(Source: ECI/ABP News/ABP Majha)
CBSE Board 12th Result 2020: சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்: திருவனந்தபுரம் அதிக தேர்ச்சி சதவிகிதம்!
அதிகபட்சமாக திருவனந்தபுரம் மண்டலம் 97.67 பாஸ் சதவிகிதத்தை பதிவு செய்துள்ளது. அடுத்ததாக பாஸ் சதவிகிதத் தரவரிசைப்படி பெங்களூரு மண்டலம் 97.05 சதவிகிதமும் சென்னை 96.17 சதவிகிதமும் பெற்றுள்ளன.
2020ம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.கொரோனா பேரிடருக்கு இடையே வெளியாகியுள்ள இந்த வருடத்துக்கான முடிவுகளில் ஒட்டுமொத்த பாஸ் சதவிகிதம் 88.78 சதவிகிதம். அதிகபட்சமாக திருவனந்தபுரம் மண்டலம் 97.67 பாஸ் சதவிகிதத்தை பதிவு செய்துள்ளது. அடுத்ததாக பாஸ் சதவிகிதத் தரவரிசைப்படி பெங்களூரு மண்டலம் 97.05 சதவிகிதமும் சென்னை 96.17 சதவிகிதமும் டெல்லி மேற்கு மண்டலம் 94.61 சதவிகிதமும் டெல்லி கிழக்கு மண்டலம் 94.24 சதவிகிதமும் பெற்றுள்ளன.
அடுத்ததாக பன்சுக்லா 92.52 சதவிகிதமும் சண்டிகர் மண்டலம் 92.04 சதவிகிதமும் புவனேஸ்வர் மண்டலம் 91.46 சதவிகிதமும் போபால் 90.95 சதவிகிதமும் புனே மண்டலம் 90.24 சதவிகிதமும் பெற்றுள்ளன. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருட ஒட்டுமொத்த தேர்ச்சி சதவிகிதம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 5.38 சதவிகிதம் அதிகரித்துள்ளது. சிபிஎஸ்இ தேர்வு முடிகள் அதிகாரப்பூர்வ வலைதளத்தில்
'cbseresults.nic.in' கிடைக்கப் பெறுகின்றன.
மொத்தம் 11,92,961 பேர் தேர்வு எழுதினார்கள். 4984 மையங்களில் தேர்வு நடந்தது அதில் 13,109 பள்ளிகள் பங்கேற்றன. இதில் ஜவகர் நவோதயா வித்யாலயா அதிகபட்சமாக 98.70 பாஸ் சதவிகிதமும் கேந்திரிய வித்யாலயா 98.62 சதவிகிதமும் பெற்றுள்ளன்.
Students, keep your Roll Number handy for quick reference.
— CBSE HQ (@cbseindia29) July 30, 2021
Use the Roll Number Finder facility onhttps://t.co/PFYbc0MEiK
Results can also be downloaded from DigiLocker#ExcitementLevel💯#CBSEResults #CBSE pic.twitter.com/soXay0aijK
மத்திய திபெத்திய பள்ளிகள் நிர்வாகம் 98.23 பாஸ் சதவிகிதமும் அரசுப் பள்ளிகள் 94.94 தேர்ச்சி சதவிகிதமும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 91.56 சதவிகிதமும் தனியார் பள்ளிகள் 88.22 சதவிகிதமும் பெற்றுள்ளன.
எதிர்பார்க்கப்பட்ட தேதியை விட இரண்டு நாட்களுக்கு முன்னதாக தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் விரைவில் வெளியிடப்பட உள்ளன.
முன்னதாக, 12ம் வகுப்பு தேர்வு மதிப்பெண் பட்டியல் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியானது. cbseresults.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் மாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு சிபிஎஸ்சி 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்வதாக மத்திய அரசு முன்னதாக அறிவித்தது.
பொது தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீட்டு முறை ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, 30 சதவிகிதம் மதிப்பெண்கள் 10 வகுப்பில் மாணவ மாணவிகள் சிறந்த 3 பாடங்களில் இருந்தும், 30 சதவிகிதம் மதிப்பெண்கள் 11 வகுப்பில் இறுதித் தேர்வு மதிப்பெண்களிலிருந்தும், 40 சதவிகிதம் மதிப்பெண்கள் 12 வகுப்பில் மாணவர்கள் தற்போது வரை எழுதிய பாடத் தேர்வுகள், செய்முறை தேர்வுகள் ஆகியவற்றிலிருந்தும் கணக்கிடப்படும் (30:30:40).
மேலும் இந்த முறையில் ஏதேனும் தவறுகள் இருந்தால் மாணவர்கள் அது தொடர்பாக முறையிடலாம். மேலும், இம்மதிப்பீட்டு முறையில் கணக்கிடப்படும் மதிப்பெண்கள் குறைவாக உள்ளதாகக் கருதும் மாணவர்களுக்கு, அவர்கள் விரும்பினால் 12 ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வெழுத வாய்ப்பு கடந்த ஆண்டைப் போலவே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த ஆண்டு சிபிஎஸ்இ தேர்வு ரத்து செய்யப்பட்டு, மதிப்பீடு திட்டத்தின் அடிப்படையில் மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. 2019 சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளுடன் ஒப்பிடும் போது, கடந்தாண்டு தேர்வில், 95% மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 118.6% ஆக அதிகரித்தது. மேலும், கடந்தாண்டு 90% மற்றும் அதற்கு மேல் பெற்றவர்களின் எண்ணிக்கை 65 சதவிகிதமாக அதிகரித்தது.