Bank Jobs | 5830 கிளார்க் வங்கிப்பணி இடங்கள் : தமிழகத்திற்கு 268 இடங்கள் ஒதுக்கீடு..!
நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 5830 கிளார்க் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வங்கியில் 5830 கிளார்க் பணி இடங்கள் காலி.. தமிழகத்திற்கு 268 இடங்கள் ஒதுக்கீடு
நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 5830 கிளார்க் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. வங்கிப் பணிகளுக்கான தேர்வை நடத்தும் ஐபிபிஎஸ் நிறுவனம் சார்பில் முக்கிய பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 5830 கிளார்க் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியாகி உள்ளது. இதில், தமிழகத்தில் மட்டும் 268 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இது தொடர்பாக கடந்த ஜூலை 1 ஆம் தேதி அறிவிக்கை வெளியானது.
வயது தகுதி:
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க 1-7-2021 அன்றைய தேதிப்படி 20 முதல் 28 வயது பூர்த்தி ஆனவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-7-1993 முதல் 1-7-2001 வரையிலான காலகட்டத்தில் பிறந்திருக்க வேண்டும். இருப்பினும், அரசு விதிகளின் படி வயது தளர்வு உண்டு.
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். அத்துடன் கணினி சார்ந்த அடிப்படை பயிற்சி படிப்பையும் முடித்திருத்தல் அவசியம். ஆன்லைன் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கடைசி தேதி:
வின்ணப்பிக்க கடைசி தேதி 1-8-2021. விண்ணப்பிக்கும் விதம் பற்றிய விரிவான நடைமுறைகளை https://www.ibps.in/ என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.