மேலும் அறிய

GATE 2025: பொறியியல் கேட் தேர்வு விண்ணப்ப தேதி தள்ளிவைப்பு; இதோ புதிய அட்டவணை!

GATE 2025 Registration: முதுகலை பொறியியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் கேட் தேர்வு பிப்ரவரி 1, 2, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.  

பொறியியல் படிப்புகளுக்கான கேட் (Graduate Aptitude Test in Engineering) தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 24ஆம் தேதி விண்ணப்பப் பதிவு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஆகஸ்ட் 28ஆம் தேதி விண்ணப்பப் பதிவு தொடங்க உள்ளது.

மத்திய அரசுக் கல்வி நிறுவனங்கள் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான். உள்ளிட்ட பொறியியல் மேற்படிப்புகளில் மாணவர்களை அனுமதிக்க கேட்என்ற பெயரில் நுழைவுத் தேர்வை நடத்துகின்றன. இந்த நிலையில் ஐஐடி ரூர்க்கி, 2025ஆம் ஆண்டுக்கான பொறியியல் கேட் தேர்வு அறிவிப்பை அண்மையில் வெளியிட்டது. இதன்படி முதுகலை பொறியியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் கேட் தேர்வு பிப்ரவரி 1, 2, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.  இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் படிக்க முடியும்.  

ஐஐடி ரூர்க்கி நடத்தும் தேர்வு

ஆண்டுதோறும் நடைபெறும் GATE தேர்வை, ஐஐடி கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றோ அல்லது ஐஐஎஸ்சி எனப்படும் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனமோ நடத்தும் நிலையில், 2025ஆம் ஆண்டு தேர்வை ஐஐடி ரூர்க்கி நடத்த உள்ளது. கணினி மூலம் நடைபெற உள்ள 2025 கேட் தேர்வுக்கான மையங்கள் 8 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

முக்கியத் தேதிகள் இவைதான்!

* கேட் தேர்வு 2025 பிப்ரவரி 1, 2, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.  

* செப்டம்பர் 26ஆம் தேதி வரை மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

* அதே நேரத்தில் தாமதக் கட்டணத்தைச் செலுத்தி அக்டோபர் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

* மார்ச் 19ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.

முந்தைய ஆண்டுகளின் கேட் தேர்வு வினாத்தாள்களை அறிய:

https://drive.google.com/drive/folders/1KIP49ld707wFmvWkQ2JeQU-ypwb2Pzpk என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.

தேர்வு முறை எப்படி?

3 மணி நேரத்துக்கு 30 தாள்களுக்குத் தேர்வு நடைபெறுகிறது. இதில் தேர்வர்கள் தங்களுக்கு ஏற்ற வகையில், தாள்களைத் தேர்வு செய்துகொள்ளலாம். தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து 3 ஆண்டுகளுக்கு இந்த மதிப்பெண்கள் செல்லுபடி ஆகும்.

எனினும் இதற்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு. 1 மதிப்பெண் எம்சிக்யூவின் தவறான விடைக்கு 1/3 மதிப்பெண்கள் கழித்துக் கொள்ளப்படும். 2 மதிப்பெண் எம்சிக்யூவின் தவறான விடைக்கு 2/3 மதிப்பெண்கள் கழித்துக் கொள்ளப்படும்.   

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

பொறியியல் 3ஆம் ஆண்டு அல்லது அதற்கடுத்த ஆண்டுகளில் படிக்கும் பொறியியல் மாணவர்கள், கேட் 2025ஆம் ஆண்டு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களை https://gate2025.iitr.ac.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து அறியலாம்.   

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்கு ஹேப்பி நியூஸ்! தமிழகத்தில் இன்று முதல் சிறப்புப்பேருந்துகள்
சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்கு ஹேப்பி நியூஸ்! தமிழகத்தில் இன்று முதல் சிறப்புப்பேருந்துகள்
Breaking News LIVE: அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் மனு; உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
Breaking News LIVE: அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் மனு; உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
Yagi: 226 பேர் மரணம்! 15 ஆயிரம் பேர் பாதிப்பு! வியட்நாமையே சிதைத்த யாகி புயல்!
Yagi: 226 பேர் மரணம்! 15 ஆயிரம் பேர் பாதிப்பு! வியட்நாமையே சிதைத்த யாகி புயல்!
இரவெல்லாம் பவர் கட், கொசுக்கடி: தூக்கமில்லாமல் தவித்த சென்னை! காரணம் என்ன?
இரவெல்லாம் பவர் கட், கொசுக்கடி: தூக்கமில்லாமல் தவித்த சென்னை! காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Akash Chopra on Rohit Sharma | வெளியேறும் ரோஹித்? இப்படி பண்ணிட்டீங்களே மும்பை! சோகத்தில் ரசிகர்கள்Fire Accident | மகளிர் விடுதியில் தீ விபத்து!பரிதாபமாக பிரிந்த உயிர்கள்..FRIDGE வெடித்து பயங்கரம்Jayam Ravi Divorce | Jeeva Car Accident | விபத்தில் சிக்கிய கார்!  டென்ஷன் ஆன ஜீவா! ஷாக் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்கு ஹேப்பி நியூஸ்! தமிழகத்தில் இன்று முதல் சிறப்புப்பேருந்துகள்
சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்கு ஹேப்பி நியூஸ்! தமிழகத்தில் இன்று முதல் சிறப்புப்பேருந்துகள்
Breaking News LIVE: அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் மனு; உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
Breaking News LIVE: அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் மனு; உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
Yagi: 226 பேர் மரணம்! 15 ஆயிரம் பேர் பாதிப்பு! வியட்நாமையே சிதைத்த யாகி புயல்!
Yagi: 226 பேர் மரணம்! 15 ஆயிரம் பேர் பாதிப்பு! வியட்நாமையே சிதைத்த யாகி புயல்!
இரவெல்லாம் பவர் கட், கொசுக்கடி: தூக்கமில்லாமல் தவித்த சென்னை! காரணம் என்ன?
இரவெல்லாம் பவர் கட், கொசுக்கடி: தூக்கமில்லாமல் தவித்த சென்னை! காரணம் என்ன?
Rasi Palan Today, Sept 13: விருச்சிகத்துக்கு புதிய நபரின் அறிமுகம் உண்டு;  துலாமுக்கு கவனம் தேவை.! உங்கள் ராசிக்கான பலன்.!
Rasi Palan: விருச்சிகத்துக்கு புதிய நபரின் அறிமுகம் உண்டு; துலாமுக்கு கவனம் தேவை.! உங்கள் ராசிக்கான பலன்.!
Nalla Neram Today Sep 13: நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
பாஜக டூ அதிமுக டூ பாஜக டூ அதிமுக.. மீண்டும் அந்தர் பல்டி அடித்த மைத்ரேயன்!
பாஜக டூ அதிமுக டூ பாஜக டூ அதிமுக.. மீண்டும் அந்தர் பல்டி அடித்த மைத்ரேயன்!
PM - CJI : தலைமை நீதிபதி இல்லத்தில் பிரதமர் மோடி.! உடனே சூழ்ந்த சர்ச்சை.! கேள்வியெழுப்பும் எதிர்க்கட்சிகள்.!
தலைமை நீதிபதி இல்லத்தில் பிரதமர் மோடி.! உடனே சூழ்ந்த சர்ச்சை.! கேள்வியெழுப்பும் எதிர்க்கட்சிகள்.!
Embed widget