(Source: Poll of Polls)
12th CBSE Result Merit List: பிளஸ் 2 முடிவுகள்; மெரிட் பட்டியலை வெளியிடாத சிபிஎஸ்இ- என்ன காரணம்?
ஆண்டுதோறும் மெரிட் பட்டியலை சிபிஎஸ்இ வெளியிடும் நிலையில், இந்த முறை அப்படி எந்தப் பட்டியலும் வெளியிடப்படவில்லை.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. ஆண்டுதோறும் மெரிட் பட்டியலை சிபிஎஸ்இ வெளியிடும் நிலையில், இந்த முறை அப்படி எந்தப் பட்டியலும் வெளியிடப்படவில்லை. மாணவர்கள் மத்தியில் ஆரோக்கியமில்லாத போட்டியைத் தவிர்க்கும் வகையில் மெரிட் பட்டியல் வெளியிடப்படவில்லை என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இதில் மாணவ- மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 5 சதவீதத்துக்கு மேல் குறைந்து 87.33 ஆக உள்ளது. அதேபோல சென்னை மண்டலத்தில் 97.4 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று, 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளனர்.
17 லட்சம் பேர் விண்ணப்பித்த தேர்வு
இந்தத் தேர்வை 16 லட்சத்து 96 ஆயிரத்து 349 மாணவர்கள் எழுத விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்காக 15,079 பள்ளிகளில் 6714 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு மையத்துக்கும் தனித்தனியாக தேர்வு மையக் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். 115 பாடங்களுக்குத் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் 16,60,511 மாணவர்கள் தேர்வை எழுதினர். இதில் 14, 50,174 மாணவர்கள் தேர்வான நிலையில் தேர்ச்சி விகிதம் 87.33 ஆகக் குறைந்துள்ளது.
இந்த நிலையில், ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகபட்சமாக 97.51 சதவீதமாக உள்ளது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தேர்ச்சி வீதம் 92.51 ஆக உள்ளது.
ஆரோக்கியமில்லாத போட்டியைத் தவிர்க்கவே
இந்த நிலையில், ஆண்டுதோறும் மெரிட் பட்டியலை வெளியிடும் சிபிஎஸ்இ இந்த முறை எந்தப் பட்டியலையும் வெளியிடவில்லை. மாணவர்கள் மத்தியில் ஆரோக்கியமில்லாத போட்டியைத் தவிர்க்கும் வகையில் மெரிட் பட்டியல் வெளியிடப்படவில்லை என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சிபிஎஸ்இ அதிகாரிகள் கூறும்போது, ''மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களை முதல், இரண்டாவது, மூன்றாவது என்று வகைப்படுத்துவதையும் மெரிட் பட்டியலை வெளியிடுவதையும் நிறுத்திவைக்க, கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் பல்வேறு பாடங்களில் அதிகபட்ச மதிப்பெண்கள் பெறும் 0.1 சதவீத மாணவர்களின் மெரிட் பட்டியல் மட்டும் வெளியிடப்படும்'' என்று தெரிவித்தனர்.
தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?
மாணவர்களும் பெற்றோர்களும் https://www.cbse.gov.in/ என்ற இணையதளத்தை க்ளிக் செய்து தேர்வு முடிவுகளை பார்க்கலாம்.
அதேபோல மாணவர்கள் https://testservices.nic.in/cbseresults/class_xii_2023/ClassTwelfth_c_2023.htm என்ற இணைப்பை க்ளிக் செய்தும் தேர்வு முடிவுகளைக் காணலாம். அதில் மாணவர்களின் பதிவு எண், பள்ளி எண், நுழைவுச் சீட்டு எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து, 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளைக் காணலாம்.
https://cnr.nic.in/cbseresults/class_xii_2023/ClassTwelfth_c_2023.htm
https://cbseresults.nic.in/class_xii_2023/ClassTwelfth_c_2023.htm
தேர்வர்கள் மேற்குறிப்பிட்ட இணைய தள முகவரிகளை க்ளிக் செய்தும், 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளைக் காணலாம்.
இதையும் வாசிக்கலாம்: Free Coaching: மக்களே... ரயில்வே, வங்கி உள்ளிட்ட மத்திய அரசுத் தேர்வுகள்; 100 நாள் இலவச சிறப்புப் பயிற்சி- பங்கேற்பது எப்படி?