மேலும் அறிய

Competency Test: பள்ளி மாணவர்களுக்கு திறன்வழி மதிப்பீட்டு தேர்வு நாளை தொடக்கம்; எதற்கு? எப்படி?

அரசுப் பள்ளிகளிலும் 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கற்றல் திறனை அறிந்துகொள்ள மாதம் ஒருமுறை கற்றல்‌ விளைவு / திறன்வழி மதிப்பீட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்தத் தேர்வு நாளை தொடங்குகிறது. 

தமிழ்நாட்டின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கற்றல் திறனை அறிந்துகொள்ள மாதம் ஒருமுறை கற்றல்‌ விளைவு / திறன்வழி மதிப்பீட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்தத் தேர்வு நாளை தொடங்குகிறது. 

தமிழ்நாடு அரசின்‌ சார்பில் “மாநில மதிப்பீட்டுப் புலம்‌” செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக அனைத்து அரசுப்‌ பள்ளிகளிலும்‌ கற்றல்‌ விளைவு / திறன்‌ வழி மதிப்பீட்டுத்‌ தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில் தமிழ்நாட்டில்‌ உள்ள அனைத்து அரசுப்‌ பள்ளிகளிலும்‌ நாளை முதல்‌ 20.10.2023 வரை படிப்படியாக 6 முதல்‌ 9 ஆம்‌ வகுப்பு மாணவர்களுக்கான கற்றல்‌ விளைவு / திறன்‌ வழி மதிப்பீட்டுத் தேர்வுகளை (Learning Outcome / Competency Based Test) நடத்தப்பட உள்ளது. இந்த மதிப்பீட்டுத்‌ தேர்வுகளுக்கான வினாத்தாள்கள்‌ அனைத்தும்‌ மாநில மதிப்பீட்டுப்‌ புலம்‌ வழியாக https://exam.tnschools.gov.in என்னும்‌ இணையதளத்தில்‌ முன்கூட்டியே பதிவேற்றம்‌ செய்யப்படும்‌.

தேர்வு நடைபெறும்‌ நாளுக்கு ஒரு நாள்‌ முன்பாக பிற்பகல்‌ 2 மணி முதல்‌ அடுத்த 23 மணி நேரத்துக்குள்‌ அனைத்து அரசுப்‌ பள்ளிகளிலும்‌ வினாத்தாள்களைப்‌ பதிவிறக்கம்‌ செய்திருக்க வேண்டும்‌. வினாத்தாள்களைப்‌ பதிவிறக்கும்போது ஏற்படும்‌ சிக்கல்களுக்குத்‌ தீர்வு காண 14417 என்ற கட்டணமில்லாத்‌ தொலைபேசி‌ சேவையைப்‌ பயன்படுத்தலாம்‌.

தேர்வு தொடங்கும்‌ நாளுக்கு முன்னதாகவே, பள்ளிக் கல்வித்துறையின்‌ சார்பில்‌ அனைத்து அரசுப்‌ பள்ளிகளுக்கும்‌ வழங்கப்பட்டுள்ள அச்சுப் பொறியைப்‌ பயன்படுத்தி மாணவர்களின்‌ எண்ணிக்கைக்கு ஏற்ப வினாத்தாள்களை வகுப்பாசிரியர்கள்‌ அச்சிட்டு வைத்திருக்க வேண்டும்‌.

தேர்வு எப்படி?

ஒவ்வொரு கற்றல்‌ விளைவு / திறன்‌ வழி மதிப்பீட்டுத்‌ தேர்வும்‌ (Learning Outcome / Competency Based Test)  25 கொள்குறி வகை வினாக்களைக்‌ கொண்டிருக்கும்‌. ஒவ்வொரு வினாவும்‌ ஒரு மதிப்பெண்ணைக்‌ கொண்டிருக்கும்‌. இவற்றை 40 நிமிடத்தில்‌ முடிக்க வேண்டும். ‌ ஒவ்வொரு மாணவருக்கும்‌ தனித்தனியே அச்சடித்த வினாத்தாள்களை வழங்கி அதற்கான விடைகளை அத்தாள்களிலேயே மாணவர்களைக்‌ குறிப்பிடச்‌ செய்ய வேண்டும்‌. இத்தேர்வை வகுப்பாசிரியர்‌ அவரது பாடவேளையில்‌ தவறாமல்‌ நடத்த வேண்டும்‌.

இத்தேர்வுக்கான வினாக்கள்‌ அந்தந்த வகுப்புகளுக்கான தமிழ்‌, ஆங்கிலம்‌, கணிதம்‌, அறிவியல்‌, சமூக அறிவியல்‌ ஆகிய பாடங்களுக்காக அந்நாள் வரை வகுப்பறையில்‌ கற்பிக்கப்பட்ட கற்றல்‌ விளைவுகளின்‌ அடிப்படையில்‌ அமைந்திருக்கும்‌. எவ்விதக்‌ குறுக்கீடும்‌ இன்றி மாணவர்கள்‌ தாங்களாகவே விடைத் தெரிவுகளை மேற்கொள்வதைத்‌ தலைமையாசிரியர்களும்‌ வகுப்பாசிரியர்களும்‌ உறுதி செய்ய வேண்டும்‌. மாணவர்கள்‌ விடையளித்த வினாத்தாள்களை மீண்டும்‌ பெற்று மதிப்பெண்ணிட்டு வகுப்பாசிரியர்கள்‌ பராமரிக்க வேண்டும்‌.

தொடர் கலந்துரையாடல் முக்கியம்

தேர்வுக்குப்‌ பின்‌ வரும்‌ கற்பித்தல்‌ நாட்களில்‌, இவ்வினாத்தாள்களில்‌ இடம்பெற்றிருக்கும்‌ வினாக்கள்‌, வினா அமைப்பு, தேர்வுகளில்‌ இவ்வகை வினாவை எதிர்கொள்ளும்‌ முறை குறித்து தாங்கள்‌ கற்பிக்கும்‌ பாடத்தினூடாக அனைத்து ஆசிரியர்களும்‌ தங்கள்‌ வகுப்பறையில்‌ மாணவர்களுடன்‌ தொடர்ச்சியாகக்‌ கலந்துரையாட வேண்டும்‌.

மாதாமாதம் தேர்வு

ஒவ்வொரு மாதமும்‌ ஒரு முறை என 6 முதல்‌ 9 வகுப்பு வரை அனைத்து அரசுப்‌ பள்ளிகளிலும்‌ கற்றல்‌ விளைவு / திறன்‌ வழி மதிப்பீட்டுத்‌ தேர்வுகள்‌ (Learning Outcome / Competency Based Test) நடைபெறுவதை அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்களும்‌ உறுதி செய்ய வேண்டும்‌ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
India Squad For Zimbabwe Series Announced: ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
India Squad For Zimbabwe Series Announced: ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
TN Assembly: 'அகல்விளக்கு', 'திசைதோறும் திராவிடம்'- பள்ளிக் கல்வித்துறைக்கு 25 புது அறிவிப்புகள்!- என்னென்ன?
TN Assembly: 'அகல்விளக்கு', 'திசைதோறும் திராவிடம்'- பள்ளிக் கல்வித்துறைக்கு 25 புது அறிவிப்புகள்!- என்னென்ன?
Jayam Ravi: கோலிவுட்டில் அடுத்த விவாகரத்து? கணவர் ஜெயம் ரவி புகைப்படங்களை நீக்கிய மனைவி ஆர்த்தி!
Jayam Ravi: கோலிவுட்டில் அடுத்த விவாகரத்து? கணவர் ஜெயம் ரவி புகைப்படங்களை நீக்கிய மனைவி ஆர்த்தி!
Embed widget