திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் முதுகலை ஆங்கிலப் பட்டப்படிப்பு
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் கடந்த ஆண்டு முதுகலை ஆங்கிலப் படிப்பிற்கான திட்டம் தொடங்கப்பட்டது.
2021-22 கல்வியாண்டிற்கான முதுகலை ஆங்கிலப் (மொழி மற்றும் இலக்கியம்) (M.A. English Language and Literature) பட்டப்படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT–T) தெரிவித்துள்ளது.
திருச்சி தேசிய தொழில் நுட்பக் கழகத்தின் மனிதநேயம் மற்றும் சமூகஅறிவியல் துறைத் தலைவர் டாக்டர்.எஸ்.மேகலா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
" மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு ஏற்ப கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விக்கிடையிலான வேறுபாடுகளை நீக்கும் பொருட்டு, திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் கடந்த ஆண்டு முதுகலை ஆங்கிலப் படிப்பிற்கான திட்டம் தொடங்கப்பட்டது.
இம்முதுகலைக் கல்வியானது, மாணவர்களுக்கு நடைமுறை பாடத்திட்டத்தை உயர்தொழில்முறைக் கல்விக்கேற்ப வழங்குகிறது. இது, மாணவர்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையின் சவால்களை எதிர்கொண்டு, தங்களின் நுண்சிந்தனையையும், படைப்பாக்கச் சிந்தனை திறன்களையும், உயர்தரவரிசை சிந்தனை திறன்களையும் வளர்த்துக் கொள் உதவும்.
மனிதநேயம் மற்றும் சமூகஅறிவியல் (Humanities and Social Sciences) துறையில் பணிபுரியும் ஆசியர்கள் அனைவரும் தங்களின் துறையில் மேலோங்கி நிற்கும் அறிஞர்கள், அவர்கள் அர்ப்பணிப்போடு கற்பித்து மாணவர்களுக்கு வழிகாட்டியாக திகழ்கிறார்கள். மேலும் தனிச்சிறப்புடனும், தனித்துவத்துடனும் தங்கள் துறையில் ஆராய்ச்சி செய்யும் வல்லமை படைத்தவர்கள் ஆவர்.
இப்படிப்பட்ட ஆசிரியர்களிடம் கற்று, திறன்களை செம்மையாக்க, திருச்சி தேசிய தொழில் நுட்பக் கழகத்தில் வழங்கப்படும் அரிய வாய்ப்பினை ஆர்வமுள்ள மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
விண்ணப்பம் 2021 ஏப்ரல் 30 அன்று மாலை 5.00 மணிக்கு நிறைவடைகிறது. மேலும் விவரங்களுக்கு: Contact Mail ID : maenglishnitt@gmail.com Mobile no. : 9486001130 Phone no. : +91-431-2503690 / 2503691.
மேலும், விவரங்களுக்கு இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.