Kalai Thiruvizha: நவ.11 முதல் மாவட்ட அளவிலான போட்டிகள்; கலைத் திருவிழா முக்கிய வழிமுறைகள் வெளியீடு!
ஒவ்வொரு வட்டார அளவிலும் ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெற்ற வெற்றியாளர்களைக் கொண்டு மாவட்ட அளவிலான போட்டிகளை 11-11-2024 முதல் 20-11-2024 வரை திட்டமிட்டு நடத்த வேண்டும்.
1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான குறுவள மற்றும் 1 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான வட்டார அளவிலான போட்டிகள் நடத்துதல் சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
வட்டார அளவிலான போட்டிகளை 0௦7-11-2024-குள் திட்டமிட்டு நடத்திடவும், வெற்றி பெற்ற மாணவர்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் 08-11-2024-குள் உள்ளீடு செய்திடல் வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நவம்பர் 11 முதல் மாவட்ட அளவிலான போட்டிகள்
அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வட்டார அளவிலும் ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெற்ற வெற்றியாளர்களைக் கொண்டு மாவட்ட அளவிலான போட்டிகளை 11-11-2024 முதல் 20-11-2024 வரை திட்டமிட்டு நடத்த வேண்டும்.
மேலும், ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று வெற்றியாளர்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் 21-11-2024ற்குள் உள்ளீடு செய்தல் வேண்டும்.
மாவட்ட அளவிலான போட்டிகளில் ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெறும் வெற்றியாளர் மட்டுமே அடுத்த நிலை போட்டியான மாநில அளவிலான போட்டியில் பங்குபெற இயலும்.
மாவட்ட அளவிலான போட்டிகள் :
* 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஒவ்வொரு வட்டாரத்திலும் நடத்தப்பட்ட கலைத்திருவிழா போட்டிகளில் ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெற்ற மாணவர்களைக் கொண்டு (அதாவது ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பிடித்த ஒருவர் அல்லது ஒரு குழு மட்டுமே) மாவட்ட அளவிலான போட்டிகளை அரசுப் பள்ளிகளுக்கு தனியாகவும், அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்குத் தனியாகவும் திட்டமிட்டு நடத்திட வேண்டும்.
* போட்டிகளுக்கு மாணவர்கள் எவரும் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
மாவட்ட அளவிலான போட்டிகள் எங்கு நடத்தப்பட உள்ளன என்ற தகவல் முன்கூட்டியே சார்ந்த பள்ளிகளுக்கு தெரிவிக்கப்படுதல் வேண்டும். மாவட்ட அளவிலான போட்டிகளை திட்டமிட்டு நடத்துவது உதவித்திட்ட அலுவலரின் பொறுப்பாகும்.
* வட்டார அளவிலான போட்டிகளில் வெற்றிப்பெற்று மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு செல்லும் மாணவர்களின் பெற்றோர்களிடமிருந்து ஒப்புதல்கடிதம் (Consent Letter ) கட்டாயமாக பெறப்படுதல் வேண்டும்.
ஆண், பெண் ஆசிரியர்கள் அவசியம்
மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு மாணவ, மாணவியரை அழைத்துச் செல்லும்போது உடன் ஆண் ஆசிரியர் ஒருவர், பெண் ஆசிரியை ஒருவர் செல்லுதல் வேண்டும்.
ஒவ்வொரு வட்டாரத்திலும், அரசுப் பள்ளி மாணவர்களுள், ஒவ்வொரு போட்டியிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மூன்று வெற்றியாளருக்கான படைப்பின் புகைப்படம் & காணொலியின் விவரங்களை எமிஸ் தளத்தில் உள்ளீடு செய்தல் வேண்டும். ஒவ்வொரு போட்டியிலும் முதல் இடம் பெற்ற வெற்றியாளர், அடுத்தநிலைப் போட்டியான மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றவர் ஆவார்.
அதேபோன்று, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுள் ஒவ்வொரு போட்டியிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மூன்று வெற்றியாளருக்கான படைப்பின்' புகைப்படம் மற்றும் காணொலியின் விவரங்களை எமிஸ் தளத்தில் உள்ளீடு செய்தல் வேண்டும், ஒவ்வொரு போட்டியிலும் முதல் இடம்பெற்ற வெற்றியாளர், அடுத்த நிலைப் போட்டியான மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றவர் ஆவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.