(Source: ECI/ABP News/ABP Majha)
JEE 2023: ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பதிவிறக்கம் செய்வது எப்படி?
ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு எழுத மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டை ஐஐடி குவாஹட்டி வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் கீழே குறிப்பிட்டுள்ள இணைய முகவரிகளை க்ளிக் செய்து, தேர்வு முடிவுகளைக் காணலாம்.
ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு எழுத மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டை ஐஐடி குவாஹாட்டி வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் கீழே குறிப்பிட்டுள்ள இணைய முகவரிகளை க்ளிக் செய்து, தேர்வு முடிவுகளைக் காணலாம்.
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ. தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக ஜேஇஇ மெயின், அட்வான்ஸ்டு என்று பிரித்து நடத்தப்படுகிறது.
இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது. இந்த தேர்வு தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் அசாம், பெங்காலி, கன்னடம், மலையாளம், ஒடிசா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது, இந்தி, ஆங்கிலம், குஜராத்தி ஆகிய மொழிகளில் நடத்தப்பட இருக்கிறது. பிற மொழித் தேர்வர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதும் வசதி செய்யப்பட்டுள்ளது.
2023 தேர்வு எப்போது?
2023ஆம் ஆண்டு ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு ஜூன் 4ஆம் தேதி இரு வேளைகளிலும் நடைபெற உள்ளது. முதல் தாள் காலை 9 மணி முதல் 12 மணி வரை நடைபெற உள்ளது. இரண்டாம் தாள் மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இதற்கு மாணவர்கள் ஏப்ரல் 30 முதல் மே 7ஆம் தேதி வரை விண்ணப்பித்தனர். குறிப்பாகத்தேர்வர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பித்தனர். மே 8ஆம் தேதி வரை விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.
மாணவர்கள் மாணவர்கள் இன்று முதல் (மே 29) நுழைவுச் சீட்டைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.ஹால் டிக்கெட்டைப் பெற தேர்வு நடைபெறும் நாளான ஜூன் 4ஆம் தேதி வரை நேரம் அளிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் 18ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வை ஐஐடி குவாஹாட்டி நடத்துகிறது.
ஹால் டிக்கெட்டைப் பெறுவது எப்படி?
தேர்வர்கள் https://cportal1.jeeadv.ac.in/applicant/ என்ற இணைப்பை க்ளிக் செய்து, ஹால் டிக்கெட்டைப் பெறலாம். இதில், ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு பதிவெண், பிறந்த தேதி, மொபைல் எண் ஆகியவற்றை உள்ளிட வேண்டியது அவசியம்.
அதேபோல https://cportal2.jeeadv.ac.in/ , https://cportal3.jeeadv.ac.in/ , https://cportal4.jeeadv.ac.in/ ஆகிய இணைப்புகளையும் க்ளிக் செய்து, மேற்குறிப்பிட்ட விவரங்களை உள்ளிட்டு ஹால் டிக்கெட்டைப் பெறலாம்.
75 சதவீத மதிப்பெண் விவகாரம்
முன்னதாக ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வை எழுத 12ஆம் வகுப்பில் அறிவியல் பிரிவில் படிக்கும் மாணவர்கள் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும் என்று என்டிஏ அறிவித்திருந்தது. போட்டித் தேர்வுக்கு மட்டுமல்லாமல், 12ஆம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டது.
எனினும் இதை எதிர்த்து மாணவர்கள் சிலர் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும் இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.