மேலும் அறிய

3 மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு புதிய திட்டம் - முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

கங்கைகொண்ட சோழபுரம் அருகேயுள்ள மாளிகைமேட்டில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் வருகிறார். அதன் ஒரு பகுதியாக திருச்சி மற்றும் அரியலூர், பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதன்படி வருகிற 28-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி வந்தடைகிறார். பின்னர் 10.15 மணிக்கு சாலை மார்க்கமாக திருச்சியை அடுத்த காட்டூர் பாப்பாக்குறிச்சி ஆதிதிராவிடர் பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு செல்கிறார். அங்கு பள்ளி மாணவர்களுக்கு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் வகையில் அங்கு 'ஸ்டெம் ஆன் வீல்ஸ்' என்ற புதிய நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். இது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதத்தில் பள்ளி மாணவர்களிடையே கற்றலை ஊக்குவிப்பதன் மூலம் கல்வி முறையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டம் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய பாடங்களில் ஆங்கில வார்த்தையில் முதல் எழுத்துக்களை இணைத்து 'ஸ்டெம்' என்னும் வார்த்தை உருவகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பாடங்களை தன்னார்வலர்கள் மூலம் இருசக்கர வாகனங்களில் சென்று மாணவர்களின் இருப்பிடத்திலேயே கற்றுத் தருவதற்காக ஸ்டெம் ஆன் வீல்ஸ் எனவும் பெயரிட்டுள்ளனர். இதில் இருசக்கர வாகனங்களில் பயிற்சி அளிக்க செல்லும் தன்னார்வலர்களை கொடியசைத்து வழி அனுப்பி வைக்கிறார்.

3 மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு புதிய திட்டம் - முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

இந்த நிகழ்ச்சி நிறைவுற்றதும் அங்கிருந்து நேராக பெரம்பலூர் எறையூர் செல்கிறார். அங்கு கோத்தாரி சர்க்கரை ஆலையில் புதிய அலகினை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். பின்னர் எறையூரில் அமையவுள்ள சிப்காட் தொழிற்பேட்டைக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதைத்தொடர்ந்து பெரம்பலூர் விருந்தினர் மாளிகைக்குச் சென்று சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். பின்னர் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் அருகேயுள்ள மாளிகைமேட்டில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார். இந்தப் பகுதியில் சமீபத்தில் பழங்கால மண் பானைகள், தங்க காப்புகள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

3 மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு புதிய திட்டம் - முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

இதனை தொடர்ந்து  மாலை 5.45 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரியலூர் விருந்தினர் இல்லம் செல்கிறார். இரவு அங்கு தங்கி ஓய்வு எடுக்கிறார். மறுநாள் 29-ந்தேதி (செவ்வாய்க்கழமை) காலை 9.15 மணிக்கு விருந்தினர் இல்லத்தில் இருந்து புறப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறும் அரியலூர்-செந்துறை சாலையில் உள்ள கொல்லாபுரத்துக்கு செல்கிறார். பின்னர் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு பல கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் பல்வேறு திட்டங்கள் மூலம் ரூ.31 கோடியே 37 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பிலான 54 பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.221 கோடியே 80 லட்சத்து 28 ஆயிரம் செலவில் முடிவுற்ற 23 திட்டப்பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தும், பல்வேறு அரசுத்துறைகள் மூலம் 9,621 பயனாளிகளுக்கு ரூ.26.2 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

அதன் பின்னர் அரியலூரில் இருந்து திருச்சி விமான நிலையம் சென்று மதியம் 12.30 மணிக்கு தனி விமானத்தில் சென்னை புறப்பட்டு செல்கிறார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் முன்னேற்பாடு பணிகள் வேகமாக நடந்து வருகின்றது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: இன்று இரவு 16 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை ரீசண்ட் அப்டேட்!
TN Rain: இன்று இரவு 16 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை ரீசண்ட் அப்டேட்!
முடங்கியது வாட்ஸ்அப்.. ஸ்டேட்டஸ், மெசேஜ் அனுப்ப முடியலையா? இதான் காரணம்!
முடங்கியது வாட்ஸ்அப்.. ஸ்டேட்டஸ், மெசேஜ் அனுப்ப முடியலையா? இதான் காரணம்!
IPL 2025 LSG vs GT: மார்க்ரம், பூரண் சம்பவம்! குஜராத்தை கிழித்தெடுத்த லக்னோ! கோயங்கா ஹாப்பி அண்ணாச்சி
IPL 2025 LSG vs GT: மார்க்ரம், பூரண் சம்பவம்! குஜராத்தை கிழித்தெடுத்த லக்னோ! கோயங்கா ஹாப்பி அண்ணாச்சி
அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு : மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அறிவிப்பு
அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு : மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Amit shah on Annamalai: தேசிய அரசியலில் அண்ணாஅமலை! பாஜகவில் முக்கிய பதவி! பாராட்டி தள்ளிய அமித்ஷாTrichy Siva: திருச்சி சிவாவுக்கு ஜாக்பார்ட்! ஸ்டாலின் அதிரடி Twist பொன்முடி எதிர்காலம் காலி?PonmudiEPS vs Amit shah | ”சிறைக்கு செல்ல தயார்” எடப்பாடி பழனிசாமி அதிரடி! ஷாக்கான அமித்ஷா! | BJP | ADMKPriyansh Arya Profile:  CSK - வை அலறவிட்ட இளைஞன்! பஞ்சாப்பின் Rocky Boy! யார் இந்த பிரியான்ஸ் ஆர்யா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: இன்று இரவு 16 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை ரீசண்ட் அப்டேட்!
TN Rain: இன்று இரவு 16 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை ரீசண்ட் அப்டேட்!
முடங்கியது வாட்ஸ்அப்.. ஸ்டேட்டஸ், மெசேஜ் அனுப்ப முடியலையா? இதான் காரணம்!
முடங்கியது வாட்ஸ்அப்.. ஸ்டேட்டஸ், மெசேஜ் அனுப்ப முடியலையா? இதான் காரணம்!
IPL 2025 LSG vs GT: மார்க்ரம், பூரண் சம்பவம்! குஜராத்தை கிழித்தெடுத்த லக்னோ! கோயங்கா ஹாப்பி அண்ணாச்சி
IPL 2025 LSG vs GT: மார்க்ரம், பூரண் சம்பவம்! குஜராத்தை கிழித்தெடுத்த லக்னோ! கோயங்கா ஹாப்பி அண்ணாச்சி
அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு : மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அறிவிப்பு
அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு : மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அறிவிப்பு
Good Bad Ugly: தொடரும் ஹவுஸ்ஃபுல்! காட்சிக்கு காட்சி எகிறும் கலெக்ஷன்! குட் பேட் அக்லி அட்டகாசம்!
Good Bad Ugly: தொடரும் ஹவுஸ்ஃபுல்! காட்சிக்கு காட்சி எகிறும் கலெக்ஷன்! குட் பேட் அக்லி அட்டகாசம்!
எம்ஜிஆர் ஆக துடிக்கும் விஜய்.. அதிமுக 2.0 தான் இலக்கு.. அப்போ தவெகவின் நிலை என்ன?
எம்ஜிஆர் ஆக துடிக்கும் விஜய்.. அதிமுக 2.0 தான் இலக்கு.. அப்போ தவெக நிலை என்ன?
அன்பு கட்டளை... தலைவரான முதல் நாளே நயினார் சொன்ன அந்த வார்த்தை.. செருப்பு போட்ட அண்ணாமலை 
அண்ணன் டா! தம்பி டா! தலைவரான நயினார் போட்ட முதல் கட்டளை.. செருப்பு போட்ட அண்ணாமலை
வேலை இல்லையா... கவலை வேண்டாம்... உங்களுக்காக வேலைவாய்ப்பு முகாம்...!  எங்கே தெரியுமா ?
வேலை இல்லையா... கவலை வேண்டாம்... உங்களுக்காக வேலைவாய்ப்பு முகாம்...! எங்கே தெரியுமா ?
Embed widget