மேலும் அறிய

Central Government Scholarship: கல்லூரி முடிக்கும்வரை மத்திய அரசு உதவித்தொகை; யாரெல்லாம், எப்படி விண்ணப்பிக்கலாம்?- முழு விவரம்

Central Sector Scholarship Scheme: மத்திய அரசு உயர் கல்வி படிக்கும் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவித் தொகையை வழங்கி வருகிறது. யாரெல்லாம், எப்படி விண்ணப்பிக்கலாம் என்று பார்க்கலாம். 

CENTRAL SECTOR SCHEME OF SCHOLARSHIPS FOR COLLEGE AND UNIVERSITY STUDENTS

மத்திய அரசு உயர் கல்வி படிக்கும் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவித் தொகையை வழங்கி வருகிறது. யாரெல்லாம், எப்படி விண்ணப்பிக்கலாம் என்று பார்க்கலாம். 

நாடு முழுவதும் சிறப்பாகப் படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அரசு சார்பில் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உயர் கல்வி உதவித் தொகை  (CENTRAL SECTOR SCHEME OF SCHOLARSHIPS FOR COLLEGE AND UNIVERSITY STUDENTS) வழங்கப்படுகிறது. மத்திய உயர் கல்வி அமைச்சகம் இந்த உதவித்தொகையை வழங்குகிறது. 

கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்குக் கல்வித் தகுதி (மெரிட்)  அடிப்படையில் இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது.

என்ன தகுதி?

* வழக்கமான கல்லூரி படிப்பைப் படிப்பவராக இருக்க வேண்டும். அஞ்சல் வழிக் கற்றலுக்கோ, திறந்தநிலைப் படிப்புப் படிக்கும் மாணவர்களுக்கோ உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது. 

* ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்கக் கூடாது. 

* டிப்ளமோ மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை கிடையாது. 

* வேறு எந்த உதவித் தொகையையும் பெறும் மாணவராக இருக்கக் கூடாது. 

* உதவித்தொகை இரு பாலருக்கும் சமமாகப் பகிர்ந்து அளிக்கப்படும். அதாவது 50 சதவீத உதவித்தொகை மாணவர்களுக்கும் 50 சதவீத உதவித்தொகை மாணவிகளுக்கும் வழங்கப்படும். 

* அதிகபட்சமாக 82 ஆயிரம் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. மானுடவியல், அறிவியல் மற்றும் வணிகப் படிப்புகளுக்கு 3:3:1 என்ற விகிதத்தில் அரசு உதவித்தொகையை வழங்கி வருகிறது. 

* ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எஸ்சி பிரிவினருக்கு 15 சதவீதமும் எஸ்டி பிரிவினருக்கு 7.5 சதவீதமும் வழங்கப்பட உள்ளது. மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு 5% கிடைமட்ட இட ஒதுக்கீடு உண்டு. 

எவ்வளவு தொகை வழங்கப்படுகிறது?

கல்லூரி படிப்புகளில் முதல் 3 ஆண்டுகளுக்கு ஆண்டுக்குத் தலா ரூ. 12 ஆயிரம் வழங்கப்படும். முதுகலைப் படிப்புகளுக்கு ஆண்டுதோறும் தலா ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். அதேபோல தொழில்நுட்பப் படிப்புகளுக்கு 4 மற்றும் 5ஆம் ஆண்டுகளில் தலா ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்

மாணவர்கள் ஆண்டுதோறும் இந்த உதவித்தொகையைப் பெற புதுப்பிக்க வேண்டும். அதிகபட்சமாக 5 ஆண்டுகளுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை வழங்கப்படும். நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்குக்கு தொகை செலுத்தப்படும். 

இந்த நிலையில் இந்த உதவித்தொகைக்கு எப்படி விண்ணப்பிப்பது என்று பார்க்கலாம்.

மாணவர்கள் முதலில் மத்திய அரசின் உதவித்தொகைக்கான தளத்தில், (National Scholarship Portal) முன்பதிவு செய்ய வேண்டும். 


Central Government Scholarship: கல்லூரி முடிக்கும்வரை மத்திய அரசு உதவித்தொகை; யாரெல்லாம், எப்படி விண்ணப்பிக்கலாம்?- முழு விவரம்

பொதுவாக என்னென்ன ஆவணங்கள் அவசியம்?

* மாணவரின் ஆதார் எண்
*  மாணவர்களின் வங்கிக் கணக்கு எண் மற்றும் IFSC குறியீடு
*  வங்கிக் கணக்கு எண் விவரங்கள் (சொந்த வங்கிக் கணக்கு இல்லாத மாணவர்களுக்கு, பெற்றோர்/ பாதுகாவலர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள்).
*  தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட வருமானச் சான்றிதழ்.
*  இ- மெயில் முகவரி
* மொபைல் எண்

ஆகியவற்றை உள்ளிட்டு, “Central Sector Scheme of Scholarship for College and University Students” என்ற பக்கத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

மத்திய அரசு உயர் கல்வி உதவித் தொகை பற்றிய விதிமுறைகளை https://scholarships.gov.in/public/schemeGuidelines/Guidelines_DOHE_CSSS.pdf என்ற இணைப்பில் தெரிந்துகொள்ளலாம்.

உதவித் தொகை தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு: https://scholarships.gov.in/public/schemeGuidelines/FAQ_DOHE_CSSS.pdf

மேலும் விவரங்களை அறிய: https://scholarships.gov.in/

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

இனி 1 ஹவர்தான்; 7 மணிக்கு பின் நோ! செல்போன், இணைய மோகத்தை கட்டுப்படுத்த புதிய கொள்கை வெளியீடு
இனி 1 ஹவர்தான்; 7 மணிக்கு பின் நோ! செல்போன், இணைய மோகத்தை கட்டுப்படுத்த புதிய கொள்கை வெளியீடு
Thervukalam App: போட்டித் தேர்வர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! தேர்வுக்களம் செயலி- TNPSC, TRB, TNUSRB தேர்வுகளுக்கு ரெடியாகுங்க!
Thervukalam App: போட்டித் தேர்வர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! தேர்வுக்களம் செயலி- TNPSC, TRB, TNUSRB தேர்வுகளுக்கு ரெடியாகுங்க!
RRB NTPC தேர்வு முடிவுகள் எப்போது? 18 மாதங்களாக காத்திருக்கும் தேர்வர்கள்! ட்ரெண்டாகும் கோரிக்கை!
RRB NTPC தேர்வு முடிவுகள் எப்போது? 18 மாதங்களாக காத்திருக்கும் தேர்வர்கள்! ட்ரெண்டாகும் கோரிக்கை!
மாதவிடாய் சுகாதாரம்: சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவிகளுக்கான புதிய விதிகள்! கல்வியில் இனி தடையில்லை!
மாதவிடாய் சுகாதாரம்: சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவிகளுக்கான புதிய விதிகள்! கல்வியில் இனி தடையில்லை!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BJP Candidate List: அண்ணாமலையை ஏமாற்றிய நயினார்? பாஜகவின் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் யார்? முழு விவரம் இதோ
BJP Candidate List: அண்ணாமலையை ஏமாற்றிய நயினார்? பாஜகவின் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் யார்? முழு விவரம் இதோ
படிச்சவரா சார் நீங்க? தவெக பெண் தொண்டர்களை கீழ்த்தரமாக பேசிய அப்துல்கலாம் ஆலோசகர்!
படிச்சவரா சார் நீங்க? தவெக பெண் தொண்டர்களை கீழ்த்தரமாக பேசிய அப்துல்கலாம் ஆலோசகர்!
Annamalai: அண்ணாமலை போட்டியிடுவது எங்கே? வாய்ப்புள்ள தொகுதி எது? - வாக்அவுட்டா? திடீர் மாற்றம் ஏன்?
Annamalai: அண்ணாமலை போட்டியிடுவது எங்கே? வாய்ப்புள்ள தொகுதி எது? - வாக்அவுட்டா? திடீர் மாற்றம் ஏன்?
Trump Iran War: ”மிரட்டிக்கோ, 5 கன்டிஷன், ஓகேனா போரை முடிச்சுக்கலாம்” ட்ரம்புக்கு நிபந்தனை விதித்த ஈரான்
Trump Iran War: ”மிரட்டிக்கோ, 5 கன்டிஷன், ஓகேனா போரை முடிச்சுக்கலாம்” ட்ரம்புக்கு நிபந்தனை விதித்த ஈரான்
Tata Altroz Rival: டாடாவின் ப்ரீமியம் ஹேட்ச்பேக்கை வாங்க முடியலையா? டோண்ட் வரி - அதா இருக்கே 5 மாடல்கள்
Tata Altroz Rival: டாடாவின் ப்ரீமியம் ஹேட்ச்பேக்கை வாங்க முடியலையா? டோண்ட் வரி - அதா இருக்கே 5 மாடல்கள்
Gold and silver rate today : தங்கம் விலை சவரனுக்கு ரூ. 8000 உயர்வு.! 3 நாளில் அதிரடியாக அதிகரிப்பு- வெள்ளி விலை என்ன தெரியுமா.?
தங்கம் விலை சவரனுக்கு ரூ. 8000 உயர்வு.! 3 நாளில் அதிரடியாக அதிகரிப்பு- வெள்ளி விலை என்ன தெரியுமா.?
EPS slams DMDK:
EPS slams DMDK: "அங்கீகாரமே இல்லை.. இத்தனை சீட் கொடுத்துள்ளார்கள்.. தேமுதிகவை அட்டாக் செய்த இபிஎஸ்
IPL 2026: நாளை மறுநாள் தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா! ஒரு கோப்பைக்காக மல்லுகட்டும் 10 அணிகள்!
IPL 2026: நாளை மறுநாள் தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா! ஒரு கோப்பைக்காக மல்லுகட்டும் 10 அணிகள்!
Embed widget