மேலும் அறிய

வீட்டில் தொந்தரவு இன்றி படிக்க செய்ய வேண்டியது என்ன? - பள்ளி மாணவர்களுக்கான ஆலோசனைகள்

study environment: மாணவர்கள் எந்தவித தொந்தரவும் இன்றி வீட்டில் முழு கவனத்துடன் படிக்க செய்ய வேண்டியது என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

study environment: வீட்டில் இருக்கும்போது எந்தவித தொந்தரவுமின்றி படிப்பதற்கு தேவையான, சூழலை உருவாக்குவதற்கான வழிமுறைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

வீட்டில் படிப்பதற்கான சூழல்:

தேவையான உபகரணங்கள் மூலம் குழந்தைகள் படிப்பதற்கு ஏற்ற சூழலை வீட்டிலேயே ஏற்படுத்திக் கொடுப்பது, அவர்களது கற்றல் திறனை மேம்படுத்த மிகவும் உதவிகரமாக இருக்கும்.  வீட்டிலேயே சிறந்த சூழலை உருவாக்குவது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கல்வியில் தீவிரமாக மேற்பார்வையிட உதவும்.  அதோடு,  கல்வியில் சிறந்து விளங்கவும், நேர்மறையான மன ஆரோக்கியம் மற்றும் பயனுள்ள பழக்க வழக்கங்களின் வளர்ச்சிக்கும் பங்களிக்கிறது. இப்படி பல்வேறு நன்மைகளை வழங்கும் படிப்பதற்கு ஏற்ற சூழலை வீட்டிலேயே உருவாக்குவது எப்படி என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

  • படிக்கும் இடத்தை ஒழுங்குப்படுத்துங்கள்:

பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள் மற்றும் எழுதுகோல்கள் போன்றவற்றிற்கு என அறையில் உள்ள அலமாரி போன்றவற்றில் உரிய இடத்தை ஒதுக்குங்கள். இந்த முறை உங்கள் ஆய்வுப் பொருட்களை நெறிப்படுத்துவது மட்டுமின்றி, கவனச்சிதறலின்றி படிப்பதற்கு ஏற்ப மனதளவில் மாணவர்களை தயார்படுத்தும்.

  • வசதியான நாற்காலி & மேசையை பயன்படுத்துங்கள்:

அமர்ந்து படிப்பதற்கு ஏற்ற நாற்காலி, புத்தகங்கள் போன்றவற்றை வைப்பதற்கு ஏற்ப வசதியான மேசைகளை வாங்கி பயன்படுத்துங்கள். படிக்கும்போது ஏற்படும் அசவுகரியத்தை நீக்கவும், கவனச்சிதறலை தடுக்கவும் இந்த முதலீடு உதவும். 

  • கவனச்சிதறலை கட்டுப்படுத்துங்கள்:

செல்போன் பயன்பாட்டை தவிர்த்து தேவையற்ற அறிவிப்புகளை அறிந்துகொள்வதை கட்டுப்படுத்துவதன் மூலம், கவனச்சிதறல் இல்லாத மண்டலத்தை உருவாக்கலாம்.  கவனத்தை சிதறடிக்கும் இணையதளங்களைத் தடுக்கும் சிறப்புப் செயலிகளை பயன்படுத்தலாம்.

  • தேவையான வெளிச்ச வசதி

இயற்கை ஒளியைப் பயன்படுத்த உங்கள் மேசையை ஜன்னலுக்கு அருகில் வைப்பதன் மூலம், படிப்பதற்கு ஏற்ற சூழலை மேலும் மேம்படுத்தலாம். அந்த சூழல் அமையாவிட்டால் உயர்தர செயற்கை விளக்குகளில் முதலீடு செய்யுங்கள்.  அது பிரகாசமாகவும் சூடாகவும் இருக்கும். இது கண் அழுத்தத்தைக் குறைப்பதோடு,  பயனுள்ள கற்றலுக்கான நல்ல வெளிச்சம்  மற்றும் உற்சாகமான சூழலை உருவாக்கும். 

  • அட்டவணையை தயார்படுத்துதல்:

குறிப்பிட்ட நேரங்களில் மனதை ஒருமுகப்படுத்தும் வகையில் வழக்கமான அட்டவணையை உருவாக்குங்கள். இது நேர நிர்வாகத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், உளவியல் தூண்டுதலாகவும் செயல்படுகிறது. இது உங்கள் மூளையை கவனம் செலுத்துவது மற்றும் நேரத்தை பயனுள்ளதாக மாற்றுவதற்கான சமிக்ஞையை வழங்குகிறது.

  • தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம்:

கல்வி சார்ந்த செயலிகள், ஆன்லைன் ஆதாரங்கள் மற்றும் டிஜிட்டல் கருவிகள் ஆகியவை,  படிப்பை  தடையின்றி ஒருங்கிணைக்க உதவுகின்றன. மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பமானது கற்றல் அனுபவத்தை மேலும் சிறப்பாக்க உதவுகிறது. கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்ய மெய்நிகர் ஆய்வுக் குழுக்கள் போன்ற பிற புதுமையான தொழில்நுட்ப கருவியை பயன்படுத்தலாம்.

  • படிக்கும் இடத்தை தனிப்பயனாக்குங்கள்:

ஊக்கமளிக்கும் மேற்கோள்கள், செடிகள் அல்லது கலைப்படைப்புகளுடன், மாணவர்களின் இடத்திற்கு ஏற்ப படிக்கும் இடத்தை தனிப்பயனாக்குங்கள். தனித்துவமான ஆளுமையை பிரதிபலிக்கும் நேர்மறையான மற்றும் வசதியான சூழலை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

11th Results 2024: பிளஸ் 1 தேர்வில் 91.17% பேர் தேர்ச்சி; வழக்கம்போல மாணவிகளே அதிகம்!
11th Results 2024: பிளஸ் 1 தேர்வில் 91.17% பேர் தேர்ச்சி; வழக்கம்போல மாணவிகளே அதிகம்!
TN 11th Exam Result: வெளியானது 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. வீட்டில் இருந்து பார்ப்பது எப்படி?
வெளியானது 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. வீட்டில் இருந்து பார்ப்பது எப்படி?
Breaking News LIVE: திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு கட்டுப்பாடு! - வெளியான அதிரடி உத்தரவு 
Breaking News LIVE: திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு கட்டுப்பாடு! - வெளியான அதிரடி உத்தரவு 
PM Modi's nomination: வாரணாசியில் பிரதமர் மோடி இன்று வேட்புமனு தாக்கல் - 6 கிமீ ரோட் ஷோ, 12 சி.எம்கள் பங்கேற்க திட்டம்
PM Modi's nomination: வாரணாசியில் பிரதமர் மோடி இன்று வேட்புமனு தாக்கல் - 6 கிமீ ரோட் ஷோ, 12 சி.எம்கள் பங்கேற்க திட்டம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Savukku Shankar | Arvind Kejriwal Master Plan | ”டெல்லிக்கு கிளம்புங்க உதய்”பறந்து வந்த அழைப்பு..Rahul Gandhi Marriage | ராகுலுக்கு டும்..டும்..டும்..அக்கா பிரியங்கா ஹேப்பி!  MARRIAGE UPDATEVaaname Ellai | மாறும் LIFESTYLE : PHYSIOTHERAPHY படிப்புக்கு பெருகும் வேலைவாய்ப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
11th Results 2024: பிளஸ் 1 தேர்வில் 91.17% பேர் தேர்ச்சி; வழக்கம்போல மாணவிகளே அதிகம்!
11th Results 2024: பிளஸ் 1 தேர்வில் 91.17% பேர் தேர்ச்சி; வழக்கம்போல மாணவிகளே அதிகம்!
TN 11th Exam Result: வெளியானது 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. வீட்டில் இருந்து பார்ப்பது எப்படி?
வெளியானது 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. வீட்டில் இருந்து பார்ப்பது எப்படி?
Breaking News LIVE: திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு கட்டுப்பாடு! - வெளியான அதிரடி உத்தரவு 
Breaking News LIVE: திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு கட்டுப்பாடு! - வெளியான அதிரடி உத்தரவு 
PM Modi's nomination: வாரணாசியில் பிரதமர் மோடி இன்று வேட்புமனு தாக்கல் - 6 கிமீ ரோட் ஷோ, 12 சி.எம்கள் பங்கேற்க திட்டம்
PM Modi's nomination: வாரணாசியில் பிரதமர் மோடி இன்று வேட்புமனு தாக்கல் - 6 கிமீ ரோட் ஷோ, 12 சி.எம்கள் பங்கேற்க திட்டம்
TN Weather Update: தென் மாவட்டங்களில் கொட்டும் மழை.. எந்தெந்த பகுதிகளில் கனமழை இருக்கும்?
தென் மாவட்டங்களில் கொட்டும் மழை.. எந்தெந்த பகுதிகளில் கனமழை இருக்கும்?
மதுரை மீனாட்சியம்மன் கோயில் வைகாசி வசந்த உற்சவ விழா: சுந்தரேஸ்வரர், அம்மனுக்கு சிறப்பு பூஜை!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் வைகாசி வசந்த உற்சவ விழா: சுந்தரேஸ்வரர், அம்மனுக்கு சிறப்பு பூஜை!
Mumbai Bill Board Accident: மும்பை: புயலில் சரிந்து விழுந்த ராட்சத பேனர்.. பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
மும்பை: புயலில் சரிந்து விழுந்த ராட்சத பேனர்.. பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
Suchitra: ரஜினி காசு கொடுத்தால் தனுஷை கூட வசை பாடுவார்! - பயில்வான் ரங்கநாதனை விளாசிய சுசித்ரா!
ரஜினி காசு கொடுத்தால் தனுஷை கூட வசை பாடுவார்! - பயில்வான் ரங்கநாதனை விளாசிய சுசித்ரா!
Embed widget