறிப்பை தேசியத் தேர்வுகள் முகமை இன்று மாலை வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
2022ஆம் ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வுக்கான உத்தேச விடைக் குறிப்பை தேசியத் தேர்வுகள் முகமை இன்று மாலை வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதை டவுன்லோடு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்எம்எஸ் (சித்தா), ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உள்பட இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கும் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வு நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது.
இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே மாதம் 6-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றது. விண்ணப்பிக்காத தேர்வர்களுக்கு 3 முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதேபோல விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டது. அந்த வகையில் நீட் தேர்வு விண்ணப்பங்களில் ஜூன் 16 வரை திருத்தம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இந்த முறை ஜூலை 17ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது.
ALSO READ | Group 5A Notification: அரசு ஊழியர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
இளங்கலை நீட் தேர்வை எழுதுவதற்காக மொத்தம் 18,72,329 தேர்வர்கள் விண்ணப்பித்தனர். 8,07,711 ஆண் தேர்வர்கள் விண்ணப்பித்தனர். அதேபோல பெண் தேர்வர்கள் 10,64,606 பேர் விண்ணப்பித்தனர். மூன்றாம் பாலினத்தவர் 12 பேர் விண்ணப்பித்தனர். தமிழ்நாட்டில் 1.42 லட்சம் மாணவ மாணவியர் நீட் தேர்வை எழுத விண்ணப்பித்தனர்.
கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 2,57,562 பேர் அதிகமாக விண்ணப்பித்தனர். இதில் தமிழில் தேர்வெழுத 31,803 பேர் விண்ணப்பித்தனர். தேர்வர்கள் ஜூலை 12 முதல்ஹால்டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்தனர். இவர்களுக்கு ஜூலை 17ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. சுமார் 18 லட்சம் தேர்வர்கள், அதாவது 95 சதவீதம் பேர் நீட் தேர்வை எழுதி இருந்தனர்.
இந்நிலையில் நீட் தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்பு இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தேர்வர்கள் இதை பார்ப்பது எப்படி?
* நீட் தேர்வை எழுதியவர்கள் http://neet.nta.nic.in என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.
* Download answer key என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
* விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லைக் கொண்டு லாகின் செய்ய வேண்டும்.
* NEET UG 2022 answer key என்ற பெயரில் பிடிஎஃப் விடைக்குறிப்பு தோன்றும்.
* அதைத் தரவிறக்கம் செய்து, பிற்காலப் பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளலாம்.
தேர்வர்கள் ஒரு கேள்விக்கு ரூ.1000 செலுத்தி விடைக் குறிப்பு விடையை ஆட்சேபனை செய்யலாம் என்று தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.