மேலும் அறிய

மாதவிடாய் சுகாதாரம்: சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவிகளுக்கான புதிய விதிகள்! கல்வியில் இனி தடையில்லை!

பள்ளிகளில் மாதவிடாய் சுகாதார மேலாண்மை: சி.பி.எஸ்.இ புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

பள்ளிகளில் மாணவிகளுக்கான மாதவிடாய் சுகாதார மேலாண்மையை உறுதி செய்யும் வகையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தனது அங்கீகாரம் பெற்ற அனைத்துப் பள்ளிகளுக்கும் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. மாதவிடாய் சுகாதாரத்தை ஓர் அடிப்படை அரசியலமைப்பு உரிமையாக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, இந்த மிக முக்கிய உத்தரவை சிபிஎஸ்இ கல்வி வாரியம் பிறப்பித்துள்ளது.

சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, மாணவிகளுக்குப் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான கற்றல் சூழலை உருவாக்குவது அனைத்துப் பள்ளிகளின் கட்டாயக் கடமையாகும். மாதவிடாய் காலங்களில் மாணவிகள் எதிர்கொள்ளும் உடல் மற்றும் மனரீதியான சிரமங்களைக் குறைக்கவும், அவர்கள் எவ்வித தடையுமின்றி கல்வியைத் தொடரவும் இந்தப் புதிய விதிமுறைகள் வழிவகை செய்கின்றன.

புதிய வழிகாட்டுதல்களின் முக்கிய அம்சங்கள்

சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்ற அனைத்துப் பள்ளிகளிலும் உள்ள கழிப்பறைகளில், போதுமான தண்ணீர் வசதியுடன் கூடிய தூய்மை எப்போதும் பராமரிக்கப்பட வேண்டும். மாணவிகளுக்குத் தேவைப்படும் நேரத்தில் உடனடியாகப் பயன்படுத்தும் வகையில், தரமான சானிட்டரி நாப்கின்கள் பள்ளிகளில் எளிதாகக் கிடைக்கும்படி ஏற்பாடு செய்ய வேண்டும்.

பயன்படுத்தப்பட்ட நாப்கின்களைப் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான முறையில் அப்புறப்படுத்த, கழிப்பறைகளில் எரியூட்டிகள் அல்லது முறையான மூடியுடன் கூடிய குப்பைத் தொட்டிகள் கட்டாயம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இவற்றைக் கண்காணிக்கவும் பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் ஏற்படுத்தவும், இது தொடர்பான சமூகத் தயக்கங்கள் மற்றும் மூடநம்பிக்கைகளைப் போக்கவும் பள்ளிகள் சிறப்பு விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை வகுப்புகளைத் தொடர்ந்து நடத்த வேண்டும் எனவும் சிபிஎஸ்இ வலியுறுத்தியுள்ளது.

அனைவரும் பின்பற்றுவதை உறுதி செய்க

உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை முழுமையாக நடைமுறைப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையானது, மாணவிகளின் கண்ணியம், உடல்நலம் மற்றும் நல்வாழ்வைப் பேணிக் காப்பதோடு, அவர்களின் பள்ளி இடைநிற்றலைத் தடுத்து வருகைப் பதிவை அதிகரிக்கவும் பெரிதும் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டுதல்களை அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளும் உடனடியாகப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

20 லட்சம் பேரின் அரசு வேலைக் கனவு! குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க தவாக தலைவர் கோரிக்கை
20 லட்சம் பேரின் அரசு வேலைக் கனவு! குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க தவாக தலைவர் கோரிக்கை
திருச்சி மாஸ் சாதனை! உயர்கல்வி சேர்க்கையில் தமிழகத்திலேயே முதலிடம்: வெற்றிக் கொடி நாட்டியது
திருச்சி மாஸ் சாதனை! உயர்கல்வி சேர்க்கையில் தமிழகத்திலேயே முதலிடம்: வெற்றிக் கொடி நாட்டியது
குரூப் 4: லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள்; வெறும் 6,574 அறிவிப்பா? - கொந்தளித்த டிடிவி தினகரன்
குரூப் 4: லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள்; வெறும் 6,574 அறிவிப்பா? - கொந்தளித்த டிடிவி தினகரன்
தாட்கோ சிறப்பு பயிற்சி: ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் பொன்னான வாய்ப்பு!
தாட்கோ சிறப்பு பயிற்சி: ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் பொன்னான வாய்ப்பு!

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
VS Babu Health Update: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி இருக்கு? அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அப்டேட்!
VS Babu Health Update: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி இருக்கு? அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அப்டேட்!
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Mahindra Offers: ரூபாய் 1.50 லட்சம் தள்ளுபடி... Scorpio முதல் Thar வரை.. நவராத்திரி சலுகையை அறிவித்தது மஹிந்திரா!
Mahindra Offers: ரூபாய் 1.50 லட்சம் தள்ளுபடி... Scorpio முதல் Thar வரை.. நவராத்திரி சலுகையை அறிவித்தது மஹிந்திரா!
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
Embed widget