Abroad Study: வெளிநாட்டில் படிக்க ஆசையா? இந்த மூன்று விஷயங்களை கவனியுங்கள், இல்லன்னா கஷ்டம்தான்..!
Abroad Study: வெளிநாட்டில் படிக்க திட்டமிடும் மாணவர்களின், நிதி திட்டமிடலுக்கான ஆலோசனைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
Abroad Study: வெளிநாட்டில் படிக்க திட்டமிடும் மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
வெளிநாட்டில் படிப்பு:
வெளிநாட்டில் கல்வி பயில்வதற்கு சரியான நிதிதிட்டமிடலை கொண்டிருப்பது, வெற்றிகரமான படிப்பு அனுபவத்திற்கு முக்கியமானது. அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் பல்வேறு நிதி விருப்பங்கள் கிடைக்கப்பெறுவதால், தெளிவான நிதி திட்டமிடல் இருப்பது செலவுகளைத் தவிர்க்கவும், எதிர்பாராத செலவினங்களை கையாளவும் உதவும். உங்கள் வெளிநாட்டுப் பயணத்தைத் திட்டமிட உதவும் எளிய 3 ஆலோசனைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
1. தொடர்புடைய செலவினங்களை பட்டியலிடுங்கள்:
ஒவ்வொரு நாட்டிற்கும் வெவ்வேறு செலவுகள் மற்றும் இந்திய ரூபாய்க்கு நிகரான மாற்றும் விகிதங்கள் உள்ளன. எனவே மொத்தத்தை மதிப்பிடுவதற்கு முன், சம்பந்தப்பட்ட அனைத்து செலவுகளையும் முதலில் ஆய்வு செய்வது முக்கியம். உங்களுக்குத் தேவைப்படும் மொத்தப் பணம் எவ்வளவு என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள இது உதவும். உங்கள் செலவுகளை மதிப்பிடும்போது கருத்தில் கொள்ள வேண்டிய காரணிகள்:
- தரப்படுத்தப்பட்ட தேர்வுகள் (GRE/ GMAT/ IELTS/ TOEFL)
- கல்வி நிலைய கட்டணம்
- விடுதி (வளாகத்தில் அல்லது வளாகத்திற்கு வெளியே)
- வாழ்க்கைச் செலவு
- விசா விண்ணப்பம்
- காப்பீடு (பயணம்/ உடல்நலம் மற்றும் பல)
- விமான டிக்கெட்
- இதர செலவுகள்
நிதி திட்டமிடலை நீங்கள் தேர்ந்தெடுத்த பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் கல்விக் கட்டணத்தைச் சரிபார்ப்பதன் மூலம் தொடங்கலாம். தங்குமிடத்திற்காக, உங்கள் படிக்கும் இடத்தில் வீட்டுச் செலவுகளைக் கணக்கிட ஆன்லைன் ஆதாரங்களையும் மாணவர் மன்றங்களையும் ஆராயலாம். பயணக் காப்பீடு போன்ற மறைமுக செலவுகளைக் கவனிக்காதீர்கள். மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் விசா தொடர்பான கட்டணங்கள் சம்பந்தப்பட்ட நாட்டின் இணையதளத்திற்குச் சென்று, சம்பந்தப்பட்ட அனைத்து செலவுகள் பற்றிய தெளிவான விவரங்களை சேகரிக்கலாம்.
படி 2: நிதி ஆதாரங்களை அடையாளம் காணுங்கள்:
தேவையான நிதி தொடர்பான ஆலோசனை கிடைத்ததும், அவற்றை தயார் செய்வதற்கான வழிகளை ஆராயுங்கள்.
சுயநிதி: சில மாணவர்களுக்கு தேவையான நிதி கைவசமே இருப்பதால், அவர்கள் தங்களுடைய சர்வதேச கல்விக்கு சுயநிதியை பயன்படுத்த முடியும். உங்கள் நிலைமை இதுவாக இருந்தால், அனைத்து பரிவர்த்தனைகள் மற்றும் நிதி ஆதாரங்கள் பற்றிய தெளிவான விவரங்களை நீங்கள் வைத்திருப்பதை உறுதிசெய்யவும்.
கல்விக் கடன்: சுய நிதி வாய்ப்பு இல்லை என்றால், கல்விக் கடனுக்கு விண்ணப்பிப்பதைக் கவனியுங்கள். வங்கிகளில் கடன் விண்ணப்பம் ஏற்கப்பட்டு பணம் கிடைக்க நேரம் எடுக்கும் என்பதால், உங்கள் விசா விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முன்பே கடனுக்கு விண்ணப்பிப்பது சிறந்தது.
உதவித்தொகை மற்றும் நிதி உதவி: பல அரசு திட்டங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் நிதி உதவிகளை வழங்குகின்றன. இவை தேவை அடிப்படையிலானதாகவோ அல்லது தகுதி அடிப்படையிலானதாகவோ இருக்கலாம், எனவே எந்த சராசரி மாணவரும் அவற்றுக்கு விண்ணப்பிக்கலாம். கிடைக்கக்கூடிய உதவித்தொகைகள் மற்றும் தகுதிக்கான அளவுகோல்களுக்கு, அரசாங்க இணையதளங்கள் அல்லது பல்கலைக்கழக இணையதளங்களைப் பார்க்கவும்.
3.நிதிச் செலவு காலவரிசையை உருவாக்குங்கள்
மொத்த செலவினங்களை மதிப்பிட்டு, தேவையான நிதியைப் பெற்றவுடன், நிதிக் காலக்கெடுவைத் தயாரிப்பது முக்கியம். வெளிநாட்டில் வசிக்கும் குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கான பட்ஜெட்டை உறுதிசெய்து, அவசர காலத்திற்கான நிதியையும் தனியாக எடுத்து வையுங்கள்.
புறப்படுவதற்கு முந்தைய செலவுகள்
இந்த பிரிவு ஆங்கில புலமைத் தேர்வுகள், தரப்படுத்தப்பட்ட தேர்வுக் கட்டணம் மற்றும் உங்கள் விசா விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கு முன் ஏற்படும் பிற செலவுகள் போன்றவை அடங்கும். இந்தச் செலவுகள் பொதுவாக நீங்கள் புறப்படுவதற்கு 12 மாதங்களுக்கு முன்பே குவியத் தொடங்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
புறப்பட்ட பிறகு செலவுகள்
குறிப்பிட்ட வெளிநாட்டைச் சென்றடந்ததும் வாடகை, பயன்பாட்டுக் கட்டணங்கள் மற்றும் உள்ளூர் போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசியச் செலவுகளுக்கான பட்ஜெட்டைத் திட்டமிடுங்கள். மடிக்கணினிகள், மொபைல் போன்கள், மளிகைப் பொருட்கள் மற்றும் பிற வாழ்க்கைச் செலவுகள் போன்ற தேவைகளுக்கான செலவுகளைக் கணக்கிட மறக்காதீர்கள்.
சரியான நிதிதிட்டமிடலை கொண்டிருந்தால், உங்கள் படிப்பில் கவனம் செலுத்தலாம் மற்றும் சர்வதேச கல்வியில் வரும் செழுமையான அனுபவங்களை முழுமையாக அனுபவிக்க முடியும்.