மேலும் அறிய

BJP Candidate List: அண்ணாமலையை ஏமாற்றிய நயினார்? பாஜகவின் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் யார்? முழு விவரம் இதோ

TN Election 2026 BJP Constituency: அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள 27 தொகுதிகளில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.

TN Election 2026 BJP Constituency: அதிமுக கூட்டணியில் சென்னை மற்றும் கோவையில் பாஜகவிற்கு ஒரே ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

பாஜகவிற்கு ஒதுக்கிய தொகுதிகள்:

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜகவிற்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. குறிப்பிடுத்தக்க வகையில் டெல்லியின் கடும் அழுத்தத்திற்கு மத்தியிலும், அந்த கட்சி வலுவாக உள்ளதாக கூறப்படும் சென்னை மற்றும் கோவை மாவட்டங்களில் தலா ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மாநில தலைவரான நயினார் நாகேந்திரன் கடந்த முறை போட்டியிட்டு வென்ற திருநெல்வேலி தொகுதியும் பாஜகவிற்கு வழங்கப்படவில்லை. முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரைத் தவிர, இந்து மதத்திற்கான முக்கியத்துவம் வாய்ந்த கோயில்களை கொண்ட வேறு எந்தத் தொகுதியும் கூட பாஜகவுக்கு ஒதுக்கப்படவில்லை.  கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக வென்ற 4 தொகுதிகளில், 2 தொகுதிகளில் மட்டுமே மீண்டும் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பாஜக சார்பில் அறிவிக்கப்பட உள்ள வேட்பாளர்களின் உத்தேச விவரங்கள் வெளியாகியுள்ளன.

27 தொகுதிகள் - பாஜகவின் வேட்பாளர்கள் யார்?

கடந்த முறை திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு வென்ற பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முதல்முறையாக சாத்தூர் தொகுதியில் போட்டியிடுவார் என கூறப்படுகிறது.  அவரை தொடர்ந்து அண்ணாமலை போட்டியிடுவதற்கு ஏதுவாக பல்லடம் தொகுதியை ஒதுக்க அதிமுக முன்வந்ததாம். ஆனால், கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட கோயம்புத்தூர் தொகுதிக்கு உட்பட்ட சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையத்தை அவர் தேர்வு செய்தாராம். ஆனால், இரண்டு தொகுதிகளுமே பாஜகவிற்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர் இந்த தேர்தலில் போட்டியிடாமல் போக வாய்ப்புள்ளதாகவும், நயினார் திட்டமிட்டே உள்ளடி வேலை பார்த்ததாகவும் கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, திருப்பூர் தெற்கு தொகுதியில் இந்து முன்னணி கட்சியின் தலைவர் காடேஷ்வர சுப்ரமணியத்தின் மகனான காடேஷ்வர தங்கராஜ் களமிறக்கப்பட உள்ளாராம்.

எல்.முருகன், வானதி ஸ்ரீனிவாசனுக்கான தொகுதிகள்?

அவினாசி தனி தொகுதியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகனையும், மொடக்குறிச்சியில் சிட்டிங் எம்.எல்.ஏவான சரஸ்வதியின் உறவினரையும் வேட்பாளராக களமிறக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறதாம். கடந்தமுறை கோவை தெற்கில் வென்ற வானதி ஸ்ரீனிவாசன் இந்த முறை கோவை வடக்கில் களமிறங்க உள்ளாராம். சென்னையில் கடந்தமுறை இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட பாஜகவிற்கு இந்த முறை மயிலாப்பூர் மட்டுமே ஒற்றை தொகுதியாக ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு தமிழிசை சவுந்தரராஜன் களமிறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கடுமையாக களப்பணியாற்றி வந்த வினோஜ் பி செல்வம் மற்றும் எஸ்.ஜி. சூர்யா ஆகியோருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

தெற்கை குறிவைத்த பாஜக:

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், விளவங்கோடு, குளச்சல் மற்றும் பத்மநாதபுரம் ஆகிய தொகுதிகளை பாஜக கைப்பற்றியுள்ளது. இதில் குளச்சல் மற்றும் விளவங்கோடு தொகுதிகளில் நேரடியாக காங்கிரஸை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. அதன்படி, விளவங்கோட்டில் விஜயதாரணிக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என தெரிகிறது. வாசுதேவநல்லூரில் ஆனந்தன் அய்யாசாமி வேட்பாளராவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாம். நாகர்கோவிலில் சிட்டிங் எம்.எல்.ஏ எம்.ஆர். காந்தி அல்லது மீனாதேவ், தஞ்சாவூரில் கருப்பு முருகானந்தம் மற்றும் ராமநாதபுரத்தில் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் வேட்பாளர்களாக பரிசீலிக்கப்பட்டு வருகின்றனராம்.

பாஜக உத்தேச வாக்காளர் பட்டியல்..

தொகுதி எண் தொகுதி உத்தேச வேட்பாளர்
1 மயிலாப்பூர் தமிழிசை சவுந்தரராஜன்
2 தளி நரேந்திரன்/அமர்பிரசாத் ரெட்டி
3 மொடக்குறிச்சி சிட்டிங் எம்.எல்.ஏ., சரஸ்வதியின் மருமகள் காயத்ரி
4 உதகமண்டலம்  -
5 அவிநாசி எல். முருகன்
6 திருப்பூர் தெற்கு காடேஷ்வர தங்கராஜ்
7 கோவை வடக்கு வானதி ஸ்ரீனிவாசன்
8 கந்தர்வகோட்டை புரட்சி கவிதாசன்
9 புதுக்கோட்டை -
10 திருப்பத்தூர் ராமேஸ்வரன்
11 மதுரை தெற்கு ராம்ஸ்ரீனிவாசன்
12 சாத்தூர் நயினார் நாகேந்திரன்
13 திருச்செந்தூர் கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன்
14 வாசுதேவநல்லூர் ஆனந்தன் அய்யாசாமி
15 ராதாபுரம் -
16 நாகர்கோவில் எம்.ஆர். காந்தி/மீனாதேவ்
17 விளவங்கோடு விஜயதாரணி
18 ஆவடி அஸ்வின்/பாஸ்கர்
19 திருவண்ணாமலை அஸ்வத்தாமன்
20 தஞ்சாவூர் கருப்பு முருகானந்தம்
21 திருவாரூர் கோவி சந்துரு/சந்திரசேகர்
22 அறந்தாங்கி லண்டன் ராமசாமி/கவிதா ஸ்ரீகாந்த்
23 மானாமதுரை பொன் பாலகணபதி
24 ராமநாதபுரம் பொன். ராதாகிருஷ்ணன்
25 குளச்சல் தர்மராஜ்
26 பதம்நாபபுரம் பவானி எட்வின் ஜோஸ்/உன்னி கிருஷ்ணன்
27 ராசிபுரம் -

இதுபோக மற்ற தொகுதிகளில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறதாம். ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ இறுதிவேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
"எஸ்.ஐ மேலேயே கைய வச்சியா?" - பளார் விட்ட தஞ்சை இளைஞரின் கதி என்ன? என்னென்ன பிரிவுகளில் கேஸ்?
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
SUV Rivals: எஸ்யுவி தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
SUV தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Embed widget