மேலும் அறிய

அனைவருக்கும் சான்றிதழ்; பள்ளி மாணவர்களுக்கு நடன, இசை, ஓவிய போட்டிகள்- பங்கேற்பது எப்படி?

போட்டிகளில்‌ கலந்து கொள்ளும்‌ மாணவர்களுக்கு பங்கேற்புக்கான சான்றிதழும்‌, மாவட்ட போட்டியில்‌ வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும்‌ வழங்கப்படும்‌.

கலை பண்பாட்டுத் துறையின்‌ கட்டுப்பாட்டின்‌ கீழ்‌ செயல்படும்‌, தமிழ்நாடு ஐவகர்‌ சிறுவர்‌ மன்றம் 5 முதல்‌ 16 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு, கலைப்‌ பயிற்சிகள்‌ அளித்து வருகிறது. சிறார்களிடையே மறைந்து கிடக்கும்‌ கலைத் திறன்களை வெளிக்கொணரும்‌ வகையில்‌ அனைத்து மாவட்டங்களிலும்‌ குரலிசை, பரதநாட்டியம்‌, ஓவியம்‌ மற்றும்‌ கிராமிய நடனம்‌, ஆகிய நான்கு கலைப்‌ பிரிவுகளிலும்‌, 5-8, 9-12, 13-16 வயதுப்‌ பிரிவுகளிலும்‌ போட்டிகள்‌ நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும்‌, சான்றிதழ்களும்‌ வழங்கி ஊக்குவித்து வருகிறது.

 9-12, 13-16 ஆகிய வயது பிரிவுகளில்‌ மாவட்ட அளவில்‌ முதல்‌ பரிசு பெற்ற சிறார்களுக்கு மாநில அளவிலான கலைப்‌ போட்டிகள்‌ நடத்தி, பரிசுத்‌ தொகையும்‌, பாராட்டு சான்றிதழ்களும்‌ வழங்கப்படவுள்ளது.

ஆக.24 அன்று போட்டிகள்

அவ்வகையில்‌, முதற்கட்டமாக 5-8, 59-12, 13-16 என்ற மூன்று வயது வகைப்‌ பிரிவில்‌ சென்னை மாவட்ட அளவிலான கலைப்‌ போட்டிகள்‌ 24.08.2024 அன்று குரலிசை, பரதநாட்டியம்‌, ஓவியம்‌ மற்றும்‌ கிராமிய நடனம்‌ ஆகிய கலைப்‌ போட்டிகள்‌ நடைபெறவுள்ளது. கலைப்‌ போட்டிகள்‌ அனைத்தும்‌ சென்னை- 28, இராஜா அண்ணாமலைபுரம்‌ டாக்டர்‌ டி.ஜி.எஸ்‌.தினகரன்‌ சாலையிலுள்ள, தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி வளாகத்தில்‌ காலை 9.00 மணி முதல்‌ நடைபெற உள்ளது.

போட்டிகளில்‌ கலந்து கொள்ளும்‌, மாணவ, மாணவிகளின்‌ பெயர்‌, வயது, பிறந்த தேதி, வீட்டு முகவரி, பள்ளியின்‌ பெயர்‌ ஆகிய விவரங்களுடன்‌ வயது சான்றிதழ்‌ கொண்டு வரவேண்டும்‌. பரதநாட்டியம்‌, கிராமிய நடனம்‌, குரலிசை ஆகிய கலை போட்டிகளின்‌ 5-8, 9-12 வயது பிரிவு மாணவ, மாணவியருக்கு காலை 9.30 மணி முதல்‌ பிற்பகல்‌ 1.00 மணி வரையிலும்‌, 13-16 வயது வகை மாணவ, மாணவியருக்கு பிற்பகல்‌ 2.00 மணி முதல்‌ 4.30 மணி வரையிலும்‌, ஓவியப்‌ போட்டிகள்‌ காலை 10.00 மணி முதல்‌ 1.00 மணி வரையிலும்‌ நடைபெறும்‌.

போட்டிகளில்‌ கலந்து கொள்ளும்‌ மாணவர்களுக்கு பங்கேற்புக்கான சான்றிதழும்‌, மாவட்ட போட்டியில்‌ வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும்‌ வழங்கப்படும்‌.

 இப்போட்டிக்கான விதிமுறைகள்‌

1. பரதநாட்டியம்‌ (செவ்வியல்‌)

பாத நாட்டியம்‌, குச்சிப்புடி, மோகினி ஆட்டம்‌ போன்ற நடனங்கள்‌ ஆடலாம்‌.

முழு ஒப்பனை மற்றும்‌ உரிய உடைகளுடன்‌ நடனம்‌ இருத்தல்‌ வேண்டும்‌, திரைப்படப்‌ பாடல்களுக்கான நடனங்கள்‌ (கர்நாடக இசை பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள்‌ தவிர்த்து) மேற்கத்திய நடனங்கள்‌ மற்றும்‌ குழு நடனங்களுக்கு அனுமதியில்லை.

குறுந்தகடுகள்‌ / பென்‌ டிரைவ்‌ ஆகியவற்றினை பயன்படுத்திக்‌ கொள்ளலாம்‌.

இவற்றை போட்டியில்‌ பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்‌.

சூறைந்த பட்சம்‌ 3 நிமிடங்கள்‌, அதிக பட்சம்‌ 5 நிமிடங்கள்‌ வரை நடனமாட அனுமதிக்கப்படும்‌.

2. கிராமிய நடனம்‌ (நாட்டுப்புறக்‌ கலை)

தமிழகத்தின்‌ மாண்பினை வெளிப்படுத்தும்‌ கிராமிய நடனங்கள்‌ ஆடலாம்‌.

முழு ஒப்பனை மற்றம்‌ உரிய உடைகளுடன்‌ நடனம்‌ இருத்தல்‌ வேண்டும்.‌ திரைப்படப்‌ பாடல்களுக்கான நடனங்கள்‌ (கிராமிய இசை பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள்‌ தவிர்த்து) மற்றும்‌ குழு நடனங்கள்‌ அனுமதியில்லை. குறுந்தகடுகள்‌ / பென்‌ டிரைவ்‌

பயன்படுத்திக்‌ கொள்ளலாம்‌. இவற்றை போட்டியில்‌ பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்‌. குறைந்த பட்சம்‌ 3 நிமிடங்கள்‌, அதிக பட்சம்‌ 5 நிமிடங்கள்‌ வரை நடனமாட அணுமதிக்கப்படும்‌.

3. குரலிசை

கர்நாடக இசை பாடல்கள்‌, தேசியப்‌ பாடல்கள்‌, சமூக விழிப்புணர்ச்சி பாடல்கள்‌, நாட்டுப்புறப்‌ பாடல்கள்‌ மட்டுமே பாட வேண்டும்‌. மேற்கத்திய இசை, திரைப்பட பாடல்கள்‌, பிற மொழி பாடல்கள்‌, குழுப்பாடல்களுக்கு அனுமதியில்லை.

குறைந்த பட்சம்‌ 3 நிமிடங்கள்‌, அதிக பட்சம்‌ 5 நிமிடங்கள்‌ வரை பாட அனுமதிக்கப்படும்‌.

4. ஓவியம்‌

40x 30 செ.மீ அளவுள்ள ஓவியத்‌ தாள்களையே பயன்படுத்த வேண்டும்‌.

பென்சில்‌, கிரையான்‌, வண்ணங்கள்‌, போஸ்டர்‌ கலர்‌, வாட்டர்‌ கலர்‌ , ஆயில்‌ கலர்‌, பெயிண்டிங்‌ என எவ்வகையிலும்‌ ஓவியங்கள்‌ அமையலாம்‌. ஓவியத்தாள்‌, வண்ணங்கள்‌ தூரிகைகள்‌ உட்பட தங்களுக்குத்‌ தேவையானவற்றைப்‌ போட்டியாளர்களே கொண்டு வருதல்‌ வேண்டும்‌. குழுவாக ஒவியங்கள்‌ வரைய அனுமதியில்லை. ஒவ்வாரு வயது வகைக்கும்‌ தனித்‌ தனியாக தலைப்புகள்‌ போட்டி தொடங்கும்‌போது அறிவிக்கப்படும்‌

5. வயது விவரம்‌ (1 . 6 . 2024 அன்று உள்ளபடி 16 வயது)

அ. 5 முதல்‌ 8 வயது பிரிவு - 01.06.2016 முதல்‌ 31.05.2019 வரை

ஆ. 9 முதல்‌ 12 வயது பிரிவு - 01.06.2012 முதல்‌ 30.05.2015 வரை

ஒ. 13 முதல்‌ 16 வயது பிரிவு - 01.06.2008 முதல்‌ 30.05.2011 வரை

மேலும்‌, விவரங்களுக்கு 044-28192152 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Aadhar Update:  ஆதார் கார்டை புதுப்பிக்க மீண்டும் கால அவகாசம்! எப்போ வரை டைம் தெரியுமா?
Aadhar Update: ஆதார் கார்டை புதுப்பிக்க மீண்டும் கால அவகாசம்! எப்போ வரை டைம் தெரியுமா?
Eye Drops License: மக்களே உஷார்..! கண் சொட்டு மருந்துக்கான உரிமத்தை ரத்து செய்த மத்திய அரசு - காரணம் என்ன?
Eye Drops License: மக்களே உஷார்..! கண் சொட்டு மருந்துக்கான உரிமத்தை ரத்து செய்த மத்திய அரசு - காரணம் என்ன?
TN Bus: தொடர் விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா? நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
TN Bus: தொடர் விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா? நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
Breaking News LIVE: திருப்பூரில் மகாவிஷ்ணுவிடம் போலீசார் தீவிர விசாரணை
Breaking News LIVE: திருப்பூரில் மகாவிஷ்ணுவிடம் போலீசார் தீவிர விசாரணை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayam Ravi Divorce | Jeeva Car Accident | விபத்தில் சிக்கிய கார்!  டென்ஷன் ஆன ஜீவா! ஷாக் சம்பவம்KN Nehru issue | செருப்பை சுமந்த தொண்டர்” இது நியாயமா KN நேரு?” தீயாய் பரவும் வீடியோVinesh phogat on PT Usha | ”பாஜகவின் அரசியல்” ஒலிம்பிக்கில் நடந்தது என்ன? வினேஷ் போகத் பகீர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhar Update:  ஆதார் கார்டை புதுப்பிக்க மீண்டும் கால அவகாசம்! எப்போ வரை டைம் தெரியுமா?
Aadhar Update: ஆதார் கார்டை புதுப்பிக்க மீண்டும் கால அவகாசம்! எப்போ வரை டைம் தெரியுமா?
Eye Drops License: மக்களே உஷார்..! கண் சொட்டு மருந்துக்கான உரிமத்தை ரத்து செய்த மத்திய அரசு - காரணம் என்ன?
Eye Drops License: மக்களே உஷார்..! கண் சொட்டு மருந்துக்கான உரிமத்தை ரத்து செய்த மத்திய அரசு - காரணம் என்ன?
TN Bus: தொடர் விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா? நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
TN Bus: தொடர் விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா? நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
Breaking News LIVE: திருப்பூரில் மகாவிஷ்ணுவிடம் போலீசார் தீவிர விசாரணை
Breaking News LIVE: திருப்பூரில் மகாவிஷ்ணுவிடம் போலீசார் தீவிர விசாரணை
Emergency Medicine: எமர்ஜென்சி மருந்து பற்றி தெரியுமா? வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய மாத்திரைகள் என்ன?
Emergency Medicine: எமர்ஜென்சி மருந்து பற்றி தெரியுமா? வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய மாத்திரைகள் என்ன?
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு நிதி: எச்.ராஜா திட்டவட்டம்!
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு நிதி: எச்.ராஜா திட்டவட்டம்!
அரசியலில் கால்பதிக்க தயாராகும் விவசாயிகள் - காரணம் இதுதான் 
TVK Vijay Maanadu: தவெக மாநாடு தேதி மாற்றம்? புதிய அறிவிப்பு எப்போது ?
TVK Vijay Maanadu: தவெக மாநாடு தேதி மாற்றம்? புதிய அறிவிப்பு எப்போது ?
Embed widget