மேலும் அறிய

Inclusive Education: இந்த ஆண்டில் 1.3 லட்சம் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பள்ளிகளில் சேர்ப்பு; விழிப்புணர்வு நிகழ்வுகள் தொடக்கம்

2022- 23ஆம் கல்வி ஆண்டில் மட்டும் 1.3 லட்சம் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

2022- 23ஆம் கல்வி ஆண்டில் மட்டும் 1.3 லட்சம் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளதாகவும், அவர்களைப் பள்ளியில் சேர்த்தல் தொடர்பாகவும் மாற்றுத்திறனாளி குழந்தைகளை  அடையாளம் காண்பதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வையும், பொதுமக்களிடையே இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

அனைத்து குழந்தைகளும் தரமான கல்வி பெறுவதை உறுதிசெய்யும் நோக்குடன் தமிழ்நாடு அரசு சார்பில், அனைவரையும் உள்ளடக்கிய கல்வி வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான தனி நபர் கல்வித்திட்டம் (IEP) மூலம் அவரவர் நிலைக்கேற்ற இலக்கை வடிவமைத்து அவர்களுக்கு சிறப்பு கல்வி அளித்தும், அவர்களின் முன்னேற்றத்தினையும் பங்கேற்பினையும் உறுதி செய்யும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தக் கல்வி ஆண்டில் சுமார் 1.3 லட்சம் மாற்றுத்திறனாளி குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கல்வி, அனைத்து குழந்தைகளுக்குமான உரிமை. ஆகவே, எந்த குழந்தைக்கும் கல்வி விடுபடக்கூடாது என்பதை உறுதிசெய்யும் விதமாக மாநிலம் முழுவதும் மாற்றுத்திறனாளி குழந்தைகளை கண்டறிந்து, அவர்களை பள்ளியில் சேர்த்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி குழந்தைகளை முன்கூட்டியே அடையாளம் காண்பதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வையும், பொதுமக்களிடையே இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாநிலம் முழுவதுமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் திறமைகளை வெளிக்கொணரும் விதமாகவும் நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

"உலக கொண்டாடப்படும் நிலையில், நவம்பர் 14ஆம் தேதி முதல் டிசம்பர் 3ஆம் தேதிவரை பல்வேறு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதை அடுத்து, இன்று (நவம்பர் 14) காலை அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர்கள் உறுதிமொழி ஏற்று வருகின்றனர்.

Kashi Tamil Sangamam: காசி தமிழ் சங்கமம்; தமிழ்நாட்டில் இருந்து வாரணாசி செல்லும் 2 ஆயிரம் மாணவர்கள்.. விவரம்..

Inclusive Education: இந்த ஆண்டில் 1.3 லட்சம் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பள்ளிகளில் சேர்ப்பு; விழிப்புணர்வு நிகழ்வுகள் தொடக்கம்

திட்டமிடப்பட்டுள்ள நிகழ்ச்சிகள்‌

- உறுதிமொழி எடுத்தல்‌

- விழிப்புணர்வு பேரணி

_ "இணைவோம்‌ மகிழ்வோம்‌" - பள்ளி அளவிலான நிகழ்ச்சிகள்‌

- ஒருங்கிணைந்த விளையாட்டுப்‌ போட்டிகள்‌

- ஒருங்கிணைந்த கலை மற்றும்‌ பண்பாட்டு நிகழ்ச்சிகள்‌

- சிறார்‌ திரைப்படங்கள்‌

- சைகை மொழி தமிழ்த்தாய்‌ வாழ்த்து

ஆகிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பள்ளிகளிலும் வட்டாரக் குறுவள மையங்களிலும் மேற்கொள்ளப்பட உள்ளன. 

மேற்குறிப்பிட்ட தகவல்களை மாநிலத் திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார். 

இதையும் வாசிக்கலாம்: மருத்துவப் படிப்புகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து: தமிழ்நாடு அரசு எச்சரிக்கை https://tamil.abplive.com/news/tamil-nadu/cancellation-of-accreditation-for-medical-colleges-if-extra-fees-are-charged-tn-govt-84106

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi: இந்த இணையதளத்தை பாருங்க.! முக்கியமாக குழந்தைகளே, மாணவர்களே , இளைஞர்களே - பிரதமர் மோடி
PM Modi: இந்த இணையதளத்தை பாருங்க.! முக்கியமாக குழந்தைகளே, மாணவர்களே , இளைஞர்களே - பிரதமர் மோடி
"குற்றத்தை ஒத்துக்கோங்க" விமானத்தை சுட்டது யார்? ரஷியா மீது அஜர்பைஜான் அதிபர் பரபர குற்றச்சாட்டு!
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
"தடைகளைத் தகர்ப்போம்.. எதேச்சதிகாரத்தை வெல்வோம்" தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anna University Issue | ‘'வீடியோ எடுத்து மிரட்டுனான்’’ பாதிக்கப்பட்ட மாணவி பகீர்!வெளியான FIR ReportAnna University Issue : 15 வழக்குகள்...திமுக நிர்வாகி!RAPIST ஞானசேகரனின் பின்னணி!யார் யாருடன் தொடர்பு?RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: இந்த இணையதளத்தை பாருங்க.! முக்கியமாக குழந்தைகளே, மாணவர்களே , இளைஞர்களே - பிரதமர் மோடி
PM Modi: இந்த இணையதளத்தை பாருங்க.! முக்கியமாக குழந்தைகளே, மாணவர்களே , இளைஞர்களே - பிரதமர் மோடி
"குற்றத்தை ஒத்துக்கோங்க" விமானத்தை சுட்டது யார்? ரஷியா மீது அஜர்பைஜான் அதிபர் பரபர குற்றச்சாட்டு!
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
"தடைகளைத் தகர்ப்போம்.. எதேச்சதிகாரத்தை வெல்வோம்" தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
TN Rain: ஜன.4-ம் தேதி வரை மழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain: ஜன.4-ம் தேதி வரை மழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
வேறு வழியில்லை; அன்புமணிகிட்ட கொடுத்தேன்: தனியாக ராமதாஸ் சொன்ன விஷயம்! பொதுவில் போட்டுடைத்த சீமான்!
வேறு வழியில்லை; அன்புமணிகிட்ட கொடுத்தேன்: தனியாக ராமதாஸ் சொன்ன விஷயம்! பொதுவில் போட்டுடைத்த சீமான்!
"தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
Embed widget