CBSE: சி.பி.எஸ்.இ. 9ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் டேட்டிங் தலைப்புகள் - குவியும் ஆதரவும், எதிர்ப்பும்!
சி.பி.எஸ்.இ. 9ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ரிலேசன்ஷிப், கேட்ஃபிஷிங், பேய்கள் குறித்து மிகவும் எளிமையான முறையில் விளக்கியுள்ளது இணையத்தில் உரையாடலை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வேல்யூ எஜூகேஷன் புத்தகங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் டேட்டிங் மற்றும் உறவுகள் மற்றும் பேய், கேட்ஃபிஷிங் மற்றும் சைபர்புல்லிங் போன்ற அத்தியாயங்கள் இடம் பெற்றுள்ளது. இந்த புத்தகம் தான் கையாண்டுள்ள தலைப்புகளை மற்றும் "சிறப்பு" நட்பு போன்ற தலைப்புகளையும் உள்ளடக்கியது மற்றும் எளிய எடுத்துக்காட்டுகள் மூலம் விதிமுறைகளை விளக்கியுள்ளது.
டேட்டிங் விதிமுறைகள்:
ட்விட்டரில் ஒருவர் தனது கருத்தினை புத்தகத்தில் உள்ள பாடத்தினை புகைப்படம் எடுத்து மிகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். இதற்கு, இளம் வயது என்பது உணர்ச்சிகளால் நம் மனதையும் இதயத்தையும் அடிக்கடி குழப்பும் பருவம். இப்படியான பருவத்தில் மாணவர்களுக்கு வெவ்வேறு டேட்டிங் விதிமுறைகள் குறித்த வழிகாட்டுதலை வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது என கூறியுள்ளார்.
times are changing. people start dating from a very young age nowadays, it's amazing if the system accepts this and includes topics like these in the curriculum. helping kids understand this complex dynamics is far better than how dating was treated back in our days.
— Debarati (@DebaratiJee) January 30, 2024
I just hope… https://t.co/ZUsZtDHMCJ
இதற்கு வரவேற்பு தெரிவித்த மற்றொரு பயனர், "காலம் மாறிக்கொண்டிருக்கிறது. இப்போதெல்லாம் மக்கள் மிக இளம் வயதிலிருந்தே டேட்டிங் செய்யத் தொடங்குகிறார்கள், கணினி உலகத்தில் இதை ஏற்றுக்கொண்டு பாடத்திட்டத்தில் இதுபோன்ற தலைப்புகளைச் சேர்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. இந்த சிக்கலான இயக்கவியலைப் புரிந்துகொள்ள குழந்தைகளுக்கு உதவுவது நம் நாட்களில் டேட்டிங் எவ்வாறு நடத்தப்பட்டது என்பதை விட மிகவும் சிறந்தது என பாராட்டித் தள்ளியுள்ளார்.