மேலும் அறிய

ICAI CA Foundation Results: வெளியானது சிஏ முதல்நிலைத் தேர்வு முடிவுகள்: பார்ப்பது எப்படி? 25%-க்குக் குறைவானவர்களே பாஸ்...! நீங்கள்?

ICAI CA Foundation Results: சிஏ ஜூன் மாத அமர்வுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகளை பட்டயக் கணக்கர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சிஏ ஜூன் மாத அமர்வுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகளை பட்டயக் கணக்காளர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. தேர்வர்கள்  icaiexam.icai.org என்ற இணைப்பை க்ளிக் செய்து, தேர்வு முடிவுகளை அறியலாம். 

இந்தியாவில் ஆடிட்டர் எனப்படும் பட்டய கணக்காளராக ஆசைப்படுவோர், ஐசிஏஐ எனப்படும் பட்டய கணக்காளர்கள் நிறுவனம் நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டியது  கட்டாயம் ஆகும். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மத்திய அரசு பட்டயக் கணக்காளருக்கான சான்றிதழை வழங்கும்.

இந்தத் தகுதித் தேர்வு மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. குறிப்பாக முதல்நிலைத் தேர்வு (Foundation Examination), இடைநிலைத் தேர்வு (Intermediate Examination), இறுதித் தேர்வு (Final Examination) என்ற வரிசையில் நடக்கும். பட்டப் படிப்பை முடித்தவர்கள், முதல்நிலைத் தேர்வை எழுதத் தேவையில்லை. இடைநிலை மற்றும் இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதுமானது. 

அதே நேரத்தில், ஒவ்வொரு பாடத்திலும் 40 சதவீத மதிப்பெண்கள் மற்றும் ஒட்டுமொத்தமாக 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றவர்கள், இடைநிலை மற்றும் இறுதித் தேர்வுகளுக்குத் தகுதியானவர்கள் ஆவர்.

இந்த நிலையில், 2023-ம் ஆண்டு ஜூன் மாத அமர்வுக்கான முதல்நிலைத் தேர்வு ஜூன் மாதம் நடைபெற்றது. குறிப்பாக ஜூன் 24, 26, 28 மற்றும் 30ஆம் தேதி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் 290 தேர்வு மையங்களில் 4 தாள்களுக்குத் தேர்வு நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. 

தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?

* தேர்வர்கள் icaiexam.icai.org" target="_blank"> icaiexam.icai.org , icai.nic.in மற்றும் caresults.icai.org ஆகிய இணைய முகவரிகளை க்ளிக் செய்து, தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். 

* குறிப்பாக மேலே குறிப்பிட்ட இணைய முகவரிக்குச் செல்லவும். அதில், வரிசை எண், பிறந்த தேதி, விண்ணப்ப எண் ஆகியவற்றைப் பதிவு செய்யவும்.  அல்லது https://icai.nic.in/caresult/foundation/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

* உங்களின் பக்கத்தில் தேர்வு முடிவுகள் தோன்றும். 

* அதை க்ளிக் செய்து, பதிவிறக்கம் செய்துகொள்ளவும். 

மொபைல் மூலமாகவும் தேர்வு முடிவுகள்

தேர்வர்கள் மொபைல் எண் மூலமாகவும் தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.குறிப்பாக 57575 என்ற எண்ணுக்கு CAFND XXXXXX (XXXXXX  என்பது தேர்வரின் 6 இலக்க எண் - roll number ஆகும்.) என்று டைப் செய்து அனுப்பி, தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.

தேர்ச்சி எப்படி?

1,03,517 தேர்வர்கள் ஜூன் மாத அமர்வுக்கான முதல்நிலைத் தேர்வை எழுதிய நிலையில், வெறும்  25,860 தேர்வர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 24.98 சதவீதம் ஆகும். இதில் 47,944 மாணவிகள் தேர்வை எழுதி, 11,412 மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது 23.8 சதவீத மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களைப் பொறுத்தவரை, 55,573 பேர் எழுதி, 14,448 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 25.99 சதவீதம் ஆகும்.

கூடுதல் விவரங்களுக்கு: icaiexam.icai.org 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும்" பொங்கலுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து!
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
Chennai Rain: சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Elephant Gandhimathi : யானை காந்திமதிக்கு என்னாச்சு? கதறி அழுத பாகன்! சோகத்தில் நெல்லை மக்கள்!V C Chandhirakumar Profile: செந்தில்பாலாஜி Choice! உடனே OK சொன்ன ஸ்டாலின்.. யார் இந்த சந்திரகுமார்?Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. ஸ்டாலின் வைத்த கோரிக்கை நிறைவேற்றிய ராகுல்!Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும்" பொங்கலுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து!
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
Chennai Rain: சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
அதிமுக வழியில் அண்ணாமலை.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கும் பாஜக!
அதிமுக வழியில் அண்ணாமலை.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கும் பாஜக!
கவர்னர் என்ற திமிரா? ஆவேசமாக டயலாக் பேசிய துரைமுருகன்!
கவர்னர் என்ற திமிரா? ஆவேசமாக டயலாக் பேசிய துரைமுருகன்!
ரயில் முன்பதிவில் முறைகேடுகள்.. புகார் அளிப்பது இனி ரொம்ப ஈஸி!
ரயில் முன்பதிவில் முறைகேடுகள்.. புகார் அளிப்பது இனி ரொம்ப ஈஸி!
அயலக தமிழர்களுக்கு புதிய திட்டம் - அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் 
அயலக தமிழர்களுக்கு புதிய திட்டம் - அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் 
Embed widget