மேலும் அறிய

நடமாடும் கழிப்பறைகள் மூலம் இயற்கை உரம் தயாரிப்பு - கரூர் மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு

’’பழைய பேருந்துகளை நடுமாடும் கழிவறைகளாக மாற்றுவதன் மூலம், குறைந்த செலவில் இதுபோன்ற நடமாடும் கழிப்பறைகளை உருவாக்கலாம்’’

கரூரில் உள்ள ஸ்ரீசங்கரா வித்யாலயா தனியார் பள்ளியை சார்ந்த மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் ரரதினா மற்றும் அனுஷிவானி மாணவன் நிதிஷ்  ஆகிய மூவரும் தங்கள் வழிகாட்டி ஆசிரியர் ராஜசேகரன் அவர்களின் உதவிரயாடு மனித கழிவுகளை இயற்கை உரமாக மாற்றக்கூடிய நடமாடும் கழிப்பறை என்ற தலைப்பில் உருவாக்கிய அறிவியல் கண்டுபிடிப்பு இன்ஸ்பயர் மானக் போட்டியில் சிறந்த படைப்பாக மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டு, ரூபாய் 10,000 ஊக்கத்தொகையைப் பரிசாகப் பெற்றுள்ளது. அதோடு, இந்தக் கண்டுபிடிப்பு, ஸ்வச் சாரதி (SSF) என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழும் தேர்வு செய்யப்பட்டு, ரூபாய் 5,000 உதவித்தொகை பெற்றுள்ளது. மேலும், வில்லேஜ் ஹேக்கத்தான் 2021 என்ற விவசாயத்துக்கு உதவி செய்யக்கூடிய கண்டுபிடிப்புகள் தொடர்பான கட்டுரைப் போட்டியிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.


நடமாடும் கழிப்பறைகள் மூலம் இயற்கை உரம் தயாரிப்பு - கரூர் மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு

நடமாடும் கழிவறைகள் ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அதிகமாக செயல்பட்டு வருகின்றன. ஆனால், நடமாடும் கழிவறைகளை  கொண்டு, மனிதக் கழிவுகளை உரமாக மாற்றக்கூடிய இந்த புதிய யோசனை இக்கண்டுபிடிப்பின் மிக முக்கிய அம்சமாகும். மாணவ, மாணவிகள் கூறுகையில் பொதுவாக, கோயில் திருவிழாக்கள், கட்சி பொதுக்கூட்டங்கள் மற்றும் வாரச் சந்தைகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடக் கூடிய பொது இடங்களில் போதிய கழிப்பறை வசதிகள் இருப்பதில்லை. சில தினங்களுக்காக அல்லது குறுகிய காலத்துக்காக நிரந்தர கழிப்பறைகளை அமைப்பதிலும் நடைமுறை சிக்கல்களும், பராமரிப்பு அசௌகர்யங்களும் உள்ளன. பொதுமக்கள் கழிப்பறை இல்லாத காரணத்தால், பொது இடங்களில் இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர்.


நடமாடும் கழிப்பறைகள் மூலம் இயற்கை உரம் தயாரிப்பு - கரூர் மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு

இதனால், பல்வேறு சுற்றுச்சூழல் மாசுபாடும், நோய் பரவும் அபாயமும் ஏற்படுகின்றன. நீர், நிலம் மற்றும் காற்று ஆகியவை மாசுபாடு அடைகின்றன. கழிப்பறை என்பது குழந்தைகள், நோயாளிகள் மற்றும் வயதானவர்களுக்கு அடிக்கடி தேவைப்படும் ஒரு முக்கிய அம்சமாகும். மேலும், பெண்கள் மாதவிடாய் காலங்களில் தூய்மையான கழிவறைகள் இல்லாத காரணத்தால், பல்வேறு சிக்கல்களுக்கும் ஆளாகின்றனர்.

நடமாடும் கழிப்பறைகள் மூலம் இயற்கை உரம் தயாரிப்பு - கரூர் மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு

இன்னொரு பக்கம், பொதுவாக விவசாயத்துக்கு அதிக அளவில் செயற்கை உரங்கள் மற்றும் செயற்கை பூச்சி மருந்துளை நாம் உபயோகிக்கிறோம். அதனால், மனிதகுலத்துக்கு ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களுக்குக் காரணமாக செயற்கை உரங்கள் இருக்க, சமீப காலமாக இயற்கை விவசாயத்தின் மீது நமது கவனம் திரும்பியுள்ளது. பொதுவாக, மண்புழு உரம் என்பது நாம் உபயோகிக்கக்கூடிய இயற்கை உரமாகும். அதை போன்று, மனிதக் கழிவுகளை இயற்கை உரமாக மாற்றுவதன் மூலம், அதிக சத்துள்ள இயற்கை உரம் நமக்குக் கிடைக்கும். இது, பல வெளிநாடுகளில் சிறந்த இயற்கை உரமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதைப் பற்றிய போதிய விழிப்புணர்வு நம் நாட்டில் இல்லை. அதே நேத்தில், நம் நாடான இந்தியா மக்கள் தொகையில் இரண்டாமிடத்தில் உள்ளது. அதனால், மனிதக் கழிவுகளை உரமாக மாற்றினால், நமது இயற்கை உரத் தேவையானது வெகுவாகப் பூர்த்தி செய்யப்படும். அதற்காகத்தான், இந்த நடமாடும் இயற்கை கழிப்பறையை கண்டுபிடித்துள்ளோம் என்றார்கள்.


நடமாடும் கழிப்பறைகள் மூலம் இயற்கை உரம் தயாரிப்பு - கரூர் மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு

மாணவர்களின் வழிகாட்டி ஆசிரியரான ராஜசேகரன், கூறுகையில் பொது மக்கள் கூடக்கூடிய இடங்களில் இத்தகைய நடமாடும் கழிவறைகளை அமைப்பதன் மூலம், குறிப்பிட்ட காலத்தில் அதிக அளவு மனிதக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு, அவற்றை ஓரிடத்தில் உரமாக மாற்றி, நம் விவசாயிகளுக்கு இயற்கை உரமாக அளிக்க முடியும். இதனால், செயற்கை உரம், செயற்கை பூச்சிக்கொல்லிகளால் ஏற்படும் பக்க விளைவுகள் முற்றிலும் தவிர்க்கப்படும். மேலும், விவசாயிகளுக்கும் இத்தகைய உரம் நல்ல லாபம் தரக்கூடியதாக இருக்கும். அதோடு, இதில் கார்பன் அளவு மிக அதிகமாக இருப்பதால், மண்ணில் சத்துகள் நீண்ட நாள்களுக்கு பாதுகாக்கப்பட்டு, மண்ணும் வளமோடு இருக்கும். இத்தகைய நடமாடும் கழிவறைகள் ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் செயல்பட்டு வருகின்றன. ஆனால், நடமாடும் கழிவறைகளைக் கொண்டு, மனிதக் கழிவுகளை உரமாக மாற்றக்கூடிய இந்தப் புதிய யோசனை இக்கண்டுபிடிப்பின் மிக முக்கிய அம்சமாகும். நடமாடும் இந்தக் கழிவறை மாதிரியை மிகத் தத்ரூபமாக வடிவமைத்துள்ளார், எங்கள் பள்ளியைச் சேர்ந்த ஓவிய ஆசிரியர் கார்த்திகேயன்.


நடமாடும் கழிப்பறைகள் மூலம் இயற்கை உரம் தயாரிப்பு - கரூர் மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு

இதில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி கழிவறைகள் இந்திய மற்றும் மேற்கத்திய பாணியில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்புக் கழிப்பறை, குழந்தைகளுக்கு ஏற்ற கழிப்பறையும் அமைக்கப்பட்டுள்ளது. தவிர, இப்பேருந்து மேற்கூரை பகுதி மழைநீரை சேகரிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், இப்பேருந்து முழுக்க முழுக்க சூரிய சக்தியில் இயங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு, சானிட்டரி நாப்கின் எரிப்பான் இந்தப் பேருந்தில் உள்ள மிக முக்கிய அம்சமாக உள்ளது. மேலும், மாணவ, மாணவிகள் கரூரில் இயங்கி வரும் பேருந்து வடிவமைக்கும் இடத்துக்குச் சென்று, இதன் சாத்தியக் கூறுகள் பற்றி ஆய்வு செய்துள்ளனர். அவர்களின் ஆய்வின் முடிவில், இது சாத்தியம் எனவும், எவ்வாறு வடிவமைப்பது எளிது என்றும் மாணவர்கள் விவரமாக ஆய்வுசெய்து கண்டறிந்துள்ளனர். மேலும், புழக்கத்தில் இல்லாத பழைய பேருந்துகளை இவ்வாறு கழிவறைகளாக மாற்றுவதன் மூலம், குறைந்த செலவில் இதுபோன்ற நடமாடும் கழிப்பறைகளை உருவாக்கலாம் என்றார். 

தலைப்பு செய்திகள்

பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!
NCERT, CBSE பணியிடங்களில் 56% காலி; கல்வி எதிர்காலம் கேள்விக்குறி? வெளியான அதிர்ச்சி தகவல்!
NCERT, CBSE பணியிடங்களில் 56% காலி; கல்வி எதிர்காலம் கேள்விக்குறி? வெளியான அதிர்ச்சி தகவல்!
NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !
NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Embed widget