Distance MBA, MCA: தொலைதூரக் கல்வியில் எம்பிஏ, எம்சிஏ, எம்எஸ்சி: விண்ணப்பிப்பது எப்படி?- முழுவிவரம்
தொலைதூரக் கல்வியில் எம்பிஏ, எம்சிஏ, எம்எஸ்சி ( CS) படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தொலைதூரக் கல்வியில் எம்பிஏ, எம்சிஏ, எம்எஸ்சி ( CS) படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 24ஆம் தேதி கடைசித் தேதி ஆகும்.
ஆசியாவிலேயே பழமையான கல்வி நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம். சென்னை கிண்டியில் செயல்பட்டுவரும் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி (சிஇஜி) கடந்த 1794-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அவை தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர் கல்வி பட்டப்படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அத்துடன் அண்ணா பல்கலைக்கழகம் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.
பொறியியல் படிப்பிற்கு முக்கியமான பல்கலைக்கழகமான இதன் கீழ் வரும் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் சுமார் 7.5 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்புகளைப் படித்து வருகின்றனர்.
கொரோனா பெருந்தொற்று காரணமாகக் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் கற்பித்தல் பாதிக்கப்பட்டது. ஆன்லைன் மூலம் கற்பித்தல் பணிகள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது நிலை சீராகி வருகிறது. இதற்கிடையே பொறியியல் படிப்புகளோடு எம்பிஏ, எம்சிஏ படிப்புகளையும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
என்ன தகுதி?
* தொலைதூரக் கல்வியில் எம்பிஏ, எம்சிஏ, எம்எஸ்சி ( CS) படிப்பில் சேர, தொலைதூரக் கல்வி நுழைவுத் தேர்வு எனப்படும் Distance Education Entrance Test (DEET) தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். இந்தத் தேர்வு ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெற உள்ளது.
* அல்லது டான்செட் எனப்படும் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET - Tamil Nadu Common Entrance Test) தேர்வெழுதி, தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது
* அதேபோல, 10, 12ஆம் வகுப்பு மற்றும் இளங்கலைப் படிப்புகளை முறையான கல்வி நிறுவனத்தில் முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.
* எனினும் எம்எஸ்சி (சிஎஸ்) படிப்பில் சேர நுழைவுத் தேர்வை எழுத அவசியம் இல்லை.
1.எம்பிஏ - பொது மேலாண்மை
2. எம்பிஏ- தொழில்நுட்ப மேலாண்மை
3. எம்பிஏ - சந்தைப்படுத்தல் மேலாண்மை
4. எம்பிஏ - மனித வள மேலாண்மை
5. எம்பிஏ- நிதிச் சேவைகள் மேலாண்மை
6. எம்பிஏ- சுகாதார சேவைகள் மேலாண்மை
7. எம்பிஏ - விருந்தோம்பல் & சுற்றுலா மேலாண்மை
8. எம்பிஏ - செயல்பாட்டு மேலாண்மை
ஆகிய பிரிவுகளின்கீழ் எம்பிஏ கற்பிக்கப்பட்டு வருகிறது. 2 ஆண்டுகளுக்கு ஆங்கில வழியில் இந்தப் பாடம் கற்பிக்கப்படுகிறது.
விண்ணப்பக் கட்டணம்:
ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து: ரூ.767 கட்ட வேண்டும்.
விண்ணப்பக் கட்டணத்தைப் பூர்த்தி செய்து, மாணவர்கள் THE DIRECTOR, CENTRE FOR DISTANCE EDUCATION, ANNAUNIVERSITY, CHENNAI - 600 025 என்ற முகவரிக்கு விண்ணப்பப் படிவத்தையும் சான்றிதழ்களையும் அனுப்பி வைக்க வேண்டும்.
இதற்கு மாணவர்கள் https://cde.annauniv.edu என்ற இணையதளத்தில் விவரங்களைக் காணலாம். விண்ணப்பித்து, கட்டணத்தைச் செலுத்த ஆகஸ்ட் 24 கடைசித் தேதி ஆகும்.
தொடர்புக்கு: 044 - 2235 7216 / 17 / 21
கூடுதல் தகவல்களை அறிய: https://onlinecde.annauniv.edu/mod/page/view.php?id=30
இ-மெயில்: cdeauadmission@gmail.com