GATE 2024: பொறியியல் நுழைவுத் தேர்வான கேட் விண்ணப்பப் பதிவு எப்போது?- வெளியான அறிவிப்பு
பொறியியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் கேட் (GATE) நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் தொடங்கலாம் என்று ஐஐஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
![GATE 2024: பொறியியல் நுழைவுத் தேர்வான கேட் விண்ணப்பப் பதிவு எப்போது?- வெளியான அறிவிப்பு GATE 2024 Website Launched, Applications Likely To Begin On August 24 iisc GATE 2024: பொறியியல் நுழைவுத் தேர்வான கேட் விண்ணப்பப் பதிவு எப்போது?- வெளியான அறிவிப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/06/0527df1e512cae7910d3a3ba215b51be1691327548059332_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பொறியியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் கேட் (GATE) நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் தொடங்கலாம் என்று ஐஐஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு சார்பில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான். உள்ளிட்ட பொறியியல் மேற்படிப்புகளில் சேர கேட் (Graduate Aptitude Test in Engineering) என்னும் உயர் கல்வி நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் படிக்க முடியும்.
ஆண்டுதோறும் நடைபெறும் கேட் தேர்வை ஐஐடி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றோ அல்லது ஐஐஎஸ்சி எனப்படும் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனமோ நடத்துகின்றன.
மாணவர்கள் gate2024.iisc.ac.in என்ற முகவரியை க்ளிக் செய்து, தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஐஐஎஸ்சி எனப்படும் இந்திய அறிவியல் நிறுவனம் 2024ஆம் ஆண்டுக்கான கேட் (GATE) தேர்வை நடத்த உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு ஆக.24ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாணவர்கள் நவம்பர் 7 முதல் 11ஆம் தேதி விண்ணப்பங்களில் திருத்தம் செய்யலாம்.
கேட் தேர்வு பிப்ரவரி 3, 4, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இரண்டு ஷிஃப்டுகளாக நடைபெற உள்ள தேர்வில், முதல் ஷிஃப்ட் கால 9.30 முதல் 12.30 மணி வரையிலும் 2ஆம் ஷிஃப்ட் 2.30 முதல் 5.30 மணி வரையிலும் நடக்க உள்ளது.
புதிதாக அறிமுகம்
கணினி வழியில் 30 பாடங்களுக்கான தாள்களுக்கும் 82 காம்பினேஷன் தாள்களுக்கும் கேட் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வர்கள் அனுமதிக்கப்பட்ட இரண்டு தாள்களுக்கு உள்ள தேர்வுகளில் ஏதேனும் ஒன்றை எழுதலாம். இந்த ஆண்டு கேட் தேர்வில் தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்து (Data Science and Artificial Intelligence- DA) புதியதாக ஒரு தாள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தேர்வு தாள்கள் குறித்து விரிவாக அறிய: https://gate2024.iisc.ac.in/papers-and-syllabus/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
இந்தியாவில் மட்டுமே தேர்வு மையங்கள்
கேட் தேர்வு நாடு முழுவதும் இந்தியாவுக்குள் மட்டுமே நடத்தப்படும் என்று ஐஐஎஸ்சி தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு வெளியே உள்ள தேர்வர்கள், இந்தியாவுக்கு வந்து தேர்வை எழுதலாம். எனினும் போக்குவரத்து, தங்குவது உள்ளிட்ட ஏற்பாடுகளை அவர்களை செய்துகொள்ள வேண்டும் என்று ஐஐஎஸ்சி பெங்களூரு தெரிவித்துள்ளது.
தேர்வு மையங்கள் குறித்து விரிவாக அறிய: https://gate2024.iisc.ac.in/exam-cities/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், என்ன தகுதி என்று மாணவர்கள் இங்கே https://gate2024.iisc.ac.in/eligibility-criteria/ தெரிந்து கொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு: gate2024.iisc.ac.in என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)