மேலும் அறிய

‌Manarkeni: இனி இணையத்திலும் மணற்கேணி செயலி; போட்டித் தேர்வுகளுக்கு காணொலிகள், விளக்கப் பாடங்கள்- பயன்படுத்துவது எப்படி?

மாணவர்களுக்கு வகுப்பறையில் உள்ள ஸ்மார்ட் போர்டில் திரையிட்டு பாடங்களை நடத்தியஆசிரியர்கள் இனி இணையம் வாயிலாக பாடங்களை நடத்தலாம். காட்சிரீதியாகப் பாடங்கள் இருப்பதால் மாணவர்களுக்கு கற்றல் எளிதாகும்.

பள்ளி மாணவர்களுக்கென தமிழ்நாடு அரசு வெளியிட்ட மணற்கேணி செயலி புதிய வடிவமெடுத்திருக்கிறது. காணொலிப் பாடங்கள் அடங்கிய மணற்கேணியை இனி கணினித் திரை உட்பட பல பெரிய திரைகளிலும் இணையதளத்திலும் காணலாம். மணற்கேணி இணையதளத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

இணையதளம் வாயிலாக பாடங்களை நடத்தலாம்

மணற்கேணி ஆசிரியர்களுக்கு துணைக் கருவியாகப் பயன்படக்கூடிய ஒன்று. மணற்கேணி செயலியை தரவிறக்கம் செய்து அதில் உள்ள பாடங்களை மாணவர்களுக்கு வகுப்பறையில் உள்ள ஸ்மார்ட் போர்டில் திரையிட்டுக் காட்டி பாடங்களை நடத்தி வந்த ஆசிரியர்கள் இனி இணையதளம் வாயிலாக பாடங்களை நடத்தலாம். காட்சிரீதியாகப் பாடங்கள் இருப்பதால் மாணவர்களுக்கு கற்றல் மேலும் எளிதாகும்.

மணற்கேணி செயலி உலகின் எந்த மூலையில் இருந்தும் ஆசிரியர்கள், மாணவர்கள் என எவர் வேண்டுமானாலும் பயன்படுத்தும் வகையில் ஓபன் சோர்ஸ் ஆக வெளியிடப்பட்டது. இப்போது இணையதளம் மூலமாகவும் பயன்படுத்தலாம் என்பதால் அலைபேசி வாயிலாகவும் கணினி வாயிலாகவும் இதனை பயன்படுத்தலாம். இதன் எளிமையான பயன்பாடு இதன் நோக்கத்தை பறைசாற்றும்.

மணற்கேணி இணையதளத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் என இரு மொழிகளிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாநிலப் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களை பல பாடப்பொருள்களாக, வகுப்புகள் தாண்டி வகைபிரித்து அதற்கேற்றபடி காணொலி வாயிலான விளக்கங்களை உருவாக்கி அளித்திருக்கிறது கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான மாநில கவுன்சில் (எஸ்.சி.இ.ஆர்.டி) நிறுவனம்.  இதன்கீழ் உருவாக்கப்பட்டுள்ள காணொலிகள் பாடப்பொருள்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

6, 7, 8, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கான அறிவியல், கணிதம், ஆங்கிலம், இயற்பியல், வேதியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களில் முதற்கட்டமாக பாடப்பொருள்கள் காணொலியாக தரப்பட்டுள்ளன.

புரிதல் திறனை சரிபார்க்கும் வசதி

ஒவ்வொரு காணொலியின் முடிவிலும் வினாடி-வினா வாயிலாக மாணவர்களின் புரிதல் திறனை சரி பார்க்கும் வசதியும் உள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் நடத்திய பாடம் முறையாகப் புரிந்திருக்கிறதா என சரிபார்த்துக்கொள்ள முடியும். முதல்

கேள்வி எளிமையாகத் தொடங்கி படிப்படியாக விடையளித்துக் கொண்டே வருகையில் கொஞ்சம் கொஞ்சமாக கேள்விகளின் கடினத் தன்மை கூடிக் கொண்டே வரும்.  ஒவ்வொரு கேள்விக்குமான விரிவான விடைகளும் காணக் கிடைக்கும். ஏதேனும் ஓரிடத்தில் மாணவர்களுக்கு புரிந்து கொள்ள சிரமமாக உள்ளது எனில் ஆங்காங்கே அவர்களுக்கான உதவிக் குறிப்புகளும் உண்டு.

மணற்கேணியில் உள்ள காணொலிப் பாடங்கள் முறையான கற்றல் பயணத்திற்கு வழிவகுக்கின்றன. Laddered Learning approach எனப்படும் அணுகுமுறை இதில் கையாளப்பட்டுள்ளது. அதாவது எடுத்துக்காட்டாக, பன்னிரண்டாம் வகுப்பில் வரும் ஒரு பாடப்பொருளை முறையாகப் புரிந்து கொள்ள ஆறாம் வகுப்பில் அதற்கான அடிப்படைப் பாடம் இருக்கிறது என்றால் அதைப் படித்துப் புரிந்துகொண்டுவிட்டு பின் ஏழாம் வகுப்பில் அது குறித்துப் பாடமிருந்தால் அதையும் படித்துவிட்டு படிப்படியாக பன்னிரண்டாம் வகுப்புப் பாடப்பொருளுக்கு வரலாம். இதன்மூலம் பாடங்களை எளிதில் புரிந்துகொள்வதற்கும் எதையும் விட்டுவிடாமல் படிப்பதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. திரையில் தொழில்நுட்பக் கலைச் சொற்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் காணலாம். கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்பாட்டை மணற்கேணி மிகவும் மகிழ்ச்சிகரமானதாக மாற்றும்.

போட்டித் தேர்வுகளை எளிதில் எழுதலாம்

இப்படிப் பயிற்றுவிப்பதன் வாயிலாக பொதுத் தேர்வில் கேட்கப்படும் எந்த வகையான கேள்விகளுக்கும் மாணவர்கள் எளிதாக விடையளிக்க முடியும். அது மட்டுமல்லாமல் ஜே.ஈ.ஈ போன்ற அகில இந்திய நுழைவுத் தேர்வுகளுக்கும் எளிதில் தயாராக முடியும். கடந்த பல ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினாக்கள் அடங்கிய வினா- விடை வங்கி ஒன்றும் உண்டு. போட்டித் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள், கல்வி உதவித்தொகைக்கான தேர்வுகள் என அனைத்தையும், மணற்கேணியை துணைக்கருவியாகக் கொண்டு பாடங்களை கற்பிப்பதன் மூலம் மாணவர்களை மிக எளிதாக ஆசிரியர்கள் வெற்றிகொள்ள வைக்க முடியும்.

இந்தக் காணொலிகள் 2டி மற்றும் 3டி அனிமேஷன் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன என்பதால் கற்போர் உடனடியாகப் புரிந்து கொள்வதற்கும் புரிந்து கொண்டவற்றை நீண்ட காலம் நினைவில் வைத்துக் கொள்வதற்கும் உகந்தவை.

சந்தேகங்களை உடனுக்குடன் தெளிவுபடுத்திக் கொள்ளும் விளக்கப்படங்கள் உள்ளதாலும் கற்றல் முற்றிலும் ஜனநாயகப்படுத்தப்பட்டுள்ளது எனலாம். அனைத்துக் காணொலிகளையும் கேள்விகளையும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அவற்றை தரவிறக்கம் செய்து கொள்ள கடவுச்சொல் எதுவும் தேவையில்லை.  எந்தத் தடையும் இன்றி மிக எளிதாக அவற்றை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். 

மணற்கேணி இணையதள முகவரி: https://manarkeni.tnschools.gov.in

அலைபேசியில் மணற்கேணி செயலியை ப்ளே ஸ்டோரில் தேடவேண்டுமெனில் TNSED Manarkeni என்று உள்ளீடு செய்து தேடவேண்டும். இதுவரையிலும் 2,00,000 முறை இச்செயலி தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget