மேலும் அறிய

Trump Iran War: ”மிரட்டிக்கோ, 5 கன்டிஷன், ஓகேனா போரை முடிச்சுக்கலாம்” ட்ரம்புக்கு நிபந்தனை விதித்த ஈரான்

Trump Iran War: அமெரிக்கா முன்மொழிந்த திட்டத்தை நிராகரித்த ஈரான், 5 நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் தற்போதைய போரை முடித்துக் கொள்ளலாம் என உறுதி அளித்துள்ளது.

Trump Iran War: அதிபர் ட்ரம்ப் வெறுமென மிரட்டவில்லை, அவர் பெரும் தாக்குதலுக்கு தயாராக உள்ளார் என அமெரிக்கா தரப்பில் ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

”ட்ரம்ப் சொல்வதை கேட்க முடியாது”

வளைகுடா நாடுகளில் நிலவி வரும் பதற்றங்களை தணிக்க வேண்டுமானால், அமெரிக்க 5 நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதோடு, ட்ரம்ப் முன்மொழிந்த பரிந்துரைகளையும் ஈரான் நிராகரித்துள்ளது. மேலும், தங்களது விருப்பப்படியே எந்தவொரு ஒப்பந்தமும் கையெழுத்தாகும் எனவும் உறுதிபட தெரிவித்துள்ளது. மோதலை முடிவுக்கு கொண்டு வர சில நட்பு நாடுகள் மத்தியஸ்தம் செய்து வரும் சூழலில், அவற்றின் வாயிலாக தங்களது நிலைப்பாட்டை அமெரிக்காவிற்கு ஈரான் தெரியப்படுத்தியுள்ளது. ட்ரம்ப் முன்மொழிந்துள்ள திட்டங்கள் அமைதிக்கானதாக இல்லாமல், எங்கள் மீதான கூடுதல் அழுத்தத்திற்கே வழிவகுக்கிறது என குற்றம்சாட்டியுள்ளது. எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் முன்பாக பாதுகாப்பு, இழப்பீடுகள் மற்றும் பிராந்திய உறுதிமொழிகள் தொடர்பான உத்தரவாதங்கள் அளிக்கப்பட வேண்டும் என ஈரான் வலியுறுத்தியுள்ளது.

ஈரான் போட்ட 5 கன்டிஷன்கள் என்ன?

கீழே குறிப்பிடப்பட்டுள்ள 5 நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் மட்டுமே, போரை முடிவுக்கு கொண்டுவர ஒப்புக்கொள்ளப்படும் என ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனராம். அதன்படி,

  • ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்பு மற்றும் இலக்கு வைத்து நடத்தப்படும் படுகொலைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும்
  • ஈரான் மீது மீண்டும் போர் தொடுக்கப்படாது என்பதற்கு உறுதியான உத்தரவாதங்கள் அளிக்கப்பட வேண்டும்
  • போர் சேதங்கள் மற்றும் இழப்பீடுகளை தெளிவாகவும் சட்டப்பூர்வமாகவும் வரையறுக்க வேண்டும்
  • பிராந்தியத்தில் ஈரானுடன் இணைந்த எதிர்ப்பு குழுக்கள் சம்பந்தப்பட்டவை உட்பட அனைத்து வகையான பகைமைகளுக்கும் முடிவு கட்டப்பட வேண்டும்
  • ஹார்மஸ் ஜலசந்தியின் மீதான ஈரானின் இறையாண்மையை அங்கீகரிப்பது, தங்களது இயற்கையான மற்றும் சட்டப்பூர்வமான உரிமை. அந்த கடைமையை அமெரிக்கா செய்ய வேண்டும்

என ஈரான் தங்களது நிபந்தனைகளை பட்டியலிட்டுள்ளது. இதனால், வளைகுடா நாடுகளில் உள்ள பதற்றத்தை தடுக்கும் வகையிலான ஒப்பந்தம் உடனடியாக கையெழுத்தாகும் என்பதற்கு வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

அமெரிக்கா எச்சரிக்கை..

இதனிடையே, மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை ஈரான் ஏற்காவிட்டால், அதன் மீது கடும் தாக்குதலைத் தொடுக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தயாராக இருப்பதாக, அந்நாட்டின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட் எச்சரித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “ட்ரம்ப் வெறுமனே மிரட்டல் விடுப்பவர் அல்ல. தற்போதைய சூழ்நிலையை ஈரான் தவறாகக் கணிக்கக் கூடாது. தற்போதைய தருணத்தின் யதார்த்தத்தை ஈரான் ஏற்றுக்கொள்ளத் தவறினால், தாங்கள் ராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டுவிட்டோம் என்பதையும், தொடர்ந்து தோற்கடிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் புரிந்துகொள்ளத் தவறினால், இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அவர்கள் கடுமையாகத் தாக்கப்படுவதை அதிபர் ட்ரம்ப் உறுதி செய்வார்” என கடுமையாக எச்சரித்துள்ளார்.

அதேநேரம், ஈரான் உடனான பேச்சுவார்த்தை தொடர்பாக அவர் தரப்பிலிருந்து எந்தவித கருத்தையும் வெளியிட மறுத்துவிட்டார். பாகிஸ்தான் முக்கிய மத்தியஸ்தராக இருந்து முன்னெடுக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தையானது, இன்னும் முழுமையான வடிவம் பெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. மறுமுனையில் அமெரிக்கா மேற்கொள்ளும் எந்தவொரு ஒப்பந்தமும் தங்களை கட்டுப்படுத்தாது என இஸ்ரேல் பேசி வருகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

US New Immigration Bill: அமெரிக்காவில் ‘க்ரீன் கார்டுக்கு க்ரீன் சிக்னல்‘; லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு குட் நியூஸ்; புதிய மசோதா
அமெரிக்காவில் ‘க்ரீன் கார்டுக்கு க்ரீன் சிக்னல்‘; லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு குட் நியூஸ்; புதிய மசோதா
Iran Vs Trump: ''நாங்க பேசனும்னு சொன்னோமா.? அவர் தானாவே போர நிறுத்திட்டார்''; ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்
''நாங்க பேசனும்னு சொன்னோமா.? அவர் தானாவே போர நிறுத்திட்டார்''; ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்
Crime News: 5 வயது சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்த ஆசிரியை - காரணம் என்ன? கொதித்து எழுந்த பெற்றோர்
5 வயது சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்த ஆசிரியை - காரணம் என்ன? கொதித்து எழுந்த பெற்றோர்
US Iran War: “நிறுத்தி இருக்கோம், ஆனா நிறுத்தல“ ஈரான் மீதான தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை முக்கிய அறிக்கை
“நிறுத்தி இருக்கோம், ஆனா நிறுத்தல“ ஈரான் மீதான தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை முக்கிய அறிக்கை

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
Mk Stalin Kolathur : கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்; சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்னும் சிலநாளே அவகாசம்! விவரம்
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்; சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்னும் சிலநாளே அவகாசம்! விவரம்
Aadi Perukku holiday Bus : ஆடிப்பெருக்கு, வார விடுமுறைக்கு வெளியூர் செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்துகள் இயக்கம் - எங்கிருந்து எங்கே?
ஆடிப்பெருக்கு, வார விடுமுறைக்கு வெளியூர் செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்துகள் இயக்கம் - எங்கிருந்து எங்கே?
Dhanush : ‘ஒரு தமிழனா!’ யாரு நீங்க தமிழனா சார்?’ நடிகர் தனுஷை கண்டிக்கும் தமிழர்கள்..!
‘ஒரு தமிழனா!’ யாரு நீங்க தமிழனா சார்?’ நடிகர் தனுஷை கண்டிக்கும் தமிழர்கள்..!
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Embed widget