JEE Main 2023: ஒரு வாரத்தில் ஜேஇஇ மெயின் தேர்வு; ஹால்டிக்கெட் வெளியீடு எப்போது?
ஜேஇஇ மெயின் தேர்வு ஜனவரி 24ஆம் தேதி தொடங்கும் நிலையில், ஹால்டிக்கெட் வெளியீடு எப்போது என்று கேள்வி எழுந்துள்ளது.
![JEE Main 2023: ஒரு வாரத்தில் ஜேஇஇ மெயின் தேர்வு; ஹால்டிக்கெட் வெளியீடு எப்போது? JEE Main January 2023 Exam In 7 Days; when is Admit Card Download Link? JEE Main 2023: ஒரு வாரத்தில் ஜேஇஇ மெயின் தேர்வு; ஹால்டிக்கெட் வெளியீடு எப்போது?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/17/fb39db9f3cacedb47ae24976bd1dc6321673941850524332_original.webp?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஜேஇஇ மெயின் தேர்வு ஜனவரி 24ஆம் தேதி தொடங்கும் நிலையில், ஹால்டிக்கெட் வெளியீடு எப்போது என்று கேள்வி எழுந்துள்ளது.
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ. தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக ஜேஇஇ மெயின், அட்வான்ஸ்டு என்று பிரித்து நடத்தப்படுகிறது.
இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது. இந்த தேர்வு தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் அசாம், பெங்காலி, கன்னடம், மலையாளம், ஒடிசா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது, இந்தி, ஆங்கிலம், குஜராத்தி ஆகிய மொழிகளில் நடத்தப்பட இருக்கிறது. பிற மொழித் தேர்வர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது. 2023ஆம் ஆண்டு ஜேஇஇ தேர்வின் முதல் அமர்வு (session 1) ஜனவரி 24 முதல் 31 ஆம் தேதி வரை (26ஆம் தேதி நீங்கலாக) நடைபெற உள்ளது. இரண்டாவது அமர்வு ஏப்ரல் மாதத்தில் 6, 8, 10- 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
4 அமர்வுகளில் எதில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளார்களோ, அதைக் கொண்டு மாணவர்கள் தரவரிசைப்படி கல்லூரிகளில் சேரலாம். அதேபோல, கேட்கப்படும் 90 கேள்விகளில் 75 கேள்விகளுக்கு விடையளிக்க முயல வேண்டும். இரண்டாவது அமர்வுக்காக விண்ணப்பப் படிவங்கள் மார்ச் மாதத்தில் வெளியாக உள்ளன. இதற்கிடையே முதல் அமர்வுக்கு, மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பித்தனர்.
புதிய விதிகளை அறிவித்த என்டிஏ
முன்னதாக ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வை எழுத 12ஆம் வகுப்பில் அறிவியல் பிரிவில் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும் என்று என்டிஏ அறிவித்திருந்தது. இந்த நிலையில், குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும் என்ற தகுதியைத் தற்போது என்டிஏ நீக்கியுள்ளது. ’அனைத்துக் கல்வி வாரியங்களிலும் முதல் 20 சதவீத (percentile) மாணவர்கள், 75 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டியதில்லை’ என்று என்டிஏ தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே முதல் அமர்வுக்கு மாணவர்கள் ஜனவரி 12ஆம் தேதி வரை jeemain.nta.nic.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பித்தனர். இந்த நிலையில் ஜனவரி 14 வரை விண்ணப்பத்தில் திருத்தங்களை மேற்கொண்டனர். இந்த நிலையில், ஹால்டிக்கெட் எப்போது வெளியாகும் என்று கேள்வி எழுந்துள்ளது.
ஜனவரி மாத அறிவிப்பை தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்ட நிலையில் இதற்கு மாணவர்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்தனர். குறிப்பாக JEEAfterBoards என்பன உள்ளிட்ட ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் ட்ரெண்டாகின. எனினும் தேசியத் தேர்வுகள் முகமை தேர்வைத் தள்ளி வைக்காதது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் தகவல்களுக்கு: jeemain.nta.nic.in
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)