மேலும் அறிய

TAHDCO Loan Scheme: அம்மாடி இத்தனை திட்டங்களா?- தாட்கோ மூலம் அரசு வழங்கும் லட்சக்கணக்கான நிதியுதவி

TAHDCO Loan Scheme Details in Tamil: தாட்கோ ஆதி திராவிட மற்றும் பழங்குடி மக்களுக்கு, பல்வேறு திட்டங்களின்கீழ் லட்சக்கணக்கில் நிதியுதவியை வழங்கி வருகிறது.

TAHDCO Loan Scheme: தாட்கோ எனப்படும் தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம், ஆதி திராவிட மற்றும் பழங்குடி மக்களுக்கு, பல்வேறு திட்டங்களின்கீழ் லட்சக்கணக்கில் நிதியுதவியை வழங்கி வருகிறது.

தாட்கோ என்றால் என்ன? 

தாட்கோ (TAHDCO - Tamil Tamilnadu Adi Dravidar Housing Development Corporation) என்பது தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் என்பதன் சுருக்கம் ஆகும். 

தாட்கோ மூலம் யாருக்கு, என்ன உதவி வழங்கப்படுகிறது?

பல ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட நிலையில் இருக்கும் ஆதி திராவிட மக்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையை மேம்படுத்த, தமிழக அரசு அனைத்து மாவட்டங்களிலும் தாட்கோ அலுவலகங்களை அமைத்து, வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 

முதன்முதலாக கடந்த 1976-ம் ஆண்டு தாட்கோ நிறுவனம் தொடங்கப்பட்டது. அப்போதில் இருந்து மாவட்ட வாரியாக தாட்கோ செயல்பட்டு வருகிறது. ஆதி திராவிடர் மக்களுக்கும் பழங்குடியினருக்கும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள், வங்கிக் கடன் உதவியுடன் வழங்கப்படுகின்றன.

TAHDCO Loan Scheme: அம்மாடி இத்தனை திட்டங்களா?- தாட்கோ மூலம் அரசு வழங்கும் லட்சக்கணக்கான நிதியுதவி

தாட்கோ திட்டத்தின்கீழ் எவற்றுக்கெல்லாம் கடனுதவி வழங்கப்படுகிறது?

* நிலம் வாங்குதல் திட்டம் (Land Purchase Scheme)

* தொழில் முனைவோர் திட்டம் (Entrepreneur Development Programme)

* பெட்ரோல்/ டீசல்/ கேஸ் விற்பனை நிலையம் அமைத்தல் (Setting up of Petrol /Diesel /Gas retail outlet).

* இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம்- Self Employment Programme for Youth (SEPY).

* மருத்துவமனை அமைத்தல் Setting up of Clinic by young Doctors (SEPYC).

* சுய உதவிக் குழுக்களுக்கு பொருளாதார உதவி (Revolving Fund and Economic Assistance to Self Help Groups)

* மின் இணைப்பு விரைந்து பெறுதல் Fast Track Power Supply (E.B. Deposit) Scheme.

* நிலம் மேம்பாட்டுத் திட்டம் (Land Development Scheme).

* ஆட்சியரின் விருப்ப நிதி - Collector’s Discretionary Fund.

* மேலாண்மை இயக்குநரின் விருப்ப நிதி -Managing Director’s Discretionary Fund.

* தாட்கோ தலைவரின் - விருப்ப நிதி -TAHDCO Chairman’s Discretionary Fund.

* சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றோருக்கு நிதியுதவி (Financial Assistance to Civil Services Preliminary Examination passed candidates).

* சட்டக் கல்லூரிப் படிப்பை முடித்தவர்களுக்கு நிதியுதவி - Financial Assistance to Law Graduates to set up their profession.

* டிஎன்பிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றோருக்கு நிதியுதவி  Financial Assistance to Candidates to Appear for TNPSC GROUP-I (MAIN) Examination.

* பட்டயக் கணக்கர் / செலவுக் கணக்கராக மாற நிதியுதவி (Financial Assistance to Chartered Accountant / Cost Accountant to set up their profession).

* சமூக நலத் துறையின் கீழ் செயல்படும் தொழில்துறை தையல் கூட்டுறவு சங்கப் பெண்களுக்கு சிறப்பு உதவி  - Special Assistance to Women Industrial Tailoring Co-op Society functioning under Social Welfare Department.

இவை தவிர துப்புரவுத் தொழிலாளர்கள் நல வாரியம் மூலம் படிப்பு, திருமணம், ஓய்வூதியம், எதிர்பாராத இறப்பு, மரணம் ஆகியவற்றுக்கு நல உதவி வழங்கப்பட்டு வருகிறது. 

TAHDCO Loan Scheme: அம்மாடி இத்தனை திட்டங்களா?- தாட்கோ மூலம் அரசு வழங்கும் லட்சக்கணக்கான நிதியுதவி

தாட்கோ திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க என்ன பொதுவான தகுதிகள் அவசியம்?

* ஆதி திராவிடராக / பட்டியல் இனத்தவராக இருக்க வேண்டும். 

* 18 வயது முதல் 65 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். (சில திட்டங்களுக்கு வயது உச்ச வரம்பு மாறும்)

* குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். குழுக்களுக்கு குழு உறுப்பினர்களின் குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

* கல்வித் தகுதி அவசியம் இல்லை. (சில திட்டங்களுக்கு மாறும்)

எப்படி விண்ணப்பம் செய்வது?

அனைத்து தாட்கோ அலுவலகங்களிலும் தாட்கோ திட்டத்துக்கான விண்ணப்பங்கள் கிடைக்கும். http://application.tahdco.com என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களுடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் என்ன?

* விண்ணப்பதாரர் பற்றிய விவரங்கள்,
* புகைப்படம்,
* சாதிச் சான்றிதழ், 
* குடும்ப ஆண்டு வருமானச் சான்று, 
* குடும்ப அட்டை நகல், 
* வட்டாட்சியரிடம் இருந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் நகல், 
* விண்ணப்பதாரர் ஆதார் எண்,
* தொலைபேசி எண்,
* விண்ணப்பதாரர் மின்னஞ்சல் முகவரி,
* திட்டங்களைப் பொறுத்து பிற ஆவணங்கள்.

விண்ணப்பங்களை நிரப்புவது எப்படி என்று அறிந்துகொள்ள http://application.tahdco.com/img/USER%20MANUAL_TAHDCO_ApplicationSubmission.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து பார்க்கவும். 

பழங்குடியின மக்களின் நலத்திட்டங்களுக்கு: http://fast.tahdco.com/

கூடுதல் தகவல்களுக்கு: http://application.tahdco.com/home/add?

மண்டல வாரியான தொலைபேசி எண்கள்: 

சென்னை மண்டலம்- +91 7448828476

(சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர்)

கோயம்புத்தூர் மண்டலம் - +91 9445029498

திருச்சி மண்டலம்- +91 7448828501

மதுரை மண்டலம் -  +919445029542

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking News LIVE: கள்ளக்குறிச்சி சம்பவம் - தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி சென்னையில் கைது
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி சம்பவம் - தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி சென்னையில் கைது
NEET: தேசிய தேர்வு முகமை தலைவர் நீக்கம்.. முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு..மத்திய அரசு அதிரடி!
தேசிய தேர்வு முகமை தலைவர் நீக்கம்.. முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு..மத்திய அரசு அதிரடி!
GST Rate Change: பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி, ரயில் ப்ளாட்பார்ம், மாணவர் விடுதிகளுக்கு வரி விலக்கு- நிதியமைச்சர்
GST Rate Change: பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி, ரயில் ப்ளாட்பார்ம், மாணவர் விடுதிகளுக்கு வரி விலக்கு- நிதியமைச்சர்
HBD MS Viswanathan: தியேட்டர் ஊழியர் To இசைமேதை.. காற்றிலே கலந்த எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு நாளை பிறந்தநாள்!
தியேட்டர் ஊழியர் To இசைமேதை.. காற்றிலே கலந்த எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு நாளை பிறந்தநாள்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Chennai's Amirtha  : சென்னைஸ் அமிர்தாவின் 8வது பட்டமளிப்பு விழா 250 மாணவர்கள் தேர்ச்சி!Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்Saattai Duraimurugan Kallakurichi : சாட்டை மீது தாக்குதல்! கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!நடந்தது என்ன?Kallakurichi kalla sarayam  :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி சம்பவம் - தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி சென்னையில் கைது
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி சம்பவம் - தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி சென்னையில் கைது
NEET: தேசிய தேர்வு முகமை தலைவர் நீக்கம்.. முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு..மத்திய அரசு அதிரடி!
தேசிய தேர்வு முகமை தலைவர் நீக்கம்.. முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு..மத்திய அரசு அதிரடி!
GST Rate Change: பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி, ரயில் ப்ளாட்பார்ம், மாணவர் விடுதிகளுக்கு வரி விலக்கு- நிதியமைச்சர்
GST Rate Change: பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி, ரயில் ப்ளாட்பார்ம், மாணவர் விடுதிகளுக்கு வரி விலக்கு- நிதியமைச்சர்
HBD MS Viswanathan: தியேட்டர் ஊழியர் To இசைமேதை.. காற்றிலே கலந்த எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு நாளை பிறந்தநாள்!
தியேட்டர் ஊழியர் To இசைமேதை.. காற்றிலே கலந்த எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு நாளை பிறந்தநாள்!
Today Movies in TV, June 23: பீஸ்ட் முதல் பில்லா வரை.. சண்டே ஸ்பெஷல்..டிவியில் என்னென்ன படங்கள்?
பீஸ்ட் முதல் பில்லா வரை.. சண்டே ஸ்பெஷல்..டிவியில் என்னென்ன படங்கள்?
Hinduja Family : ஊழியர்களுக்கு கொடுமை.. சிறை செல்லும் ஹிந்துஜா குடும்பத்தினர்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Hinduja Family : ஊழியர்களுக்கு கொடுமை.. சிறை செல்லும் ஹிந்துஜா குடும்பத்தினர்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
HBD Kannadasan:
HBD Kannadasan: "கண்ணே கலைமானே" தீர்க்கதரிசியாக மாறி கண்ணதாசன் சொன்ன அந்த வார்த்தை!
Crime: காதலிக்க மறுத்த பெண்.. குடும்பத்தினரை போலீசில் சிக்க வைக்க இளைஞர் செய்த சம்பவம்!
Crime: காதலிக்க மறுத்த பெண்.. குடும்பத்தினரை போலீசில் சிக்க வைக்க இளைஞர் செய்த சம்பவம்!
Embed widget