மேலும் அறிய

Annamalai: அண்ணாமலை போட்டியிடுவது எங்கே? வாய்ப்புள்ள தொகுதி எது? - வாக்அவுட்டா? திடீர் மாற்றம் ஏன்?

Annamalai Constituency BJP Candidates: தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிட வாய்ப்புள்ள தொகுதிகள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Annamalai Constituency BJP Candidates: கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை போட்டியிட்ட அரவக்குறிச்சி தொகுதி இந்த முறை பாஜகவிற்கு ஒதுக்கப்படவில்லை.

தொகுதி மாறும் பாஜக நட்சத்திரங்கள்..

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோர் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் வரும் மார்ச் 30 தேதி தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாகவே, அதிமுக தலைமையிலான கூட்டணியில், எந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என அனைத்து முக்கிய தொகுதிப் பங்கீட்டு பணிகளும் இறுதி செய்யப்பட்டுவிட்டன. இனி அந்தந்த கட்சி சார்பில் வேட்பாளர்களை அறிவிக்க வேண்டிய வேலை மட்டுமே மிச்சமாக உள்ளது. அந்த வகையில் பாஜகவிற்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்ற பாஜகவின் முக்கிய முகங்களான, நயினார் நாகேந்திரனின் திருநெல்வேலி, வானதி ஸ்ரீனிவாசனின் கோவை மேற்கு ஆகிய தொகுதிகள் இந்த முறை அக்கட்சிக்கு ஒதுக்கப்படவில்லை. இதுபோக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிட்ட அரவக்குறிச்சி, மத்திய அமைச்சர் எல். முருகன் போட்டியிட்ட தாராபுரம் ஆகிய தொகுதிகளும் இந்த முறை பாஜகவிற்கு ஒதுக்கப்படவில்லை. இதனால், இவர்கள் புதிய தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

அரவக்குறிச்சி இல்லை - அண்ணாமலை எங்கே?

கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டார். நிச்சயமாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 68 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தையே பிடித்தார். சொந்த மாவட்ட தொகுதி என்பதால், இந்த முறை மீண்டும் அதே தொகுதியில் அவர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அண்மையில் இறுதி செய்யப்பட்ட கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் அரவக்குறிச்சி தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்படவில்லை. இதுபோக கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் ஒரு தொகுதி கூட பாஜகவிற்கு வழங்கப்படவில்லை. இதனால், ஒருவேளை அண்ணாமலை வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும், சொந்த மாவட்டத்தில் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது. அப்படி நடந்தால், அண்ணாமலை எங்கே போட்டியிடுவார் என்பதே தற்போது அவரது நலம் விரும்பிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கோவை வடக்கு வேட்பாளர்? - தேர்தலில் வாக் - அவுட்?

கமலாலயம் வட்டாரத்தில் இருந்து வெளியாகியுள்ள தகவலின்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோவை வடக்கு தொகுதியில் அண்ணாமலை வேட்பாளராக களமிறங்கக் கூடும் என கூறப்படுகிறது. கொங்கு பகுதியில் பாஜக வலுவான வாக்கு வங்கியை கொண்டிருப்பதால், அதிமுகவின் வாக்குகளுடன் சேர்த்து இந்தமுறை அவர் நிச்சயம் வெற்றி பெறுவார் என பாஜக தொண்டர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். ஆனால், அந்த தொகுதியை வானசி ஸ்ரீனிவாசம் விட்டுக்கொடுப்பாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

அதேநேரம், ஏற்கனவே மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கியதோடு, தற்போது சொந்த மாவட்டத்தில் போட்டியிட வாய்ப்பில்லாமல் போனதும் அண்ணாமலைக்கு அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் பார்த்த உள்ளடி வேலை தான் இதற்கு காரணம் எனவும் சிலர் குற்றம்சாட்டுகின்றனர். அதன் காரணமாக, இந்த தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணித்து, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மாநிலம் முழுவதும் பரப்புரை மட்டும் மேற்கொள்ளும் ஆலோசனையிலும் அண்ணாமலை இருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Mahindra BE 6 Formula E Edition: மிரட்டும் மாஸான லுக்.! BE 6 ஃபார்முலா E பதிப்பை களமிறக்கும் மஹிந்திரா; அறிமுகம் எப்போது.? அம்சங்கள் என்ன.?
மிரட்டும் மாஸான லுக்.! BE 6 ஃபார்முலா E பதிப்பை களமிறக்கும் மஹிந்திரா; அறிமுகம் எப்போது.? அம்சங்கள் என்ன.?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
Brezza vs Venue EMI Comparison: மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
Embed widget