மேலும் அறிய

CA Topper 2023: அம்மாடியோவ்… சிஏ இறுதித் தேர்வில் 77% மதிப்பெண்கள்!- யார் இந்த 22 வயது மாணவர்?

22 வயதான மதூர் ஜெயின், சிஏ இறுதியாண்டு படிப்பை ஆன்லைன் மூலம் படித்துள்ளார். கடின உழைப்பு, பொறுமை, விடாமுயற்சி ஆகியவையே தனது வெற்றிக்குக் காரணம் என்று தெரிவித்துள்ளார். 

சிஏ எனப்படும் பட்டய கணக்காளர் பணிக்கான 2023ஆம் ஆண்டு இடைநிலை மற்றும் இறுதித் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ள நிலையில், இறுதித் தேர்வில் ஜெய்ப்பூர் மாணவர் மதூர் ஜெயின் 77.38 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று இந்தியாவிலேயே முதலிடம் பிடித்துள்ளார். இவர் 800 மதிப்பெண்களுக்கு 619 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.

இந்தியாவில் ஆடிட்டர் எனப்படும் பட்டய கணக்காளர் படிப்புப் படிக்க விரும்புவர்கள், ஐசிஏஐ எனப்படும் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டியது அவசியம் ஆகும். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மத்திய அரசு பட்டயக் கணக்காளருக்கான சான்றிதழை வழங்கும்.

இந்தத் தகுதித் தேர்வு, மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. குறிப்பாக முதல்நிலைத் தேர்வு (Foundation Examination), இடைநிலைத் தேர்வு (Intermediate Examination), இறுதித் தேர்வு (Final Examination) என்ற வரிசையில் இந்தத் தேர்வு நடக்கிறது.

தேர்வு எப்போது?

இதற்கிடையில், சிஏ தேர்வுகள் ஆண்டுதோறும் ஜூன் மாதம், நவம்பர் மாதம் என இரண்டு அமர்வுகளில் நடைபெறுகின்றன. இந்நிலையில் 2023-ம் ஆண்டு நவம்பர் மாத அமர்வுக்கான முதல்நிலைத் தேர்வு டிசம்பர் மாதம் நடைபெற்றது. குறிப்பாக டிசம்பர் 24, 26, 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெற்றது.

இடைநிலைத் தேர்வுகள், குரூப் 1 பிரிவினருக்கு நவம்பர் 2, 4, 6 மற்றும் 8 ஆகிய தேதிகளிலும் குரூப் 2 பிரிவினருக்கு நவம்பர் 10, 13, 15 மற்றும் 17 ஆகிய தேதிகளிலும் நடைபெற்றன. அதேபோல நவம்பர் மாத அமர்வுக்கான சிஏ இறுதித் தேர்வும் இரு வகையாக நடைபெற்றது. குறிப்பாக குரூப் 1 பிரிவினருக்கு நவம்பர் 1, 3, 5 மற்றும் 7 ஆகிய தேதிகளிலும் குரூப் 2 பிரிவினருக்கு நவம்பர் 9, 11, 14 மற்றும் 16 ஆகிய தேதிகளிலும் நடைபெற்றன.

மதூர் ஜெயின்

சிஏ எனப்படும் பட்டய கணக்காளர் பணிக்கான 2023ஆம் ஆண்டு இடைநிலை மற்றும் இறுதித் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ள நிலையில், இறுதித் தேர்வில் ஜெய்ப்பூர் மாணவர் மதூர் ஜெயின் 77.38 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று இந்தியாவிலேயே முதலிடம் பிடித்துள்ளார். இவர் 800 மதிப்பெண்களுக்கு 619 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.

22 வயதான மதூர் ஜெயின், இறுதியாண்டு படிப்பை ஆன்லைன் மூலம் படித்துள்ளார். கடின உழைப்பு, பொறுமை, விடாமுயற்சி ஆகியவையே தனது வெற்றிக்குக் காரணம் என்று தெரிவித்துள்ளார். 

இவரின் சகோதரர் 2020ஆம் ஆண்டு சிஏ தேர்வில் அகில இந்திய அளவில், 6வது இடம் பிடித்தது தனக்கு ஊக்கமளித்ததாகத் தெரிவித்துள்ளார்.  

அவருக்கு அடுத்தப்படியாக மும்பையைச் சேர்ந்த சன்ஸ்க்ருதி அதுல் பரோலியா என்னும் மும்பை மாணவர், 74.88 சதவீத மதிப்பெண்களுடன் இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளார். இவர் 800-க்கு 599 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். திகேந்திர குமார் சிங்கால் மற்றும் ரிஷி மல்ஹோத்ரா ஆகிய இரு மாணவர்களும் 73.75 சதவீத மதிப்பெண்களுடன் மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளனர். இவர்கள் 590 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

இடைநிலைத் தேர்வுகளில் யார் முதலிடம்?

சிஏ இடைநிலைத் தேர்வில், மும்பையைச் சேர்ந்த ஜெய் தேவங் ஜிமுலியா என்ற மாணவர், 86.38 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அகமதாபாத்தைச் சேர்ந்த பகேரியா தனய் 86% மதிப்பெண்களும் சூரத்தைச் சேர்ந்த ரிஷி ஹிமான்ஷுகுமார் மேவாவாலா 83.50% மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Embed widget