மேலும் அறிய

Mayor Priya : போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள சிறப்பு பயிற்சி: தொடங்கி வைத்தார் மேயர் பிரியா!

சென்னை பள்ளி மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் ACADEMY OF STEM EXCELLENCE என்ற பயிற்சியினை மேயர் பிரியா தொடங்கி வைத்தார்

சென்னை பள்ளி மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் ACADEMY OF STEM EXCELLENCE என்ற பயிற்சியினை மேயர்  பிரியா  இன்று தொடங்கி வைத்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

”பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் அவர்களால் 2023-24ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையின் அறிவிப்பு படி, சென்னை பள்ளிகளில் பயிலும் மிகச்சிறந்த மாணவர்களை பொதுவான தேர்வின் மூலம் தேர்ந்தெடுத்து, நேரடியாகவும் மற்றும் இணையதளம் வழியாகவும் நடைபெறும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்காக பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில், சென்னை பள்ளிகளில் 11ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியரை தேர்வு செய்து, பொதுத் தேர்வுடன் கூடிய NEET, CUET, CLAT, HT-JEE, ICAR, NDA, NATA, NIFT போன்ற மதிப்புமிகு நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்வதற்காக ACADEMY OF STEM EXCELLENCE என்ற பயிற்சி வழங்கப்பட உள்ளது.

அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் தேர்வு

இந்தப் பயிற்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை பள்ளிகளில், பள்ளிகள் வாரியாக அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயிற்சியும், மாணவ, மாணவியருக்கு தனித்தனியாக பாதுகாப்பான தங்கும் விடுதிகளும், அவரவர் பள்ளிகளுக்கு சென்று வர போக்குவரத்து வசதியும், ஆரோக்கியமான உணவு, குளிரூட்டப்பட்ட வகுப்பறைகள், மெய்நிகர் வகுப்பறைகள், இணையவழி கல்விக்காக அனைவருக்கும் கையடக்கக் கணினிகள், 8000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் கொண்ட நூலகம் உள்ளிட்ட வசதிகளும், பயிற்சியும் அனுபவமும் மிக்க ஆசிரியர் குழுக்களுடன் தொடர் தேர்வுகள் மற்றும் மதிப்பீடுகள் நடத்தப்பட்டு, குறைதீர் கற்பித்தல், மருத்துவ ஆலோசனைகள், உளவியல், ஆளுமைத் திறன், தலைமைப் பண்பு பயிற்சி ஆகியவை வழங்கப்படுவது சிறப்பம்சமாகும்.

பயிற்சி கட்டடம் திறந்து வைப்பு

பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலத்தில் பயிற்சி நடைபெறும் கட்டடத்தினை மேயர் பிரியா இன்று  திறந்து வைத்து, பயிற்சியினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

சென்னை பள்ளிகளில் பள்ளிகள் வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற 35 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த மாணவ, மாணவியருக்கு புத்தகப்பை, நோட்டுப் புத்தகங்கள் மற்றும் வாட்டர் பாட்டில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை  மேயர் அவர்கள் வழங்கி, மாணவர்களுடன் கலந்துரையாடி அறிவுரைகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, மேயர் அந்தப் பள்ளியின் நூலகம், அலுவலகம் மற்றும் கழிப்பறையினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக,  மேயர் அவர்கள் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ், இந்தப் பள்ளியில் மேல்நிலைக் கல்வி பயிலும் 74 மாணவ, மாணவியருக்கு மிதிவண்டிகளை வழங்கினார்”. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க,

Flying Kiss: ஃப்ளையிங் கிஸ் கொடுத்த ராகுல் காந்தி..மக்களவை சபாநாயகரிடம் புகார் கொடுத்த பாஜக பெண் எம்பிக்கள்

11th Admission: ‘இது ரொம்ப முக்கியம்’ - முதன்மை கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கோபாலபுரத்தை தாண்டி எந்த பெண்களுக்கும் பாதுகாப்பு இல்ல" பகீர் கிளப்பும் அண்ணாமலை
Jayalalitha's Jewellery: அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...
அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...
கனிமவளத்தில் கை வைத்த திமுக ; ரவுண்டு கட்டிய அன்புமணி - பின்னணி இதான்
கனிமவளத்தில் கை வைத்த திமுக ; ரவுண்டு கட்டிய அன்புமணி - பின்னணி இதான்
Elon Musk Vs Open AI: மஸ்கா போட நினைத்த எலான் மஸ்க்..அலெர்ட்டான ஓபன் ஏஐ-ன் நச் பதிலடி...
மஸ்கா போட நினைத்த எலான் மஸ்க்..அலெர்ட்டான ஓபன் ஏஐ-ன் நச் பதிலடி...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | CrimePa Ranjith Slams MK Stalin | ”சாதிய வன்கொடுமை! ஒத்துக்கோங்க ஸ்டாலின்”பா. ரஞ்சித் சரமாரி கேள்வி! | DMKDMK Vs VCK | ”2026-ல் ஸ்டாலினை வீழ்த்துவோம் உண்மையான சங்கி திமுக” விசிக நிர்வாகி ஆவேசம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கோபாலபுரத்தை தாண்டி எந்த பெண்களுக்கும் பாதுகாப்பு இல்ல" பகீர் கிளப்பும் அண்ணாமலை
Jayalalitha's Jewellery: அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...
அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...
கனிமவளத்தில் கை வைத்த திமுக ; ரவுண்டு கட்டிய அன்புமணி - பின்னணி இதான்
கனிமவளத்தில் கை வைத்த திமுக ; ரவுண்டு கட்டிய அன்புமணி - பின்னணி இதான்
Elon Musk Vs Open AI: மஸ்கா போட நினைத்த எலான் மஸ்க்..அலெர்ட்டான ஓபன் ஏஐ-ன் நச் பதிலடி...
மஸ்கா போட நினைத்த எலான் மஸ்க்..அலெர்ட்டான ஓபன் ஏஐ-ன் நச் பதிலடி...
"ஒற்றுமையை வலுப்படுத்தும் காசி தமிழ் சங்கமம்" பிரதமர் மோடி பேச்சு!
திருமண நிகழ்ச்சிக்கு கூப்பிட்ட மனைவி! கணவர் செய்த செயலால் இரண்டு உயிர்கள் பலி!
திருமண நிகழ்ச்சிக்கு கூப்பிட்ட மனைவி! கணவர் செய்த செயலால் இரண்டு உயிர்கள் பலி!
இபிஎஸ்க்கு கண்டிஷன்! முதல்வர் ஸ்டாலின் கூட்டத்தில் செங்கோட்டையன்! வெளியான காரணம்!
இபிஎஸ்க்கு கண்டிஷன்! முதல்வர் ஸ்டாலின் கூட்டத்தில் செங்கோட்டையன்! வெளியான காரணம்!
Chennai Vellore NH: 4 மணி நேரம் வேண்டாம்..! வேலூருக்கு இரண்டரை மணி நேரம் போதும், சென்னை டூ பெங்களூரு 4 வழிச்சாலை  - முழு விவரம்
Chennai Vellore NH: 4 மணி நேரம் வேண்டாம்..! வேலூருக்கு இரண்டரை மணி நேரம் போதும், சென்னை டூ பெங்களூரு 4 வழிச்சாலை - முழு விவரம்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.