மேலும் அறிய

CUET UG 2022 Result Date: CUET தேர்வு முடிவுகள் செப்.15-ம் தேதிக்குள் வெளியாகும்: என்டிஏ அறிவிப்பு

மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்புகளில் சேர நடத்தப்படும் க்யூட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 15 அல்லது அதற்கு 2 நாட்கள் முன்னதாகவே வெளியாகும் என்று யுஜிசி அறிவித்துள்ளது. 

மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்புகளில் சேர நடத்தப்படும் க்யூட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 15 அல்லது அதற்கு 2 நாட்கள் முன்னதாகவே வெளியாகும் என்று யுஜிசி அறிவித்துள்ளது. 

மத்திய பல்கலைக்கழகங்கள் & இணைப்புக் கல்லூரிகள், ஒருசில தனியார் & மாநில பல்கலைக்கழகங்களில் UG படிப்புகளில் சேர நடத்தப்பட்ட CUET - UG தேர்வை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர்.

மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் இளங்கலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு 2022-23ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. என்சிஇஆர்டி 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு அண்மையில் யுஜிசி சார்பில் வெளியானது. ஜூலை மாதத்தில் தொடங்கிய தேர்வு, ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்தத் தேர்வை எழுதவோ, மாணவர் சேர்க்கைக்கோ 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படாது. கணினி வழியில் 3 மணி நேரம் 50 நிமிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட13 மொழிகளில் இந்தத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது. 

CUET UG 2022 Result Date: CUET தேர்வு முடிவுகள் செப்.15-ம் தேதிக்குள் வெளியாகும்: என்டிஏ அறிவிப்பு

எனினும் தேர்வு தாமதமாகத் தொடங்கியது, தேர்வு மையங்களில் குழப்பம் உள்ளிட்ட சிக்கல்கள் எழுந்தன. நாடு முழுவதும் முதல்முறை நடத்தப்படும் நுழைவுத் தேர்வு என்பதால், சில பிரச்சினைகள் எழுந்ததாகவும் அவை விரைவில் சரிசெய்யப்படும் எனவும் யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் விளக்கம் அளித்தார். 

14.9 லட்சம் தேர்வர்கள் தேர்வை எழுதினர். முதல்கட்டத் தேர்வை 2.49 லட்சம் தேர்வர்கள் எழுதினர். 2ஆவது கட்டத் தேர்வை 1.91 லட்சம் தேர்வர்களும் 3ஆவது கட்டத் தேர்வை 1.91 லட்சம் தேர்வர்களும் எழுதினர்.

அதேபோல 4ஆவது கட்டத் தேர்வை 3.72 லட்சம் தேர்வர்களும் 5ஆவது கட்டத் தேர்வை 2.01 லட்சம் தேர்வர்களும் 6ஆவது கட்டத் தேர்வை 2.86 லட்சம் தேர்வர்களும் எழுதினர். நாடு முழுவதும் 259 நகரங்களில், 489 தேர்வு மையங்களிலும் வெளிநாடுகளில் 10 நகரங்களிலும் தேர்வு நடைபெற்றது.

க்யூட் தேர்வு முடிவுகள்

க்யூட் மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து 90 பல்கலைக்கழகங்கள், 44 மத்தியப் பல்கலைக்கழகங்கள், 12 மாநிலப் பல்கலைக்கழகங்கள் மாணவர் சேர்க்கையை நடத்த உள்ளன. 

இந்நிலையில் சியுஎட் (CUET) நுழைவுத் தேர்வு இறுதி விடைக்குறிப்பு நேற்று வெளியானதை அடுத்து, செப்டம்பர் 15 அல்லது அதற்கு 2 நாட்கள் முன்னதாகவே வெளியாகும் என்று யுஜிசி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார். அனைத்து பல்கலைக்கழகங்களும் மாணவர் சேர்க்கைக்கு தங்களின் இணையதளத்தைத் தயார்படுத்தி வைத்துக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கூடுதல் தகவல்களுக்கு: nta.ac.in,

cuet.samarth.ac.in

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

பகுதிநேர ஆசிரியர்கள் டூ நிரந்தர ஆசிரியர்கள்: 'கொள்கை முடிவு' எடுப்பாரா விஜய்? சட்டமன்றத்தில் எழும் புதிய எதிர்பார்ப்பு!
பகுதிநேர ஆசிரியர்கள் டூ நிரந்தர ஆசிரியர்கள்: 'கொள்கை முடிவு' எடுப்பாரா விஜய்? சட்டமன்றத்தில் எழும் புதிய எதிர்பார்ப்பு!
இலவச சைக்கிள், லேப்டாப், ₹1000 உதவித்தொகை.. நாகை அரசு ITI-ல் சேர அரிய வாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
இலவச சைக்கிள், லேப்டாப், ₹1000 உதவித்தொகை.. நாகை அரசு ITI-ல் சேர அரிய வாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
எம்.டெக், எம்.பி.ஏ, எம்.சி.ஏ படிப்புகள்: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அறிவிப்பு!
எம்.டெக், எம்.பி.ஏ, எம்.சி.ஏ படிப்புகள்: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அறிவிப்பு!
இன்ஜினியரிங் படிக்க ஆளே இல்லையா? புதுச்சேரியை அதிரவைத்த சென்டாக் லேட்ரல் என்ட்ரி புள்ளிவிவரங்கள்!
இன்ஜினியரிங் படிக்க ஆளே இல்லையா? புதுச்சேரியை அதிரவைத்த சென்டாக் லேட்ரல் என்ட்ரி புள்ளிவிவரங்கள்!

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மேகதாட்டு விவகாரம்: ‘புதிய நடுவர் மன்றக் கோரிக்கை’ எனும் பிழையைத் திரும்பப் பெறுக: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நெத்தியடி முழக்கம்
மேகதாட்டு விவகாரம்: ‘புதிய நடுவர் மன்றக் கோரிக்கை’ எனும் பிழையைத் திரும்பப் பெறுக: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நெத்தியடி முழக்கம்
கருணாநிதி பேனாவுக்கு கல்தா கொடுப்பாரா முதலமைச்சர் விஜய்? தீர்ப்பாயம் கேள்வி
கருணாநிதி பேனாவுக்கு கல்தா கொடுப்பாரா முதலமைச்சர் விஜய்? தீர்ப்பாயம் கேள்வி
TN RAIN ALERT: அடுத்த 2 நாள் காற்றோடு புரட்டி எடுக்கப்போகுது கன மழை.! எந்த எந்த மாவட்டங்களுக்கு டேஞ்சர்- லிஸ்ட் இதோ
அடுத்த 2 நாள் காற்றோடு புரட்டி எடுக்கப்போகுது கன மழை.! எந்த எந்த மாவட்டங்களுக்கு டேஞ்சர்- லிஸ்ட் இதோ
மாற்றத்தை விரும்பும் இளைஞர்களை நோக்கி கிராமங்களுக்கு வந்துள்ளேன்! – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
மாற்றத்தை விரும்பும் இளைஞர்களை நோக்கி கிராமங்களுக்கு வந்துள்ளேன்! – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு & PNR ஸ்டேட்டஸ் செக் கையேடு 2026
ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு & PNR ஸ்டேட்டஸ் செக் கையேடு 2026
NEET Re-Exam Issue: நாக்பூர் மாணவருக்கு ‘NEET‘ கொடுத்த ஷாக்.! அபுதாபியில் தேர்வு மையம்; நடந்தது என்ன.?
நாக்பூர் மாணவருக்கு ‘NEET‘ கொடுத்த ஷாக்.! அபுதாபியில் தேர்வு மையம்; நடந்தது என்ன.?
Samantha: அம்மாவாகிய சமந்தா? கேக் வெட்டி கொண்டாட்டம் - திரும்பும் திசையெல்லாம் வாழ்த்து
Samantha: அம்மாவாகிய சமந்தா? கேக் வெட்டி கொண்டாட்டம் - திரும்பும் திசையெல்லாம் வாழ்த்து
Ather E Scooter: ஏதர் இ ஸ்கூட்டர் வாங்கலாமா? என்னென்ன இருக்குது? மைலேஜ், விலை எப்படி? முழு விவரம்
Ather E Scooter: ஏதர் இ ஸ்கூட்டர் வாங்கலாமா? என்னென்ன இருக்குது? மைலேஜ், விலை எப்படி? முழு விவரம்
Embed widget