(Source: ECI/ABP News/ABP Majha)
JEE Advanced 2022: நாளை தொடங்கும் JEE அட்வான்ஸ்டு தேர்வு - தேர்வர்கள் அறிந்துகொள்ள வேண்டியது என்ன?
நாடு முழுவதும் மத்தியக் கல்வி நிறுவனங்களில் சேர நடத்தப்படும் JEE அட்வான்ஸ்டு தேர்வு நாளை நடைபெற உள்ளது.
நாடு முழுவதும் மத்தியக் கல்வி நிறுவனங்களில் சேர நடத்தப்படும் JEE அட்வான்ஸ்டு தேர்வு நாளை நடைபெற உள்ளது.
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ. தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக ஜேஇஇ மெயின், அட்வான்ஸ்டு என்று பிரித்து நடத்தப்படுகிறது. ஜேஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், அட்வான்ஸ்டு தேர்வை எழுதத் தகுதியானவர்கள்.
இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது. இந்த தேர்வு தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் அசாம், பெங்காலி, கன்னடம், மலையாளம், ஒடிசா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது, இந்தி, ஆங்கிலம், குஜராத்தி ஆகிய மொழிகளில் நடத்தப்பட இருக்கிறது. பிற மொழித் தேர்வர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதும் வசதி செய்யப்பட்டுள்ளது. தேர்வர்களின் வசதிக்கு ஏற்ப, ஜே.இ.இ. தேர்வு ஆண்டுதோறும் நான்கு கட்டங்களாகத் தேசியத் தேர்வுகள் முகமையால் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் வாசிக்கலாம்: NEET UG 2022 Answer Key:ஆக.30-ல் நீட் தேர்வு விடைக் குறிப்புகளை வெளியிட என்டிஏ திட்டம்; ஆட்சேபிப்பது எப்படி?
ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் ஜூலை 11ஆம் தேதி வெளியாகின. இதையடுத்து, ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு நாளை (ஆகஸ்ட் 28ஆம் தேதி) நடைபெற உள்ளது. ஒரே நாளில் இரண்டு தேர்வுகள் நடைபெறுகின்றன. முதல் தாள் காலை 9 முதல் 12 மணி வரையும் இரண்டாவது தாள் மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரை நடைபெற உள்ளது.
தேர்வர்கள் இந்தத் தேர்வுக்கு ஆகஸ்ட் 7 முதல் ஆகஸ்ட் 11 வரை jeeadv.ac.in என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பித்து வந்தனர். ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை ஆகஸ்ட் 23 முதல் பதிவிறக்கம் செய்தனர். தேர்வு நடைபெறும் நாளான ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்யலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.
தேர்வு முடிவுகள் செப்டம்பர் 11 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு குறித்த முழுமையான கால அட்டவணையை https://jeeadv.ac.in/schedule.html என்ற இணைய முகவரி மூலம் தேர்வர்கள் அறிந்துகொள்ளலாம்.
ஜேஇஇ மெயின் தேர்வின் தரவரிசையின் அடிப்படையில் இந்திய தொழில்நுட்பக் கழகங்களுக்கான (IIT's) மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க: TAHDCO Loan Scheme: அம்மாடி இத்தனை திட்டங்களா?- தாட்கோ மூலம் அரசு வழங்கும் லட்சக்கணக்கான நிதியுதவி