மேலும் அறிய

Thervukalam App: போட்டித் தேர்வர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! தேர்வுக்களம் செயலி- TNPSC, TRB, TNUSRB தேர்வுகளுக்கு ரெடியாகுங்க!

தமிழக அரசால் உருவாக்கப்பட்ட ’’தேர்வுக்களம்" என்னும் செயலியின் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்படுத்தும் விதம் இதோ!

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம், தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியம், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியம் போன்ற தேர்வு முகமைகள் மூலம் தெரிவு செய்யும் செயல்முறைகளை எளிமைப்படுத்தும் பொருட்டு தமிழக அரசால் "தேர்வுக் களம்" என்னும் ஒருங்கிணைந்த கைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இச்செயலியினை பதிவிறக்கம் செய்து, அதன் பயனாளிகள் உரிய வகையில் பயன்படுத்த ஏதுவாக, இச்செயலி குறித்த விழிப்புணர்வை மாவட்டம் தோறும் கொண்டு செல்ல வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் வலியுறுத்தி உள்ளார்.

எதற்காக இந்த செயலி?

நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், (TNUSRB), தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மற்றும் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MSRB) போன்ற தேர்வு முகமைகள் மூலம் பணியாளர்களை தெரிவு செய்யும் செயல்முறைகளை எளிமைப்படுத்தும் பொருட்டு தமிழக அரசால் உருவாக்கப்பட்ட ’’தேர்வுக்களம்" என்னும் ஒருங்கிணைந்த கைபேசி செயலி (Integrated Mobile App) தமிழ்நாடு முதலமைச்சரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

என்னென்ன சிறப்பு அம்சங்கள்?

தமிழ்நாடு அரசின் தெரிவு முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகள் குறித்த அனைத்து ஆட்சேர்ப்பு அறிவிப்புகள், அத்தேர்வர்களுக்கு இணையம் (online) வழியே விண்ணப்பித்தல், நுழைவுச்சீட்டு பதிவிறக்கம், தேர்வுமுடிவுகள், செய்தி வெளியீடுகள், தேர்வுக்கான பாடக்குறிப்புகள், முந்தைய போட்டித் தேர்வுகளின் விடைகளுடன் கூடிய வினாத்தாள்கள், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ள இயலும்.

அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளின் காணொளிகள், வேலைவாய்ப்புச் செய்திகள் உள்ளிட்ட செய்தித்தாள்களில் அளிக்கப்படும் அறிவிப்புகள் ஆகியவற்றை இருக்கும் இடத்திலிருந்தே தெரிந்துகொள்ள இயலும்.

கைபேசிக்கு உடனடியாக அறிவிப்பு

குறித்த நேரத்தில், நுழைவுச் சீட்டுக்கள், தேர்வுமுடிவுகள் மற்றும் முக்கிய தகவல்கள் நேரடியாக ஆர்வலர்களின் கைபேசிக்கு உடனடியாக அறிவிக்கப்படும் வண்ணம் இச்செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் எந்த தகவலும் தவறவிடப்படாமல் தேர்வர்கள் சிறப்பாகவும், திறமையாகவும் தேர்வுக்கான தயாரிப்பை மேற்கொள்ள முடியும்.

இந்திய குடிமைப் பணிகள் தேர்வு வாரியம் உள்ளிட்ட ஒன்றிய அரசின் தேர்வு முகமைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் நடைபெறும் போட்டித் தேர்வுகள் குறித்த விவரங்களையும் இச்செயலியில் பெறலாம்.

பல செயலிகள், பல வலைத்தளங்கள், பல உள்நுழைவுகள் போன்ற பயன்பாட்டினை குறைத்து, ஒரே செயலியில் அனைத்து சேவைகளையும் பெறும் வசதியை இந்த தேர்வுக் களம் (Thervukkalam) செயலி வழங்குகிறது.

பயனாளிகள் அல்லது ஆர்வலர்கள் Play Store அல்லது App Store மூலம் தேர்வுக்களம் செயலியை பதிவிறக்கம் செய்து, பதிவு செய்து, உள்நுழைய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால், போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிப்பது மிக எளிதான நடைமுறையாகிவிடும். இதனால் பணிநாடுநர்களின் நேரமும், முயற்சியும் மிச்சமாகும்.

எனவே, இச்செயலியின் பயன்பாட்டினை, அதன் பயனாளிகள் அறிந்து கொள்ளும் வகையிலும், அதனை பயனாளிகள் அனைவரும் பதிவிறக்கம் செய்து உரிய வகையில் பயன்படுத்துவதை உறுதி செய்யும் விதமாகவும் இச்செயலி குறித்த விழிப்புணர்வை ஒவ்வொரு மாவட்டம் தோறும் கொண்டு செல்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

மாணவர்களே ரெடி! ரூ. லட்சக்கணக்கில் கல்விக் கடன்... 25-ம் தேதி மாபெரும் முகாம்!
மாணவர்களே ரெடி! ரூ. லட்சக்கணக்கில் கல்விக் கடன்... 25-ம் தேதி மாபெரும் முகாம்!
மாணவர்களே உஷார்: போதைப்பொருள் மூளையை அழிக்கும்; CBSE எச்சரிக்கை!
மாணவர்களே உஷார்: போதைப்பொருள் மூளையை அழிக்கும்; CBSE எச்சரிக்கை!
முதல்வர் விஜயின் மௌனம் வேதனை அளிக்கிறது: பகுதிநேர ஆசிரியர்கள்..
முதல்வர் விஜயின் மௌனம் வேதனை அளிக்கிறது: பகுதிநேர ஆசிரியர்கள்..
Student Scholarship : வெளிநாட்டில் படிக்க போறீங்களா.? ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை.! விண்ணப்பிப்பது எப்படி.? தகுதி என்ன.?
வெளிநாட்டில் படிக்க போறீங்களா.? ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை.! விண்ணப்பிப்பது எப்படி.? தகுதி என்ன.?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’பங்கேற்கவில்லை ; வக்கில்லை’ டெங்கு பாதிப்பு குறித்து அமைச்சர் அருண்ராஜ் மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி தாக்கு..!
’பங்கேற்கவில்லை ; வக்கில்லை’ டெங்கு பாதிப்பு குறித்து அமைச்சர் அருண்ராஜ் மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி தாக்கு..!
’கொத்து கொத்தாக குவியும் டெங்கு நோயாளிகள்’ காணாமல் போன சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்..!
’கொத்து கொத்தாக குவியும் டெங்கு நோயாளிகள்’ காணாமல் போன சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்..!
Edappadi Palaniswami : தமிழ்நாட்டையே உலுக்கும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை’ வாயை திறக்காத எடப்பாடி பழனிசாமி..?
’தமிழ்நாட்டையே உலுக்கும் பாலியல் வன்கொடுமை’ வாயை திறக்காத எடப்பாடி பழனிசாமி..!
Chennai Metro: பூந்தமல்லி டூ வடபழனி மெட்ரோ..! 14.6KM பணிகள் முழுமையடைந்தும் திறக்கப்படாதது ஏன்? 7 மாத வெயிட்டிங்
பூந்தமல்லி டூ வடபழனி மெட்ரோ..! 14.6KM பணிகள் முழுமையடைந்தும் திறக்கப்படாதது ஏன்? 7 மாத வெயிட்டிங்
காய்ச்சல் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள்.! முக கவசம் அணியுங்கள் - சுகாதாரத்துறை அலர்ட்
காய்ச்சல் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள்.! முக கவசம் அணியுங்கள் - சுகாதாரத்துறை அலர்ட்
TN Byelection: ஆளுக்கு ஒன்னு..! வேட்பாளர்களை கைவிட்டு, DMK & ADMK கூட்டணி? சமாளிக்குமா TVK? விஜய் வியூகம் என்ன?
ஆளுக்கு ஒன்னு..! வேட்பாளர்களை கைவிட்டு, DMK & ADMK கூட்டணி? சமாளிக்குமா TVK? விஜய் வியூகம் என்ன?
Tasmac Liquor Price Hike : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! பாட்டிலுக்கு ரூ.20 உயரப்போகுது.? எந்த சரக்குக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! பாட்டிலுக்கு ரூ.20 உயரப்போகுது.? எந்த சரக்குக்கு எவ்வளவு தெரியுமா.?
ஜெம் வீரமணி வழக்கு.. ஒருத்தரையும் விடக்கூடாது.. ஆக்‌ஷன் எடுத்தே ஆகணும்.. கனிமொழி கண்டனம்!
ஜெம் வீரமணி வழக்கு.. ஒருத்தரையும் விடக்கூடாது.. ஆக்‌ஷன் எடுத்தே ஆகணும்.. கனிமொழி கண்டனம்!
Embed widget