பள்ளியின் தரம் உயர்த்திய தலைமை ஆசிரியருக்கு ட்ரான்ஸ்ஃபர்; கண்ணீர்விட்டுக் கதறிய மாணவிகள்; திண்டுக்கல்லில் நெகிழ்ச்சி!
வேடசந்தூர் அருகே தலைமையாசிரியர் பணியிட மாறுதலில் சென்றதால் கதறி அழுது விடை கொடுத்த பள்ளி மாணவ, மாணவிகள்.
அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை என்பது, தனியார் பள்ளிகளின் மோகத்தால் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதை தவிர்க்கும் சூழல் உருவாகியுள்ளது. இதே வேலையில் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் கூடுதல் ஊதியத்திற்கு பணி செய்தாலும் பெரும்பாலான இடங்களில் அரசு பள்ளிகளில் குறைந்த அளவிலான மாணவர்களே பயின்று வருகின்றனர்.
இதனை தவிர்க்கும் வகையில் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கவும் அரசு பள்ளிகளில் கல்விக்கான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில்தான் பல்வேறு பகுதிகளில் உள்ள ஒரு சில ஆசிரியர்களால் அரசு பள்ளிகளின் தரம் உயர்த்த ஆசிரியர்களும் பல்வேறு வித்தியாசமான முறையில் பணி செய்து அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்த்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில்தான் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கொண்டமநாயக்கன்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு 2018 ஆம் ஆண்டு தலைமை ஆசிரியராக மோகன்தாஸ் வந்தார். அப்பொழுது அந்த பள்ளியில் 52 மாணவர்கள் மட்டுமே இருந்துள்ளனர். இதனையடுத்து சுற்றுப்புற கிராம பகுதிகளில் உள்ள பெற்றோர்களிடம் வீடு வீடாகச் சென்று அரசு பள்ளியின் சலுகைகள் பற்றி எடுத்துக் கூறி தற்பொழுது 103 மாணவர்கள் ஆக உயர்த்தியுள்ளார்.
சென்னை ஏர்ப்போர்ட்டில் வசமாக சிக்கிய பெண்! 1 பாக்கெட் 10 கோடியாம்.. மும்பை, டெல்லிக்கு ஸ்கெட்ச்!
மேலும் ஊர் முக்கிய பிரமுகர்கள் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர்களை அணுகி பள்ளியில் சுற்றுச்சுவர், வகுப்பறை கட்டிடம், கழிப்பறை கட்டிடம், மைக் செட், ப்ராஜெக்டர் உதவியுடன் ஸ்மார்ட் கிளாஸ் போன்றவற்றையும் உருவாக்கியுள்ளார். மேலும் பள்ளி ஆண்டு விழாவை தனியார் பள்ளிக்கு இணையாக நடத்தி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். மேலும் ஒவ்வொரு ஆண்டும் எட்டாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு தொகையும் வழங்கி உள்ளார்.
சென்னை ஏர்ப்போர்ட்டில் வசமாக சிக்கிய பெண்! 1 பாக்கெட் 10 கோடியாம்.. மும்பை, டெல்லிக்கு ஸ்கெட்ச்!
இந்நிலையில் அவருக்கு கடந்த 3-ம் தேதி பணியிட மாற்றம் வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து தலைமை ஆசிரியர் மோகன்தாஸ் பள்ளியிலிருந்து கிளம்பியுள்ளார். இதனை அறிந்த பள்ளி மாணவ, மாணவிகள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அதனைத்தொடர்ந்து தலைமை ஆசிரியர் மாணவர்களை தேற்றினார். அதன்பின்னர் மாணவர்கள் கைதட்டி உற்சாகமாக அவருக்கு பிரியாவிடை கொடுத்தனர். இந்த காட்சியை அந்த பகுதியில் இருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்திருந்தார். அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.