மேலும் அறிய

சூப்பர் சம்பளத்தில் LIC-இல் 218 பணியிடங்கள்; ஆன்லைன் தேர்விற்கான தேதி அறிவிப்பு!

கடந்த ஏப்ரல் 4, 2020 அன்று ஆன்லைனில் எழுத்துத்தேர்வு நடத்தி, தகுதியுள்ள நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் சார்பில் அறிவிப்பு வெளியாகியிருந்தது.

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் எனப்படும் எல்ஐசியில் உதவிப்பொறியாளர்கள் மற்றும் உதவி நிர்வாக அதிகாரிப் பணியிடங்களை நிரப்புவதற்கானத்  தேர்வு ஆகஸ்ட் 28-ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய மக்கள்  காப்பீடு செய்யவேண்டும் என்று நினைத்தாலே முதலில் அவர்களின் நினைவுக்கு வருவது எல்ஐசி மட்டும் தான். அந்தளவிற்கு மக்களின் நம்பிக்கையினை பல ஆண்டுகளாக பெற்றுள்ளது. மத்திய அரசின் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் பல்வேறு துறைகளின் கீழ் பலர் பணிபுரிந்துவரும் நிலையில், உதவிப்பொறியாளர் மற்றும் உதவி நிர்வாக அதிகாரி என 218 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியிருந்தது. உதவிப்பொறியாளர் (AE) பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிஇ, பி.டெக் அல்லது பி.ஆர்க், எம்இ அல்லது எம்.டெக் முடித்திருக்க வேண்டும் எனவும், உதவி நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கு ஏதாவது ஒரு துறையில் இளங்கலை மற்றும் பணி அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்பணியிடங்களுக்கு மேற்கண்ட தகுதியும் ஆர்வமும் உள்ள  நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டிருந்தது.

சூப்பர் சம்பளத்தில் LIC-இல் 218 பணியிடங்கள்; ஆன்லைன் தேர்விற்கான தேதி அறிவிப்பு!

மேலும் கடந்த ஏப்ரல் 4, 2020 அன்று ஆன்லைனில் எழுத்துத்தேர்வு நடத்தித் தகுதியுள்ள நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் சார்பில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. ஆனால் கொரோனா தொற்றின் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட தேதியில் தேர்வு நடைபெறவில்லை. இந்நிலையில் தான் மீண்டும் உதவிப்பொறியாளர் (Assistant Engineer) மற்றும் உதவி நிர்வாக அதிகாரிக்களுக்கான ( Assistant administrative officer) ஆன்லைன் தேர்வு வருகின்ற ஆகஸ்ட் 28, 2021 அன்று நடைபெறும் என தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஆர்வமுள்ள விண்ணப்பத்தாரர்கள் மேலும் புதுப்பிப்புகளுக்கு  எல்ஐசியில் அதிகாரப்பூர்வ வலைத்தளமான - licindia.in என்பதில் தெரிந்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு நடைபெறும் விதிமுறைகளையும் அறிவித்துள்ளது. எனவே இந்நேரத்தில் எப்படி தேர்வு நடைபெறும் என இங்கு நாம் தெரிந்துகொள்வோம்.

எல்ஐசியில் பல்வேறு பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வு நடைபெறும் முறை:

எல்ஐசியில் உதவிப்பொறியாளர் மற்றும் உதவி நிர்வாக அதிகாரியாக வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஆன்லைன் மூலம் முதன்மைத்தேர்வு மற்றும் பிரதானத்தேர்வு ( preliminary and main exam) நடைபெறும். முதலில்,முதன்மைத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்தத் தேர்விற்கு தகுதியாவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதன்மைத்தேர்வில் 100 கேள்விகள் multiple-choice questions ஆக கேட்கப்பட்டிருக்கும். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கேள்விகள் இடம் பெற்றிருக்கும். இதில் தேர்ச்சிப்பெற்றால் மட்டுமே  அடுத்ததாக பிரதானத்தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

சூப்பர் சம்பளத்தில் LIC-இல் 218 பணியிடங்கள்; ஆன்லைன் தேர்விற்கான தேதி அறிவிப்பு!

பிரதானத் தேர்வின் வடிவம் ( Main exam format)

முதன்மை தேர்வில் தேர்ச்சிப்பெற்றவர்களுக்கு பிரதான தேர்வு நடைபெறும். MCQs and descriptive type ல் கேள்விகள் இடம் பெற்றிருக்கும். இதற்கு 300 மதிப்பெண்கள் வழங்கப்படும்.  முதன்மை மற்றும் பிரதானத் தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு அடுத்தப்படியாக நேர்காணல், ஆவண சரிப்பார்ப்பு மற்றும் மருத்துவத்தேர்வு நடைபெறும். இதில் அனைத்தும் தேர்ச்சிப்பெற்றால் மட்டுமே எல்ஐசியில் உதவிப்பொறியாளர் மற்றும் உதவி நிர்வாக அதிகாரியாக பணியமர்த்தப்படுவார்கள். இவர்களுக்கு மாதம் ரூ.57 சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்:ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
EPS:
EPS: "விவசாயிகளுக்கு பச்சைத் துரோகி நானா?" ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Embed widget