School Holidays: அக்.18 வரை 10 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Karnataka School Holidays: ஆசிரியர் சங்கத்தினர் விடுத்த கோரிக்கையை ஏற்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்காக கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு 10 நாள் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நாளை (அக்.8ஆம் தேதி) முதல் வரும் 18ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்படுகிறது. ஆசிரியர் சங்கத்தினர் விடுத்த கோரிக்கையை ஏற்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
யாரெல்லாம் கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டியதில்லை?
தேர்வுப் பணியில் ஈடுபட்டுள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சமூக மற்றும் சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டியதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கர்நாக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சார்பில் சாதிவாரிக் கணக்கெடுப்பு செப்டம்பர் 22ஆம் தேதி தொடங்கியது. இந்த கணக்கெடுப்பு இன்று (அக்டோபர் 7) முடிவதாக இருந்த நிலையில், மாநிலத்தின் சில பகுதிகளில் அக்டோபர் 12 வரை நீட்டிக்கப்பட உள்ளது. கிரேட்டர் பெங்களூரு பகுதியில் அக்டோபர் 24 வரை இந்த கணக்கெடுப்பு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கணக்கெடுப்புப் பணிகள் காரணமாக, காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை பள்ளிகள் இயங்கும் என்று கூறப்பட்டது. எனினும் பிறகு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.























