மேலும் அறிய

சிக்கலில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு: ஆசிரியர் பயற்சி நிறுவனங்கள் மூடல்!

இரண்டாண்டு தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பில்  தேர்ச்சி பெறும் மாணவர்கள் 1முதல் 5ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் தகுதியைப் பெறுவர். 

கடந்த 2018 கல்வியாண்டு முதல் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் வெறும் 2% சதவிகித மாணவர்கள் மட்டுமே தேர்ச்சிப் பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.  

தமிழ்நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு 600க்கு மேற்பட்ட தொடக்க கல்வி பட்டயப் படிப்பு பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. ஆனால், 2018ல், தேர்வு முறையில் கொண்டு வரப்பட்ட சில மாற்றங்களின் காரணமாகவும், தொடக்க கல்வி பட்டயப் படிப்பு முடித்தாலும் பணி கிடைக்காத காரணித்தினாலும் தற்போது 100க்கும் குறைவான ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மட்டுமே  செயல்பட்டு வருகின்றன.   

தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பிற்கு சேர்க்கை பெற விரும்புவோர் மேல்நிலைத் தேர்வில் ( Higher Secondary ) தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும் . மேலும் , பொதுப் பிரிவினர் ( OC ) குறைந்தபட்சம் 50 விழுக்காடு மதிப்பெண் ( 600 / 1200-300 / 600 ) மற்றும் பிற்படுத்தப்பட்டோர் / பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / ஆதி திராவிடர் / ஆதி திராவிடர் அருந்ததியர் / பழங்குடியினர் ( BC / BCM / MBC / SC / SCA / ST ) பிரிவினர் குறைந்தபட்சம் 45 விழுக்காடு ( 540 / 1200-270 / 600 ) மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும்   

இரண்டாண்டு தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பில்  தேர்ச்சி பெறும் மாணவர்கள் 1முதல் 5ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் தகுதியைப் பெறுவர். 

கல்வித்துறை வட்டாராங்கள் இது குறித்து கூறுகையில், " ஒரு காலத்தில் கிராமப்புற மாணவர்களின் கனவு உலகமாக ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக மாறி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக  தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு  மதிப்பெண் அடிப்படையில் எந்த பணியும் நிரப்பப்படவில்லை. இதனால், இந்த படிப்புக்கான தேவையே குறைந்து வருகிறது.  மேலும், 2018ல் இருந்து பட்டயப் படிப்புத் தேர்வு மதிப்பீடு முறையில் கொண்டுவரப்பட்ட சில மாற்றங்கள் மாணவர்களின் தேர்வு விகிதத்தை வெகுவாக குறைத்துள்ளது. 2018ல் இருந்து ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் இருந்து 2% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சிப் பெற்றுள்ளனர்" என்று தெரிவித்துள்ளனர்.   

கொரோனா பெருந்தொற்று நோய்த் தாக்குதல், அதன் தொடர்ச்சியான முடக்கநிலை அமல் காரணமாக, கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில், மாணவர்களுக்குப் பிரச்சினைகள் ஏற்பட்டன. டிஜிட்டல் இடைவெளி அதிகரிப்பதால், வாய்ப்புகள் மறுக்கப்பட்ட நிலையில் உள்ள மாணவர்ககள் அதிகம் பாதிப்படைந்தனர்" என்று தெரிவித்தனர். 

முன்னதாக, வெளியிடப்பட்ட தேசிய கல்விக் கொள்கையில், ஆசிரியர்கள் , வலுவான , வெளிப்படையான நடைமுறைகளின் அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள். தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுமம் (NCERT),  மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுமம் (SCERT)  ஆகிய அமைப்புகள்எல்லா பிராந்தியங்கள் மற்றும் மட்டத்திலுமான ஆசிரியர்கள் மற்றும் நிபுண அமைப்புகளுடன் கலந்தாலோசித்து, ஆசிரியர்களுக்கான தேசிய தொழில்முறைத் தரம் (National Professional Standards for Teachers (NPST)) என்ற ஒரு பொதுவான அமைப்பு உருவாக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது. 

மேலும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவுடன் ஆலோசித்து புதிய மற்றும் விரிவான தேசிய ஆசிரியர் கல்வித் திட்டக் கட்டமைப்பு, 2021 (National Curriculum Framework for Teacher Education, NCFTE 2021), தேசிய கல்வி மற்றும் பயிற்சிக் குழுவால் வடிவமைக்கப்படும். 2030-க்குள் கற்பித்தலுக்கான குறைந்தபட்ச பட்டத் தகுதி நான்கு வருட பி எட் பட்டமாக இருக்கும். தரம் குறைந்த ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.   

இதற்கிடையே, 2020- 21 கல்வியாண்டில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் , ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் , அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம்  28ம் தேதி வரை வரவேற்கப்பட்டன. 

உதவி பெறும் மற்றும் சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர்க்கை விவரம் : நிதி உதவி / சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அந்தந்த நிறுவனங்களின் இணையதள முகவரியில் Online வாயிலாக தனித்தனியாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது . நிதி உதவி/சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் இணையதள முகவரி www.tnscert.org -ல் வெளியிடப்பட்டது.      

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget