மேலும் அறிய

NEET UG 2022 Answer Key:ஆக.30-ல் நீட் தேர்வு விடைக் குறிப்புகளை வெளியிட என்டிஏ திட்டம்; ஆட்சேபிப்பது எப்படி?

ஓஎம்ஆர் விடைத் தாளின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் தேவைப்படும் நபர்களும் ரூ.200 பணத்தைச் செலுத்தலாம். இந்தப் பணம் திருப்பித் தரப்படாது.

இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்காக நடத்தப்பட்ட நீட் தேர்வுக்கான உத்தேச விடைக் குறிப்புகளை ஆகஸ்ட் 30ஆம் தேதி அன்று வெளியிட தேசியத் தேர்வுகள் முகமை திட்டமிட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகள் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகும் என்றும் என்டிஏ அறிவித்துள்ளது. 

முன்னதாக, கடந்த ஜூலை 17-ம் தேதி நாடு முழுவதும் பி.டி.எஸ். எனப்படும் பல் மருத்துவம் மற்றும் எம்.பி.பி.எஸ். எனப்படும் இளங்கலை மருத்துவ படிப்புகள் உள்ளிட்டவற்றுக்காக நீட் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுத நாடு முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரத்து 343 மாணவர்கள் விண்ணப்பித்தனர். நீட் தேர்வை மொத்தம் 17 லட்சத்து 78 ஆயிரத்து 725 பேர் எழுதினர்.

இந்த தேர்வு நாடு முழுவதும் மொத்தம் 543 நகரங்களில் அமைக்கப்பட்ட 3 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றது. நீட் தேர்வு இந்தியாவில் உள்ள நகரங்கள் மட்டுமின்றி வெளிநாட்டில் உள்ள மாணவர்கள் இந்தியாவில் மருத்துவம் படிப்பதற்காக முதல்முறையாக நடத்தப்பட்டது. குறிப்பாக கொழும்பு, காத்மாண்டு, பாங்காக், கோலாலம்பூர், சிங்கப்பூர், துபாய், அபுதாபி, மஸ்கட், ஷார்ஜா, குவைத், தோஹா, மனாமா, ரியாத், லாகோஸ் நகரங்களிலும் நடத்தப்பட்டது.

இந்நிலையில், நீட் தேர்வுக்கான உத்தேச விடைக் குறிப்புகளை ஆகஸ்ட் 30ஆம் தேதி அன்று வெளியிட தேசியத் தேர்வுகள் முகமை திட்டமிட்டுள்ளது. உத்தேச விடைக் குறிப்பில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், தேர்வர்கள் தெரிவிக்கலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது. 

ஆட்சேபனை செய்வது எப்படி?

தேர்வர்கள் ரூ.200 பணத்தைச் செலுத்தி குறிப்பிட்ட விடையை ஆட்சேபனை செய்யலாம். இந்தப் பணம் திருப்பித் தரப்படாது. 

ஓஎம்ஆர் விடைத் தாளின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் தேவைப்படும் நபர்களும் ரூ.200 பணத்தைச் செலுத்தலாம். இந்தப் பணமும் திருப்பித் தரப்படாது. தேர்வர்களின் வசதிக்கு ஏற்ப, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது அளித்த மெயில் ஐடிக்கும் ஓஎம்ஆர் விடைத் தாளின் ஸ்கேன் அனுப்பப்படும். 

NEET UG 2022 Answer Key:ஆக.30-ல் நீட் தேர்வு விடைக் குறிப்புகளை வெளியிட என்டிஏ திட்டம்; ஆட்சேபிப்பது எப்படி?

தேர்வர்கள் இதை மேற்கொள்வது எப்படி?

* நீட் தேர்வை எழுதியவர்கள் http://neet.nta.nic.in என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும். 

* Download answer key என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும். 
* விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லைக் கொண்டு லாகின் செய்ய வேண்டும். 
* NEET UG 2022 answer key என்ற பெயரில் பிடிஎஃப் விடைக்குறிப்பு தோன்றும். 
* அதைத் தரவிறக்கம் செய்து, பிற்காலப் பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளலாம். 

இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகே தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone :  வானிலையில் ஏற்பட்ட திடீர் டிவிஸ்ட்.. உருவாகும் ஃபெங்கல் புயல்.. வானிலை மையம் தகவல்
Fengal Cyclone : வானிலையில் ஏற்பட்ட திடீர் டிவிஸ்ட்.. உருவாகும் ஃபெங்கல் புயல்.. வானிலை மையம் தகவல்
Fengal Cyclone LIVE: மக்களே உஷார்! உருவாகும் ஃபெங்கல் புயல்.. வெளுக்க போகும் மழை
Fengal Cyclone LIVE: மக்களே உஷார்! உருவாகும் ஃபெங்கல் புயல்.. வெளுக்க போகும் மழை
தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது: மோடிக்கு பறந்த கடிதம்! கறார் காட்டும் முதல்வர் ஸ்டாலின்
தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது: மோடிக்கு பறந்த கடிதம்! கறார் காட்டும் முதல்வர் ஸ்டாலின்
TN Jobs: தேர்வே கிடையாது; தமிழக பொதுப்பணி துறையில் 760 காலியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?
TN Jobs: தேர்வே கிடையாது; தமிழக பொதுப்பணி துறையில் 760 காலியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Father Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone :  வானிலையில் ஏற்பட்ட திடீர் டிவிஸ்ட்.. உருவாகும் ஃபெங்கல் புயல்.. வானிலை மையம் தகவல்
Fengal Cyclone : வானிலையில் ஏற்பட்ட திடீர் டிவிஸ்ட்.. உருவாகும் ஃபெங்கல் புயல்.. வானிலை மையம் தகவல்
Fengal Cyclone LIVE: மக்களே உஷார்! உருவாகும் ஃபெங்கல் புயல்.. வெளுக்க போகும் மழை
Fengal Cyclone LIVE: மக்களே உஷார்! உருவாகும் ஃபெங்கல் புயல்.. வெளுக்க போகும் மழை
தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது: மோடிக்கு பறந்த கடிதம்! கறார் காட்டும் முதல்வர் ஸ்டாலின்
தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது: மோடிக்கு பறந்த கடிதம்! கறார் காட்டும் முதல்வர் ஸ்டாலின்
TN Jobs: தேர்வே கிடையாது; தமிழக பொதுப்பணி துறையில் 760 காலியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?
TN Jobs: தேர்வே கிடையாது; தமிழக பொதுப்பணி துறையில் 760 காலியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?
Free Laptop: மாணவர்களுக்கு இலவச லேப்டாப்; ஏஐசிடிஇ அறிவிப்பு- உண்மை என்ன?
Free Laptop: மாணவர்களுக்கு இலவச லேப்டாப்; ஏஐசிடிஇ அறிவிப்பு- உண்மை என்ன?
Schools Colleges Holiday: எங்கெல்லாம் மழை? - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை - மொத்த லிஸ்ட் இதோ!
Schools Colleges Holiday: எங்கெல்லாம் மழை? - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை - மொத்த லிஸ்ட் இதோ!
Madurai: டங்ஸ்டன் எடுக்க எதிர்ப்பு - மேலூர் தாலுகா முழுவதும் கடையடைப்பு
டங்ஸ்டன் எடுக்க எதிர்ப்பு - மேலூர் தாலுகா முழுவதும் கடையடைப்பு
கூட்டு பாலியல் வன்கொடுமை! அந்தரங்க உறுப்பில் மிளகாய் தூள்! - வேதனையின் உச்சிக்கு சென்ற நர்ஸ்! உபியில் கொடூரம்! 
கூட்டு பாலியல் வன்கொடுமை! அந்தரங்க உறுப்பில் மிளகாய் தூள்! - வேதனையின் உச்சிக்கு சென்ற நர்ஸ்! உபியில் கொடூரம்! 
Embed widget