CBSE Result 2023: விரைவில் வெளியாகும் சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள்; பார்ப்பது எப்படி?
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதை எப்படிப் பார்க்கலாம் என்று காணலாம்.
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதை எப்படிப் பார்க்கலாம் என்று காணலாம்.
சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ஆம் தேதி முடிந்தன. அதேபோல 10 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி மார்ச் 21 அன்று முடிந்தது. இந்த நிலையில் அவர்களுக்குத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10, 12ஆம் வகுப்புக்கான தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரையிலும், சில தேர்வுகள் 1.30 மணி வரையிலும் நடைபெற்றன. செய்முறை தேர்வுகள் ஜனவரி 2 தொடங்கி நடைபெற்றன.
ஒரே நாளில் தொடங்கிய தேர்வுகள்
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ஓவியம் உள்ளிட்ட கலை படிப்புடன் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 24ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட மொழிப் பாடங்கள் நடைபெற்றன. 27ஆம் தேதி ஆங்கிலத் தேர்வு நடைபெற்றது. மார்ச் 1, 2ஆம் தேதிகளிலும் பல்வேறு மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடந்தது.
மார்ச் 4ஆம் தேதி அறிவியல் பாடத் தேர்வும் மார்ச் 15-ல் சமூக அறிவியல் தேர்வும் நடந்தன. மார்ச் 21ஆம் தேதி கணிதப் பாடத்துடன் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முடிவடைந்தன.
பிப்ரவரி 15ஆம் தேதி தொழில் முனைவோர் பாடத்துடன் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு தொடங்கியது. அதையடுத்து, பயோ டெக்னாலஜி, பொறியியல் வரைபடம், மின்னணு தொழில்நுட்பம், சுருக்கெழுத்து, உணவு ஊட்டச்சத்து உள்ளிட்ட தேர்வுகள் பிப்ரவரி 16ஆம் தேதி நடைபெற்றன. ஏப்ரல் 5ஆம் தேதி உளவியல் பாடத்துடன் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிந்தது.
இந்த நிலையில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதை எப்படிப் பார்க்கலாம் என்று காணலாம்.
காண்பது எப்படி?
* மாணவர்கள் cbse.gov.in, results.cbse.nic.in ஆகிய இணைப்பை க்ளிக் செய்யவும்.
* அதில் தோன்றும் ரிசல்ட் பக்கத்துக்கான இணைப்பை க்ளிக் செய்யவும்.
* நுழைவுச் சீட்டு, பிற தகவல்களைக் கையில் தயாராக வைத்துக் கொள்ளவும்.
38 லட்சம் பேர் எழுதிய தேர்வு
இந்தத் தேர்வை சுமார் 38 லட்சம் மாணவர்கள் எழுதினர். 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை 21 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் எழுதிய நிலையில், 12ஆம் வகுப்புத் தேர்வை 16 லட்சத்துக்கும் மாணவர்கள் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.