எந்த கல்வி கொள்கையை திணித்தாலும் ஏற்க முடியாது; தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை தான் - அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்
விழுப்புரம்: எந்த கல்வி கொள்கையை திணித்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இல்லை - அமைச்சர் பொன்முடி
விழுப்புரம்: எந்த கல்வி கொள்கையை திணித்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இல்லை, இரு மொழிக்கொள்கை என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அருகேயுள்ள வளையாம்பட்டு கிராமத்தில் இரண்டு புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி மற்றும் நாடக மேடையை உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, ஆட்சியர் பழனி கலந்து கொண்டு திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனை தொடர்ந்து பேட்டியளித்த உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, புதிய கல்வி கொள்கைக்கு தமிழக முதலமைச்சர் கையெழுத்திட வேண்டுமென மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தியுள்ளதற்கு பதிலளித்த அவர்,
தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முடிவெடுத்து தமிழக அளவில் தமிழ்நாட்டு கல்வி கொள்கை என்ற அடிப்படையில் குழு அமைத்து கல்வி கொள்கையை உருவாக்கி இருப்பதாகவும், அந்த கல்வி கொள்கையை தமிழக அரசு நிச்சயமாக பயன்படுத்தும் என்றும் அதில் மத்திய அரசு சொல்லி இருக்கிற நலத்திட்டங்களையும் அந்த கல்வி கொள்கையில் சேர்த்திருப்பதாகவும், புதிய திட்டங்களையும் சேர்த்து உள்ளதாக கூறினார். குறிப்பாக இரு மொழிக்கொள்கை மொழிக் கொள்கை என்னென்ன பின்பற்றுகிறோம் என்பதையும் சேர்த்து உள்ளதாகவும் அதனை தான் பின்பற்றுவோம் தமிழ்நாடு கல்வி கொள்கை என்பது உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு மொழி கட்டாய பாடம் ஆரம்ப கல்வியாகவும், உயர்கல்வியாக இருந்தாலும் இரண்டு மொழி கட்டாய பாடம் என தெரிவித்துள்ளார்.
நாங்கள் ஏற்க தயாராக இல்லை - பொன்முடி கூறியது என்ன ?
ஆங்கிலம் இருக்கிறது தாய் மொழி தமிழ் இருக்கிறது. இரு மொழிக்கொள்கை என்பதில் உறுதியாக இருப்பதாகவும், எல்லா விதத்திலும் தமிழ் மொழி கொண்டு வந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி அதே வழியில் தான் முதலமைச்சர் ஸ்டாலினும் இருக்கிறார். அதனால் தான் உயர்கல்வியில் தமிழகம் மிகச்சிறந்த நிலையில் வகிப்பதாக கூறியுள்ளார். எந்த கல்வி கொள்கையை திணித்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இல்லை இரு மொழிக்கொள்கை என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.