மேலும் அறிய

பள்ளிகளில் பாலியல் வன்கொடுமை தடுப்பு; சாட்டையை சுழற்றிய பள்ளிக் கல்வித் துறை! பல்வேறு உத்தரவுகள்!

பள்ளி வளாகங்களில் பாலியல் வன்கொடுமை தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கக் கோரி, தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. 

இதுகுறித்துப் பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறி உள்ளதாவது:

பாலியல் குற்றங்களைத் தடுக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி

  1. பாலியல் குற்றங்கள் நடக்காமல் இருக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றி அனைத்து ஆசிரியர்களுக்கும் இக்கல்வியாண்டில் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும் அடுத்த 6 மாத காலத்திற்குள் முறையான பயிற்சி அளித்தலை உறுதி செய்திட வேண்டும். அதன்பின்னர் 6 மாதத்திற்கு ஒரு முறை புத்தாக்க பயிற்சி அளிக்க வேண்டும்.
  2. மாணவிகள் பயணம் செய்யும் பள்ளி வாகனங்களில் பெண் உதவியாளர்கள் பணியமர்த்தப்பட வேண்டும்
  3. விளையாடுப் போட்டிகள் கலை நிகழ்ச்சிகள், கல்விச்சுற்றுலா போன்ற நிகழ்ச்சிகளுக்கு பெண் ஆசிரியர்களே மாணவிகளை அழைத்துச் செல்ல வேண்டும். தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்டம், சாரண சாரணிய இயக்க முகாம்களில் மாணவிகளுடன் பெண் ஆசிரியர்கள் மட்டுமே தங்குவது உறுதி செய்யப்பட வேண்டும்.

வெளி நபர்கள் அனுமதிக்கப்படக் கூடாது

  1. விடுதியில் தங்கிப் பயிலும் மாணவ/மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்ய விடுதிக்குள் வெளி நபர்கள் அனுமதிக்கப்படக் கூடாது. மேலும், விடுதி பராமரிப்புப் பணிகளுக்காக அனுமதிக்கப்படும் பணியாளர்கள், பெண் விடுதி காப்பாளர்கள் மேற்பார்வையில் மட்டுமே பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட வேண்டும்.
  2. அரசுத்துறைகளால் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளில் தங்கும் இடவசதி ஏற்படுத்தி தரப்படும் நிகழ்வில், மாணவர்களின் பாதுகாப்பு கருதி மாணவர்கள் இவ்வசதியினை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் எழுத்துப் பூர்வமாக பள்ளித் தலைமையாசிரியரால் வழங்கப்பட வேண்டும்.
  3. விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பிற போட்டிகள் நடைபெறும் இடங்களில் மாணவர்கள் பாதுகாப்பாக தங்களுடைய புகார்களை தெரிவிக்கும் வகையில் மாணவர் மனசு பெட்டி கட்டாயம் வைத்திருக்க வேண்டும். மேலும், பாதுகாப்பு குழுவிற்கு பொறுப்பான பெண் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் நியமித்து மாணவர் பாதுகாப்பு சார்ந்து விழிப்புணர்வும் வழங்கிட அறிவுறுத்தப்பட வேண்டும்.உரிய பதிவேடு பராமரிக்கப்பட்டு தினந்தோறும் பெறப்படும். புகார்களை பதிவு செய்து உரிய தொடர் நடவடிக்கையை இக்குழு மேற்கொள்ள தெரிவிக்க வேண்டும்
  4. பள்ளிகளில் மேலும் அதிக அளவில் விழிப்புணர்வு பதாகைகள் முக்கியமான இடங்களில் வைக்கப்பட வேண்டும். இப்பதாகைகளில் Chid Helpline 1098 மற்றும் பள்ளிக் கல்வித்துறை உதவி எண் 14417 ஆகிய உதவி எண்கள் குழந்தைகள் எளிதில் படிக்கும் வண்ணம் பெரிய எழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டும்.

உடனே காவல் துறைக்குப் புகார்

  1. பாலியல் குற்றங்கள் பற்றி குழந்தைகள் புகார் அளித்தாலோ அல்லது பாலியல் குற்றங்கள் பற்றி தெரிய வந்தாலோ, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர்/ஆசிரியர்கள் உடனடியாக காவல் துறைக்கு புகார் அளிக்க வேண்டும். அவ்வாறு புகார் அளித்தவுடன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு அதுகுறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் 'மாணவர் மனசு’ புகார் பெட்டி அனைத்துப் பள்ளிகளிலும் நிறுவப்பட்டு, அது தினசரி பயன்பாட்டில் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். புகார் பெட்டியில் புகாரளிக்கும் குழந்தைகளின் விவரங்கள் வெளிவரக்கூடாது என்பது முக்கியமாகையால், அப்பகுதியில் கண்காணிப்புக் கேமராக்கள் எக்காரணத்தை முன்னிட்டும் பொருத்தப்படக் கூடாது.
  2. அனைத்து திங்கட்கிழமைகளிலும், காலையில் பள்ளியில் நடக்கும் அனைத்து ஏனைய நாட்களிலும், கால காலைவணக்கக் கூட்டங்களில் தலைமை ஆசிரியரும். ஆசிரியர்களும் கலந்துகொள்ள வேண்டும். அதில் சில நிமிடங்கள் குழந்தைகள் பாதுகாப்பு மாணவர் மனசு புகார் பெட்டி மற்றும் குழந்தை பாலியல் வன்கொடுமை பற்றி புகார் அளிக்கும் முறை, குழந்தைகள் பாதுகாப்பில் பள்ளி நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகள் ஆகியவை குழந்தைகள் நன்கு அறியும் வண்ணம் எடுத்துரைக்கப்பட வேண்டும்.
  3. CCTV கண்காணிப்புக் கேமராக்கள் அனைத்துப் பள்ளிகளிலும் குறிப்பாக பள்ளி மாணவ/மாணவிகள் செல்லும் அறைகள், விளையாட்டு மைதானம், வகுப்பறை முகப்பு, உள்ளே வருவது மற்றும் வெளியே செல்வதற்கான வழிகள் மற்றும் பள்ளி வளாகங்களுக்குள் உபயோகிக்கப்படாமல் இருக்கும் இடங்களிலும் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  4. பெண் ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி

பெண் ஆசிரியர்களுக்கு சிறப்பு கவனம் தேவைப்படுகிறவர்களுக்கு. குழந்தை கவனம் அடையாளம் காணப்படுகிறவர்களுக்கு பயிற்சி மிக அவசியம். மேலும், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் எதிர்படும் குழந்தைகள், ஓர் பெற்றோர் உடைய குழந்தைகள், பாதுகாவலர் பராமரிப்பில் உள்ள குழந்தைகள் மற்றும் குழந்தை நல நிறுவனங்களில் உள்ள குந்தைகள் மற்றும் நீண்ட நாட்களாக விடுப்பில் உள்ள குழந்தைகள்,

கழிப்பிடங்கள் பள்ளி நிர்வாகத்தின் மற்றும் பணியாளர்கள் கழிப்பறைகள் ஆய்வுக்குட்படுத்தி மறைவான இடங்கள் மற்றும் பாதுகாப்புள்ள இடங்களை தேர்வு செய்ய வேண்டும். பெண் கழிப்பறைகள் மகளிர் பணியாளர்கள் மட்டுமே தூய்மைப் பணிகளை செய்ய பணிக்கப்பட வேண்டும் கவனம் தேவைப்படும் இடங்களில் ஆசிரியரல்லாத பணியாளர்களை நியமித்து கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உரிய மேற்பார்வைகளில் பெண் தலைமை ஆசிரியர்களால் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பெண் தலைமை ஆசிரியர் இல்லாத பட்சத்தில் உதவி தலைமை ஆசிரியர் மேற்பார்வையிடுதல் வேண்டும்

அனைத்து வகையான ஆய்வகங்கள்/ நூலகங்கள் ஆகியவற்றில் எப்பொழுதும் ஓர் பெண் ஆசிரியர்/பணியாளர் இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.

(Staff Rooms)

ஆண் ஆசிரியர்களின் அறையில், ஆண் பணியாளர் அறையில் குறிப்பாக பெண் குழந்தைகள் செல்வதை அனுமதித்தல் கூடாது. இதனை கட்டாயம் நடைமுறை படுத்த வேண்டும்.

மாற்றுப் பணியாளர்கள்/மேற்கண்ற பணிகளை ஏதேனும் ஓர் பெண் ஆசிரியரிடம் ஒப்படைக்காமல் சுழறி முறையில் நடைமுறை படுத்த வேண்டும். ஏதேனும் பெண் பணியாளர் விடுப்பில் வருகை புரியாமல் இருந்தால் பிரிதொரு பெண் ஆசிரியர்/பணியாளர் தொடர்வதை உறுதி செய்திட வேண்டும்.

சிறப்பு வகுப்புகள் பள்ளி நேரமில்லாமல் நடத்தப்படும் பொழுது குறைவான மாணவர்கள் எண்ணிக்கை இருப்பதால் கண்காணிப்பதை கட்டாயமாக செயல்படுத்த ஓர் பெண் பணியாளர் பொறுப்பாக மாற்றுப் பணியை செய்யவேண்டும் இதை ஒவ்வொரு நாளும் நடைபெற செய்தல் வேண்டும். இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்களை அடையாளம் காண்பதற்கு சிறப்பு கவனம் செலுத்திட வேண்டும்.

தற்காப்பின் ஒரு பகுதியாக குழந்தைகளுக்கு NO>GO>TELL (NO- teaching the child to feel no if the child tells unsafe. Go shout tell someone the child trusts alone the Inadent or shout immediately) என்ற பாதுகாப்பு விதியினை அறியச் செய்தல் வேண்டும். பெண்கள் பயிலும் பள்ளியில் பெண்கள் மட்டுமே இருத்தல் வேண்டும். இருபாலர் பயிலும் பள்ளிகளில் (Co-Education) குறைந்தது 50 சதவீதம் பணியாளர்கள் பெண்களாக இருத்தல் வேண்டும்.

பாலியல் குற்றச் சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்கக்கூடாது என்பதில் அரசு மிகவும் உறுதியாக இருப்பதால், மேற்கூறியவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். இதில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
ABP Premium

வீடியோ

டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
செம்பரம்பாக்கம் ஏரி: வரலாறு காணாத நீர்மட்டம்! 500 கன அடி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
செம்பரம்பாக்கம் ஏரி: வரலாறு காணாத நீர்மட்டம்! 500 கன அடி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
IPL Most Expensive Players: டாப் கியருக்கு போன கொல்கத்தா! ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 5 வீரர்கள்
IPL Most Expensive Players: டாப் கியருக்கு போன கொல்கத்தா! ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 5 வீரர்கள்
IPL 2026 Auction: ரூபாய் 25 கோடி கொடுத்து கேமரூன் கிரீனை வாங்கியது கொல்கத்தா... ஜஸ்ட்டில் மிஸ் செய்த சென்னை!
IPL 2026 Auction: ரூபாய் 25 கோடி கொடுத்து கேமரூன் கிரீனை வாங்கியது கொல்கத்தா... ஜஸ்ட்டில் மிஸ் செய்த சென்னை!
Embed widget