மேலும் அறிய

வெளிநாடு சென்று படிக்க ஆசையா.?! " TOEFL , IELTS , GRE , GMAT " தேர்வுக்கு அரசு அளிக்கும் பயிற்சி பற்றி தெரியுமா ?

" இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.com  என்ற  தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம் "

தமிழ் நாடு  ஆதிதிராவிடர்   வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்   கழகம் (தாட்கோ)   மூலமாக ஆதிதிராவிடர் ,  பழங்குடியினர்  மற்றும்   கிறித்துவ  மதம்  மாறிய  இனத்தைச் சார்ந்தவர்கள்     அயல்நாடு   சென்று    புகழ்பெற்ற   பல்கலைகழகங்களில்  உயர் கல்வி பயில அடிப்படை தகுதியாக  நிர்ணயிக்கப்பட்ட  TOEFL , IELTS , GRE , GMAT  போன்ற தகுதித்  தேர்வுகளுக்கு பயிற்சிகள்  அளிக்கப்படவுள்ளது  என செங்கல்பட்டு  மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

 வெளிநாட்டில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள்

 இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல் நாத் வெளியிட்டுள்ள அறிக்கையில்  தெரிவித்திருப்பதாவது : 

பயிற்சி  திட்டங்கள்

தமிழ் நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும்  மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய  இனத்தை   சார்ந்தவர்கள்  அயல்நாடு சென்று   புகழ்  பெற்ற பல்கலைகழகங்களில்  உயர் கல்வி பயில அடிப்படை தகுதியாக  நிர்ணயிக்கப்பட்ட  TOEFL , IELTS , GRE , GMAT  போன்ற தகுதித்  தேர்வுகளுக்கு பயிற்சி  அளிக்கப்பட உள்ளது.

பெற்றிருக்க வேண்டிய தகுதிகள் என்னென்ன ?

இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய  இனத்தை   சார்ந்தவராக இருக்க வேண்டும். பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும்  பட்டப்படிப்பில்  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  பொறியியல்  மற்றும் மேலாண்மை (Engineering and Management) தூய அறிவியல் மற்றும் பண்பாட்டு அறிவியல்  ( Pure Science and Applied Science) வேளாண் அறிவியல்  மற்றும் பயன்பாட்டு அறிவியல் (Agricultural Science and Medicine) சர்வதேச வர்த்தகம், பொருளதார, கணக்கியல் நிதி, ( International Commerce, Economic, Accounting Finance) மனிதநேயம், சமூக அறிவியல். நுண்கலை சட்டம், கலை மற்றும் அறிவியல், (Humanities, Social Science, Fine Arts, Law and Arts and Science) போன்ற படிப்புகளை  அயல் நாடுகளில்   பயில விரும்புபவராக  இருக்க வேண்டும்.

 குடும்ப வருமானம்

குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும், இப்பயிற்சிக்கான  செலவீனம் தாட்கோவால் வழங்கப்படும். இப்பயிற்சி முடித்து  தேர்ச்சி பெறுவதன் மூலம் மாணாக்கர்கள் தாம் விரும்பும்  அயல் நாடுகளிலுள்ள   கல்வி நிறுவனத்தில்  மேல் படிப்பினை தொடர்வதற்கு வாய்ப்பு பெறலாம் .

இந்த திட்டத்தில் பதிவு செய்வது எப்படி ? 

இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.com  என்ற  தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம் என செங்கல்பட்டு  மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்

தலைப்பு செய்திகள்

வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: மாணவர் தங்கும் விடுதிகள்; மதுரையில் சிறப்பு சட்டக்கல்லூரி- உயர் கல்வித்துறைக்கு என்னென்ன அறிவிப்புகள்?
TN Budget 2026: மாணவர் தங்கும் விடுதிகள்; மதுரையில் சிறப்பு சட்டக்கல்லூரி- உயர் கல்வித்துறைக்கு என்னென்ன அறிவிப்புகள்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Trump on Iran War: “போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
“போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
MG Hector Hawk: 530 கிமீ ரேஞ்ச்.! மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
530 கிமீ ரேஞ்ச்.! மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
Gold Rate Today Aug.5th: அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
Embed widget