National Flag: மாணவர்கள் இல்லம்தோறும் தேசியக்கொடியை ஏற்றவேண்டும்.. அறிவுறுத்தும் பள்ளிக்கல்வித்துறை
மாணவர்களுக்கு தேசியக் கொடி வழங்கி, ஆகஸ்ட் 13 முதல் 15 வரை அவரவர் இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்ற அறிவுறுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாணவர்களுக்கு தேசியக் கொடி வழங்கி, ஆகஸ்ட் 13 முதல் 15 வரை அவரவர் இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்ற அறிவுறுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பள்ளிக் கல்வித்துறையின் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் மற்றும் பயிற்சி
12.08.2022, 13.08.2022 ஆகிய இரண்டு நாட்கள் கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிட கூட்ட அரங்கில் காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது. எனவே, மடிக்கணினியுடன் முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் (பொறுப்பு மாவட்ட கல்வி அலுவலர்களை தவிர்த்து) உரிய விவரங்களுடன் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பள்ளிக் கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.
அந்தக் கூட்டத்தில், தொடக்கக் கல்வி இயக்ககம், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம், பள்ளி சாரா வயது வந்தோர் கல்வி இயக்ககம், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், சமக்ர சிக்ஷா, பள்ளிக் கல்வி ஆணையரகம் சார்ந்து அறிவுறுத்தல் வழங்கப்பட உள்ளது.
அதில், பள்ளிக் கல்வி ஆணையரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
NMMS உதவித் தொகை சார்பாக (2022-23) மாணவர்களின் விவரங்கள் ஆன்லைனில் புதியதாக பதிவேற்றம் செய்தல் மற்றும் புதுப்பித்தல்.
பெண்கல்வி ஊக்கத் தொகை சார்பாக 2017-2018 உதவித் தொகைபெறத் தகுதியுள்ள மாணவியர்களின் வங்கிக் கணக்கு மற்றும் ஆதார் எண்னை சரிபார்த்து மின்னஞ்சல் மூலம் இவ்வாணையரகத்திற்கு அனுப்புதல்.
* 75 வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு 2022 ஆகஸ்டு மாதம் 13, 14 மற்றும் 15 ஆகிய 3 தினங்களில் அனைத்து இல்லங்களிலும் தேசியக்கொடியினை ஏற்றுதல் சார்ந்து அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கல்.
* அனைத்து மாவட்டங்களில் உள்ள மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்கள் உலகத் திறனாய்வு உடல் திறன் தேர்வு கைப்பேசி செயலி மூலம் தேர்வு செய்தல் மற்றும் மேப்பிங் செய்தல்.
* 44வது உலக சதுரங்கப் போட்டிகள் நடத்தியது, அனைத்து மாவட்டங்களுக்கும் அதற்காக வழங்கப்பட்ட தொகை காசாக்கம் செய்யப்பட்ட விவரம் மற்றும் செலவு செய்யப்பட்ட விவரம்.
* பள்ளிகளில் செயல்படும் அனைத்து மன்றங்களை புதுப்பித்து தொடர்ந்து செயல்படுத்தவும் மற்றும் அம்மன்றங்கள் வாயிலாக மாணவர்களுக்கு வினாடி வினா மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தல்.
* அனைத்து வகைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எந்த ஒரு காரணத்திற்காகவும் மன அழுத்தத்திற்கு உள்ளாவதிலிருந்து தடுத்தல் மற்றும் பாதுகாத்தல் சார்பான விழிப்புணர்வினை ஏற்படுத்துதல்.
*2022-2023-ஆம் கல்வியாண்டிற்கான 1 முதல் 10-ஆம் வகுப்பு வரைபயிலும் மாணவ/மாணவியர்களுக்கு முதல் பருவத்திற்கு அனைத்து பாடக்குறிப்பேடுகள் வழங்கப்பட்ட விவரம்.
* 2021-2022-ஆம் கல்வியாண்டிற்கான மிதிவண்டி மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்ட விவரம் உரிய படிவத்தில் அளித்தல்.
*2022-2023-ஆம் கல்வியாண்டு உயர்கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேடு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விவரம்.
*2022-2023-ஆம் கல்வியாண்டின் 3-ஆம் பருவத்திற்கான பாடநூல்களின் தேவைப்பட்டியல் 7415-ல் உள்ளவாறு (இருப்பு விவரத்துடன்) உரிய படிவத்தில் வழங்குதல்.
* 2022-2023-ஆம் கல்வியாண்டிற்கான 1 மற்றும் 2 இணை சீருடைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விவரம் உரிய படிவத்தில் அளித்தல்.
* 2022-2023-ஆம் கல்வியாண்டில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்ளுக்கு தொழிற்கல்வி பாடப்பிரிவு புத்தகங்கள் வழங்கப்பட்ட விவரம் உரிய படிவத்தில் அளித்தல்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்